Enable Javscript for better performance
உத்திர நட்சத்திர அதிதேவதைக்கு அபிஷேகம்- Dinamani

சுடச்சுட

    
    athi-devathi

    சிறப்பு அலங்காரத்தில் உத்திர நட்சத்திர அதிதேவதை.

    காஞ்சிபுரத்தை அடுத்த கூழமந்தல் 27 நட்சத்திர விருட்ச விநாயகர் கோயிலில் உத்திர நட்சத்திர அதிதேவதைக்கு வெள்ளிக்கிழமை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
    காஞ்சிபுரம் - வந்தவாசி நெடுஞ்சாலையில் உள்ள உக்கம்பெரும்பாக்கம் கிராமம், கூழமந்தல் ஏரிக்கரையில் 27 நட்சத்திர அதிதேவதைகள், விருட்ச விநாயகர் கோயில் உள்ளது. 
    இக்கோயிலில், வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு, கைகளில் சங்கு சக்கரம் தாங்கி சிவந்த திருமேனியுடன் அருள்பாளிக்கும் உத்திர நட்சத்திர அதிதேவதையான அதிமா பகவானுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம், தீபாராதனைகள் நடத்தப்பட்டன. முன்னதாக, நட்சத்திர விருட்ச விநாயகர், இதர அதிதேவதைகளுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
    இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai