Enable Javscript for better performance
பங்குனி மாத பௌர்ணமி: திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம்- Dinamani

சுடச்சுட

    
    annamalai

    பங்குனி மாத பௌர்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் வெள்ளிக்கிழமை கிரிவலம் வந்த பக்தர்கள்.

    திருவண்ணாமலையில் பங்குனி மாத பௌர்ணமியையொட்டி, வெள்ளிக்கிழமை காலை முதல் சனிக்கிழமை காலை வரை பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.
    பௌர்ணமி நாள்களில் திருவண்ணாமலையில் உள்ள 14 கி.மீ. தொலைவிலான கிரிவலப் பாதையை வலம் வந்து ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஸ்ரீஉண்ணாமுலையம்மனை தரிசித்தால், நினைத்தது நடக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.
    இந்த நிலையில், பங்குனி மாத பௌர்ணமியையொட்டி வெள்ளிக்கிழமை இரவு 7.26 மணி முதல் சனிக்கிழமை மாலை 6.17 மணி வரை கிரிவலம் வரலாம் என்று ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் நிர்வாகம் அறிவித்திருந்தது.
    பல லட்சம் பக்தர்கள் கிரிவலம்: ஆனால், வெள்ளிக்கிழமை காலை முதலே திருவண்ணாமலையில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்தவண்ணம் இருந்தனர். கிரிவலப் பாதையில் உள்ள அஷ்டலிங்க சன்னிதிகள், ஸ்ரீஅருணாசலேஸ்வரர் சன்னிதி, ஸ்ரீஉண்ணாமுலையம்மன் சன்னிதிகளில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
    அமர்வு தரிசனம் ரத்து: கோயிலுக்கு வந்திருந்த அதிகப்படியான பக்தர்களின் வசதிக்காக, ஸ்ரீஅருணாசலேஸ்வரர் சன்னிதி, ஸ்ரீஉண்ணாமுலையம்மன் சன்னிதிகளில் அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து, சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் அமர்வு தரிசனம் ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
    9 தாற்காலிகப் பேருந்து நிலையங்கள்: கிரிவல பக்தர்களின் நலன் கருதி திருவண்ணாமலை நகரைச் சுற்றி 9 இடங்களில் தாற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்தப் பேருந்து நிலையங்களில் இருந்து தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், புதுச்சேரி மாநிலங்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. தாற்காலிகப் பேருந்து நிலையங்களில் குடிநீர், கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai