Enable Javscript for better performance
காமாட்சியம்மன் கோயிலில் வசந்த நவராத்திரி தெப்போற்சவம்- Dinamani

சுடச்சுட

    

    காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் வசந்த நவராத்திரி தெப்போற்சவம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
    கோடைக்காலம் தொடங்குவதையொட்டி, காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் வசந்த நவராத்திரி உற்சவம் நடைபெற்று வருகிறது. 
    இந்த உற்சவத்தின் ஒரு பகுதியாக காமாட்சியம்மனை குளிர்விக்கும் மூன்று நாள் தெப்பல் உற்சவம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதன் நிறைவு நாளான வியாழக்கிழமை இரவு காமாட்சியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
    தொடர்ந்து, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, கோயில் வளாகத்தில் அம்மன் வலம் வந்தார். பின்பு, கோயில் வளாக திருக்குளத்தில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பலில் காமாட்சியம்மன் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சியளித்தார். நிறைவு நாள் என்பதால், மங்கள வாத்தியங்கள் முழங்க விழா விமரிசையாக நடைபெற்றது. இதில், காஞ்சிபுரம், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து திரளான பொதுமக்கள் அம்மனை தரிசனம் செய்தனர். 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai