Enable Javscript for better performance
அருணாசலேஸ்வரர் கோயிலில் மார்ச் 30-ல் பங்குனி உத்திர திருகல்யாண வைபவம்- Dinamani

சுடச்சுட

    

    அருணாசலேஸ்வரர் கோயிலில் மார்ச் 30-ல் பங்குனி உத்திர திருக்கல்யாண வைபவம் 

    By DIN  |   Published on : 24th March 2018 12:32 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    annamalai

     

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண வைபவம் வரும் 30-ம் நடைபெற உள்ளது. 

    பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திர விழா விமரிசையாக நடைபெறும் அந்தவகையில் இந்தாண்டுக்கான பங்குனி உற்சவம் விமரிசையாக நடைபெற்று வருகின்றது. 

    இதன் முக்கிய நிகழ்வான பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் வரும் 30-ம் தேதி நிகழ உள்ளது. அன்று மாலை கொடிமரம் முன்புறம் சுவாமி எழுந்தருளி மாலை மாற்றும் வைபவம் நடைபெறும். இரவு 11 மணிக்கு கல்யாண மண்டபத்தில் உற்சவம் நடைபெறும். 

    தொடர்ந்து நள்ளிரவு 12.00 மணியளவில் தங்க ரிஷப வாகனத்தில் சுவாமி மாட வீதியுலா நடைபெறும். ஏப்ரல் 3-ல் ஊஞ்சல் உற்சவமும், 4-ம் தேதி பாலிகைவிடுதல் நிகழ்ச்சியும் நடைபெறும். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai