Enable Javscript for better performance
கள்ளழகர் வைகை ஆற்றில் இறக்கும் பகுதியில் சீரமைப்பு பணிகள் தீவிரம்- Dinamani

சுடச்சுட

    

    கள்ளழகர் வைகை ஆற்றில் இறக்கும் பகுதியில் சீரமைப்பு பணிகள் தீவிரம் 

    By DIN  |   Published on : 24th March 2018 12:20 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    kallazhagar3

     

    மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் வைகை ஆற்றில் இறக்கும் பகுதியில் தூய்மைப்படுத்தும் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றது. 

    மீனாட்சி அம்மன் கோவில், அழகர் கோவில் சித்திரைத் திருவிழா அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. சித்திரை திருவிழாவின் போது லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்ளும் கள்ளழகர் ஆழ்வார்புரம் வைகை ஆற்றில் இறங்கும் வைபவ நிகழ்ச்சி நடைபெறும். 

    வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் பகுதியில் மாநகராட்சியின் சார்பில் 24 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சுவாமி இறங்குவதற்கு வசதியாக உருளை குழாய்கள் அமைத்து சாய்வு தளம் அமைத்தல் பணி, தண்ணீர் நிரப்புவதற்கான தொட்டி அமைத்தல் பணி உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளை கமிஷனர் அனீஷ் சேகர் நேரில் சென்று பார்வையிட்டார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai