Enable Javscript for better performance
ஆந்திராவில் பரபரப்பு: பூஜையின் போது லிங்கத்தின் மேல் விழுந்து உயிரிழந்த அர்ச்சகர்- Dinamani

சுடச்சுட

    

    ஆந்திராவில் பரபரப்பு: பூஜையின் போது லிங்கத்தின் மேல் விழுந்து உயிரிழந்த அர்ச்சகர் 

    Published on : 16th June 2018 04:26 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    priest

     

    ஆந்திராவில் உள்ள சிவன் கோயில் ஒன்றில் பூஜையின் போது அர்ச்சகர் சிவலிங்கத்தின் மீது விழுந்து உயிரிழந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது. 

    ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம், பீமாவரத்தில் உள்ள சோமேஸ்வரர் ஜனார்த்தனன் கோயிலில் தலைமை அர்ச்சகராகப் பணிபுரிந்து வந்தவர் வெங்கட ராமாராவ். 

    இவர் வழக்கம் போல் நேற்று காலை கோயிலைத் திறந்து சிவ லிங்கத்திற்குப் பூஜை செய்துள்ளார். அப்போது திடீரென தடுமாறி சிவலிங்கத்தின் மீது விழுந்துள்ளார். 

    பதறிப்போன சக அர்ச்சகர்கள் அவரை தூக்கி நிறுத்த முயற்சித்த போதும், மீண்டும் லிங்கத்தின் மீது விழுந்துள்ளார். இதையடுத்து, அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது அர்ச்சகர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

    இந்தச் சம்பவம் கோயிலில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானதால் சமூக வலைத்தளங்களிலும் வேகமாகப் பரவி வருகின்றது. 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai