Enable Javscript for better performance
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் திருக்கல்யாணம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்- Dinamani

சுடச்சுட

    

    ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் திருக்கல்யாணம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

    Published on : 31st March 2018 12:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    sriveliputhur

    ஸ்ரீவில்லிபுத்தூரில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற ஸ்ரீஆண்டாள் திருக்கல்யாணம்.

    விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் திருக்கல்யாண உற்ஸவம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
    பதியான பகவான் ஸ்ரீவடபத்ரசாயி என்கிற திருநாமத்துடன் சயனத் திருக்கோலத்தில் உகந்து எழுந்தருளியுள்ள திருத்தலம் ஸ்ரீவில்லிபுத்தூர் திவ்ய தேசம். 
    ஆண்டுதோறும் நடைபெறும் ஸ்ரீஆண்டாள் திருக்கல்யாண மகோத்ஸ்வம், கடந்த 22-ஆம் தேதி (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12 நாள்கள் நடைபெறும் இந்த உற்ஸவத்தில் ஒவ்வொரு நாளும் சுவாமிகள் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா மற்றும் மண்டபங்களில் எழுந்தருளினர்.
    திருக்கல்யாணத்தையொட்டி, வெள்ளிக்கிழமை அதிகாலை ஸ்ரீரெங்கமன்னார்-ஸ்ரீஆண்டாள் திருத்தேர் கோரம் எழுந்தருளல் நடைபெற்று, செப்புத் தேரோட்டம் நடைபெற்றது. காலை 10 மணிக்கு ஸ்ரீஆண்டாள் கோயில் மரியாதைகளுடன் கோட்டைத்தலைவாசல் ஊர் ஸ்ரீரேணுகா தேவி கோயிலுக்கு வந்து திருக்கல்யாணப் பட்டுப் புடவை, வேஷ்டிகள், திருமாங்கல்யம் பெறுதல் நடைபெற்றது. 
    மாலையில், ஸ்ரீரெங்கமன்னார் வீதி புறப்பாடு, ஸ்ரீபெரியாழ்வார் வேதபிரான் பட்டர் சமாவர்தன தேங்காய் பெறுதல், பூர்ண கும்பத்துடன் ஸ்ரீபெரியாழ்வார் எழுந்தருளல் நடைபெற்றது. பின்னர், ஸ்ரீஆண்டாள் அங்கமணிகளுடன் புறப்படுதல் மற்றும் மாலை மாற்றுதல் நடைபெற்றது.
    இரவு ஸ்ரீஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் மு.சந்திரபிரபா முத்தையா, கோயில் தக்கார் கி.ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். 


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai