Enable Javscript for better performance
சக்தி விநாயகர் கோயிலில் மகா கணபதி ஹோமம்- Dinamani

சுடச்சுட

    
    homam

    மேலமையூர் சக்தி விநாயகர் கோயிலில் நடைபெற்ற மகா கணபதி ஹோமம்.

    செங்கல்பட்டை அடுத்த மேலமையூர் சக்தி நகரில் உள்ள சக்தி விநாயகர் கோயிலில் சிறப்பு மகா கணபதி ஹோமம் வியாழக்கிழமை நடைபெற்றது.
    மகா ஹோம பூஜையையொட்டி, விநாயகருக்கு சிறப்பு அபிஷேக- அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. 
    இதில், நாடு செழிப்புடன் இருக்கவும், இயற்கை வளங்களை காத்திடவும், தீயசக்தி அழிந்து, நல்ல சக்தி நாட்டில் உருவாகவும், நாட்டு மக்கள் நோய் நொடியின்றி சகல செல்வங்களுடன் சுபிட்சமாக வாழவும், மழை வேண்டியும் ஹோம பூஜைகள் நடைபெற்றது. ஹோம பூஜையில் வல்லம், மேலமையூர், சக்தி நகர், செங்கல்பட்டு மற்றும் அதைச் சுற்றியுள்ள ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
    விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினரும், சக்திநகர் பகுதி பொதுமக்களும் செய்திருந்தனர். 



     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai