Enable Javscript for better performance
மோகனூர் ஸ்ரீகல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோயிலில் வரும் 21-ல் தீர்த்தவாரி- Dinamani

சுடச்சுட

    

    மோகனூர் ஸ்ரீகல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோயிலில் வரும் 21-ல் தீர்த்தவாரி

    By DIN  |   Published on : 16th June 2018 12:49 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

     

    நாமக்கல் மாவட்டம், மோகனூரில் அமைந்துள்ள ஸ்ரீகல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாளுக்கு நாட்டின் நலன் கருதியும் பஞ்சம் தவிர்க்க வேண்டியும் காலத்தில் பருவ மழை பெய்ய வேண்டியும் விவசாயம், வியாபாரம் மற்றும் தொழில்கள் மேன்மையும் வளமும் பெறவேண்டியும் பக்தர்களின் விருப்பங்கள் நிறைவேறவும் வேண்டி, பிரம்மோற்சவ பெரு விழா தொடங்கியது.

    தினமும் அன்னவாகனம், பல்லக்கு, சிம்ம வாகனம், அனுமந்த வாகனம் நடைபெறும். மேலும் ஜூன் 15 - கருட சேவையும், ஜூன் 18 மாலை திருக்கல்யாண உற்சவமும் தொடர்ந்து, ஜூன் 20 ஆம் தேதி காலை 9.00 மணிக்கு நூதன திருத்தேர் உற்சவமும் நடைபெறும். ஜூன் 21- தீர்த்தவாரி உற்சவமும் ஜூன் 22 -வசந்த உற்சவமும் நடைபெறுகின்றன.

    தொடர்புக்கு: 96775 00586 / 94429 57143.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai