Enable Javscript for better performance
திருவடிசூலத்தில் 108 திவ்யதேசங்களும் ஒரே இடத்தில்!- Dinamani

சுடச்சுட

  
  perumal

  பரந்தாமன் ஸ்ரீமன் நாராயணன் தர்மத்தை ரக்ஷிப்பதற்காக யுகங்கள் தோறும் அவ்வவ்போது பல அவதாரங்களை எடுத்தருள்கின்றார். 

  யதா யதாஹி தர்மஸ்ய க்லானிர்பவதி பாரத 
  அப்யுத்தானமதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யகம்!

  பரித்ராணாய ஸாதூனாம் விநாஷாய ச துஷ்க்ருதாம்
  தர்மசம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே கே - பகவத்கீதை

  விஷ்ணும் ஜிஷ்ணும் மஹாவிஷ்ணும் ப்ரபவிஷ்ணும் மஹேஸ்வரம்||
  அனேகரூப தைத்யாம்தம் னமாமி புருஷோத்தமம் - விஷ்ணுஸஹசரநாமம் 

  எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனை ருத்திரனும், ப்ரஹ்மனும், பல தேவர்களும், கந்தர்வர்களும், ஞானிகளும், யோகிகளும், ஆழ்வார்களும், சக்ரவர்த்திகளும், மன்னர்களும் பிராத்தனை செய்யும் தருணம் இந்த மண் உலகினில் அவனுடைய பிரபாவத்தினை வெளிப்படுத்தி அருள்பாலிக்கின்றார். 

  இப்படி எம்பெருமானின் தரிசனம் பெற்றவர்கள் ஆங்காங்கே தரிசனம் கண்ட இடத்திலேயே ஆலயம் அமைத்து எம்பெருமானை பூஜித்தார்கள். அனந்த மூர்த்தியான இறைவன் நாராயணின் மீது அளவற்ற பக்தி கொண்டு அவன் திருவடியை அடைந்த ஆழ்வார்கள் பன்னிருவர். அவர்கள் தீந்தமிழால் பாடிய திவ்யபிரபந்தம் என்னும் பதிகங்களில் பாடியுள்ள திருத்தலங்களே திவ்ய தேசங்கள் ஆகும். 

  சோழநாட்டில் 40, நடுநாட்டில் 2, தொண்டை நாட்டில் 22, மலைநாட்டில் 13, பாண்டிய நாட்டில் 18, வட நாட்டில் 11 ஆக மொத்தம் 106 திவ்யதேசங்கள் இந்த நிலஉலகில் உள்ளன. பரந்தாமன் வசிக்கும் இடங்களான பாற்கடல் மற்றும் பரமபதம் ஆகிய இரண்டு திவ்ய தேசங்களுடன் மொத்தம் 108 திவ்ய தேசங்கள் ஆகும். 

  எம்பெருமான் ராகவானாகவும், நரசிம்மராகவும், வராகனாகவும், மச்சமாகவும், வாமன திருவிக்ரமனாகவும், ராமனாகவும், கிருஷ்ணனாகவும் மற்றும் பல அவதாரங்களின் ரூபங்களாக 108 திவ்ய தேசங்கள் தோறும் பக்தர்கள் தன்னை பாடி பரவசப்படுவதற்கே பல நிகழ்வுகளை நடத்தியுள்ளார். 

  ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு நிகழ்வு நடந்து அங்கு ஆலயம் அமைந்து, பின்பு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலங்களே 108 திவ்ய தேசங்கள் ஆகும். 

  ஒவ்வொரு காலகட்டத்தில் அமைய பெற்ற திவ்யதேசங்களை காணுவது என்பதே அரியதாய் விளங்கும் தருணத்தில், ஒரே இடத்தில் 108 திவ்யதேசங்களும் அமைய பெற்றால் எவ்வாறு இருக்கும். ஆம் திருவடிசூலம் என்னும் மகா ஆரண்ய ஷேத்ரத்தில் நிலவுலகில் 108 திவ்ய தேவங்களும் திருக்கோயில்களாக அமைய பெறவுள்ளது. மற்றும் பாற்கடல், பரமபதம் ஆகிய இரண்டு திவ்ய தேசங்களில் வசிக்கும் ஸ்ரீமன் நாரயணனின் திருக்காட்சி 21000 சாளக்ராமஸ்வரூபமாக அமைய பெறவுள்ளது. இவ்வனைத்தும் எம்பெருமானின் அத்துணை அனுகிரஹம் இருந்தாலே இது சாத்தியமாகும். அககுண யோகி புண்ணியக் கோட்டி மதுரைமுத்து ஸ்வாமிகளுக்கு மலை போல் குவிந்து கிடக்கும் சாளக்ராம குவியலாக நிதர்சன காட்சி அளித்ததால் இந்த 108 திவ்ய தேசங்கள் ஒரே இடத்தில் அமைக்கப்படுகின்றது. 

  நிலஉலகின் 106 திவ்யதேசங்களில் ஸம்ப்ரோக்ஷணத்தை நம்மால் அந்த காலத்திற்கு சென்று காண பெறுவது சாத்தியமா? அவ்வாறு இருக்க இங்கு திருவடிசூலத்தில் 106 திவ்யதேசங்களுக்கு ஒரே நேரத்தில் ஸம்ப்ரோக்ஷணம் நடைபெற உள்ளது என்றால் இது மனித பிரயத்தனத்துக்கு அப்பாற்பட்டது. இறைவனுடைய பிரயத்தனத்துக்கு மட்டுமே உட்பட்டது ஆகும். 

  108 திவ்யதேசங்கள் உலக வரலாற்றில் முதன் முறையாக சர்வ சக்திகள் ஒன்றினைக்கப்பட்ட பீடமான திருவடிசூலத்தில் அமையபெறுகின்றது. அன்னை மஹாசக்தி. முதன்முதலில் இப்புண்ணிய பாரதத்தில் தன் திருவடியை பதித்த ஆரண்ய ஷேத்திரமே திருவடிசூலம் என்னும் மஹாசேத்திரம் ஆகும். 

  துவாபர யுகத்தில் அம்பாள் மகாமாயியாக அவதரித்து பகவான் ஸ்ரீ கிருஷ்ணனனுக்கு துனை நின்று துஷ்டர்களை வதம் செய்கிறாள். சத்தி லோகமாக இருக்கின்ற இந்த கலியுகத்தில் அவள் அண்ணனான பகவான் ஸ்ரீ கிருஷ்ணனிடம் அவன் கலி அவதாரம் முடித்து இவன் அவதரித்து எங்கெல்லாம் நின்று வாக்குரைத்து அருள்பாலிக்கின்றாளோ அவளுக்கு அருகாமையில் அச்சாவதாரமாக நின்று மானிடருக்கு அருள்பாலிக்க வேண்டும் என்று பெற்றுகொண்ட சத்தியத்தினால் மகாவிஷ்ணுவின் கலி அவதாரமாக இருக்ககூடிய ஸ்ரீ வாரு வெங்கடேச பெருமாள் அம்பாளின் கலியுக அவதாரமான கருமாரிக்கு நேர் பின்புறமாக அமர்ந்திருக்கிறார் திருவடிசூலத்தில். 

  அம்பாள் தக்ஷயான யாகத்தின் போது பகவான் ஸ்ரீ விஷ்ணுவின் சக்ரத்தால் 51 அவையங்களாக அறுபட்டு பூலோகத்தில் விழுந்து 51 சக்தி பீடங்கள் அமைய காரணமாகி நின்றாள். ஆக ஆங்காங்கே விழுந்த அவயங்கள் ஒன்றினைந்து ஒரே ரூபமாக விஸ்வரூபிணியாக 51 அடி உயரத்தில் அமர்ந்திருக்கிறார் திருவடிசூலத்தில்.

  மஹாமாயியும் சர்வசக்தியின் அண்ணன் என்று அழைக்கப்படும் எம்பெருமான் நாராயணன் சர்வசக்தியினுள் ஐக்கியமாகி ஒன்றினைந்து ஸ்வாமிக்கு காட்சி அளித்ததால், சக்தியின் 51 அவயங்கள் ஒன்றினைக்கப்பெற்று ஒரே பீடமாக சர்வ சக்தியாகவும் எப்பெருமான் மகா விஷ்ணுவின் 106 திவ்ய தேசங்களின் சக்திகள் ஒன்றினைக்கப்பெற்று ஒரே இடத்தில் அமையபெரும் இந்த மகா சக்தியின் பீடமே சப்த சைலஜமத்ய பீடம், திருவடிசூலம். 

  கிருஷ்ணனின் அனுகிரஹமும் கிருஷ்ணமாரியின் அனுகிரஹமும் கலியுக நாயகி கருமாரியின் அனுகிரஹமும் கலியுக நாயகன் எம்பெருமான் ஸ்ரீ வாரு வெங்கடேச பெருமாளின் அனுகிரஹமும் பெற்ற சர்வசக்தி பீடமே திருவடிசூலம்!

  ஸ்ரீ பாதாத்ரி என்கின்ற திருவடிசூலத்தில் அமையப்பெற்றுள்ள 108 திவ்ய க்ஷேத்ர நூதன ஆலயங்களின் அஷ்டபந்தன மஹா சம்ப்ரோக்ஷண வைபவம் ஏப்ரல் 5-ம் தேதி காலை 9.56-க்கு மேல் 10.26-க்குள் பல மகான்கள் சமய சான்றோர்கள், ஆன்றோர்கள் முன்னிலையில் நடைபெறுகின்றது. அன்று மாலை 4.30-க்கு திருக்கல்யாண மகோத்சவம் நடைபெறுகின்றது. பூர்வாங்க, யாகசாலை பூஜை நிகழ்ச்சிகள் ஏப்ரல் 1-ம் தேதி துவங்குகின்றது. 

  (செங்கல்பட்டு - திருப்போர் சாலையில் 15 கி.மீ தூரத்தில் உள்ளது திருவடிசூலம்)

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai