Enable Javscript for better performance
இந்த வாரம் யோகத்தை அள்ளப்போகும் ராசிக்காரர்கள் யார்?- Dinamani

சுடச்சுட

  
  prediction

   

  தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (மே 18 - மே 24) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பயன் பெறுவோம்.

  மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

  உங்கள் செயல்களில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். நண்பர்களையும் உற்றார் உறவினர்களையும் அனுசரித்து நடந்து கொள்வீர்கள். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு இது சரியான நேரம். எதிர்பார்த்த பொருளாதார வசதி ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாகவே அமையும்.   

  உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும். சிறு இடையூறுகள் தோன்றினாலும் திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த வருவாய் கிடைக்கும். இருப்பினும் புதிய முயற்சிகளைத் தள்ளி வைக்கவும். விவசாயிகளுக்கு விளைச்சல் நல்லபடியாக அமையும். சிறிய முதலீட்டில் புதிய நிலங்களை வாங்கலாம். 

  அரசியல்வாதிகளின் மக்கள் தொண்டுகளுக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கும். உங்கள் எதிரிகளின் பலம் குறையும். பொய் வழக்குகளில் இருந்து விடுபடுவீர்கள். கலைத்துறையினரைத் தேடிப் புதிய வாய்ப்புகள் வரும். சிலர் விருதுகளும் பாராட்டுகளும் பெறுவீர்கள். பெண்மணிகள் பெரியோர்களின் ஆசியுடன் திட்டங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். மாணவமணிகள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

  பரிகாரம்: அம்பாளை வழிபட்டு வரவும். 

  அனுகூலமான தினங்கள்: 18,19. 

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}

  ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

  நெருக்கடியிலிருந்து விடுபடுவீர்கள். செய்தொழிலில் கருத்தொருமித்து  ஈடுபடுவீர்கள். புதிய முயற்சிகள் கைகொடுக்கும். கடின உழைப்பினால் நல்ல வருமானத்தைப் பெறுவீர்கள். புத்திசாலித்தனமாக முதலீடுகளைச் செய்வீர்கள். வழக்குகளிலிருந்து விடுபடுவீர்கள். 

  உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளில் கவனத்துடன் ஈடுபடவும். சக ஊழியர்களை நம்பி உங்கள் வேலைகளை ஒப்படைக்க வேண்டாம். வியாபாரிகளைத் தேடி வாடிக்கையாளர்கள் வருவார்கள். வரவு செலவுகளை கவனத்துடன் செய்யவும். விவசாயிகளுக்கு விவசாயப் பணிகள் அனைத்தும் நன்றாக முடியும். விளைபொருள்களின் விற்பனையில்  நல்ல லாபம் உண்டு.  

  அரசியல்வாதிகளுக்கு சமூகத்தில் மதிப்பு உயரும். பழைய திட்டங்களைத் திறம்படச் செயல்படுத்துவீர்கள். கலைத்துறையினருக்கு ரசிகர்களின் ஆதரவு அமோகமாக இருக்கும். சக கலைஞர்களும் புதிய வாய்ப்பு கிடைக்க உதவி செய்வார்கள். 

  பெண்மணிகளுக்கு இல்லத்தில் நிம்மதியான சூழ்நிலை நிலவும். மாணவமணிகளுக்கு படிப்பில் ஆர்வம் குறையும். பொறுப்புடன் படித்தால்தான் மதிப்பெண்களைப் பெறமுடியும்.

  பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபட்டு வரவும். 

  அனுகூலமான தினங்கள்: 18,20. 

  {pagination-pagination}

  மிதுனம் (மிருகசீரிஷம்3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

  பிறருக்கு உங்களால் இயன்ற உதவிகளைச் செய்வீர்கள். உங்கள் நிர்வாகத் திறன் பளிச்சிடும். கடினமான காரியங்களையும் சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரவு நன்றாக இருக்கும். உங்களின் ரகசியங்களை எவரிடமும் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். 

  உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். மற்றவர்கள் பொறாமைப்படும் வகையில் நடந்து கொள்வீர்கள். வியாபாரிகளுக்கு பழைய கடன்கள் வசூலாகும். எடுத்த முயற்சிகள் அனைத்தும் நிறைவேறும். விவசாயிகள் போட்டியாளர்களை சாமர்த்தியத்துடன் சமாளித்து வெற்றியடைவீர்கள். கைபொருள்களுக்கு சந்தையில் நல்ல விலை கிடைக்கும்.

  அரசியல்வாதிகள் செயல்களில் வெற்றி காண்பீர்கள். கவனத்துடன் செயல்பட்டுக் கட்சிமேலிடத்தின்  பாராட்டைப் பெறுவீர்கள். கலைத்துறையினரின் கனவுகளும் திட்டங்களும் நிறைவேறும். 

  பெண்மணிகள் குடும்பத்தில் வீண் குழப்பங்களைச் சந்திக்க நேரிடும். ஆகையால் அனைவரையும் அனுசரித்து நடந்து கொள்ளவும். மாணவமணிகள் அதிக மதிப்பெண்களைப் பெறுவீர்கள். 

  பரிகாரம்:  விநாயகப் பெருமானை அருகம்புல் மாலை அணிவித்து வழிபட்டு வரவும். 

  அனுகூலமான தினங்கள்: 19,20. 

  சந்திராஷ்டமம்: இல்லை. 

  {pagination-pagination}
  கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

  நண்பர்களின் ஆலோசனைகளைப் புறக்கணிக்காமல் அவர்களுடன் சேர்ந்து புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். அவ்வப்போது தன்னம்பிக்கை குறைந்தாலும் உங்களுக்குக்கீழ் பணியாற்றுபவர்களால் நன்மைகள் அதிகரிக்கும்.  மூத்த உடன்பிறப்புகளுடன் ஒற்றுமை நீடிக்கும்.   

  உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். உங்களிடமிருந்த அவநம்பிக்கை அகலும். வியாபாரிகள் புதிய மாற்றங்களைக் காண்பீர்கள். வருமானம் பெருகும். எவருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். விவசாயிகளுக்கு விளைச்சலும் அவற்றின் விற்பனையும் அமோகமாக இருக்கும். புதிய குத்தகைகளை எடுக்க நினைப்பீர்கள். 

  அரசியல்வாதிகள் செயல்களில் வெற்றி காண்பீர்கள். பெயரும் புகழும் வளரும். கவனத்துடன் செயல்பட்டுக் கட்சி மேலிடத்தின் பாராட்டைப் பெறுவீர்கள். 

  கலைத்துறையினருக்கு புகழும் பாராட்டும் நற்பெயரும் கிடைக்கும்.  திறமைக்குத் தகுந்த பாராட்டுகளையும் பெறுவீர்கள். பெண்மணிகள் கணவரிடம் ஒற்றுமையோடு இருப்பீர்கள். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்லவும். மாணவமணிகள் கல்வியிலும் விளையாட்டிலும் வளர்ச்சி அடைவீர்கள்.

  பரிகாரம்: பைரவரை வழிபட்டு வரவும். 

  அனுகூலமான தினங்கள்: 20,21. 

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}


  சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

  நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். மற்றவர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்களை நடத்துவீர்கள்.  உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். புதிய வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள்.  

  உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். ஊதிய உயர்வு எதிர்பார்த்த அளவில் இருக்கும். வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் நன்றாக இருக்கும். அதிக கடன் வாங்கி வியாபாரத்தைப் பெருக்க நினைக்க வேண்டாம். விவசாயிகள் சலிப்பில்லாமல் உழைத்தால் பலன்களைப் பெறலாம். புதிய குத்தகை முயற்சிகளில் இறங்க வேண்டாம். 

  அரசியல்வாதிகளுக்கு கட்சியில் முக்கியப் பொறுப்புகள் கிடைக்கும். தொண்டர்களின் ஆதரவுடன் அரிய சாதனைகளைச் செய்வீர்கள். கலைத்துறையினருக்கு அனு
  கூலமான திருப்பங்கள் ஏற்படும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.  பெண்மணிகள் குடும்பத்தில் சந்தோஷத்தைக் காண்பார்கள். குழந்தைகளை ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவீர்கள். மாணவமணிகளுக்கு படிப்பில் குளறுபடியான சூழ்நிலை நிலவும்.  ஆசிரியரின் அறிவுரைப்படி நடக்கவும்.

  பரிகாரம்: துர்க்கையை வழிபட்டு வரவும். 

  அனுகூலமான தினங்கள்: 20,22.

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}


  கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

  கொடுத்த வாக்கை எப்பாடுபட்டாகிலும் காப்பாற்றி விடுவீர்கள். உங்களை மற்றவர்கள் ஏளனமாகப் பேச இடங்கொடுக்க மாட்டீர்கள். உங்கள் செயல்களைத் திட்டமிட்டுச் செய்து முடிப்பீர்கள். வெளியூர், வெளிநாட்டிலிருந்து மகிழ்ச்சிகரமான தகவல்கள் வந்து சேரும். 

  உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் ஒத்துழைப்போடு நடந்து கொள்வீர்கள். அவர்கள் பாராட்டுகளைப் பெற்று கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உங்களின் பிரதிநிதிகள் விற்பனையை பெருக்குவார்கள். விவசாயிகளின் உடல் உழைப்புக்கு இரண்டு மடங்கு லாபம் கிடைக்கும். பழைய கடன்கள் வசூலாகும்.

  அரசியல்வாதிகள் தங்கள் முயற்சிக்கேற்ற பொறுப்புகளைப் பெறுவீர்கள். திட சிந்தனையுடன் செயலாற்றி வெற்றி பெறுவீர்கள். கலைத்துறையினர் கடுமையாக உழைத்தால்தான் நற்பலன்களை அடைய முடியும். பெண்மணிகள் குடும்பத்தில் எல்லோரையும் அனுசரித்து நடந்து கொள்ளவும். ஆடம்பரச் செலவுகளைக் குறைக்கவும். மாணவமணிகள் படிப்பில் அக்கறை காட்டவும். கல்வியில் வளர்ச்சியடைவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவும்.

  பரிகாரம்: மஹாலட்சுமியை வழிபட்டு வரவும். 

  அனுகூலமான தினங்கள்: 19, 22. 

  சந்திராஷ்டமம்: இல்லை. 

  {pagination-pagination}


  துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

  தந்தை வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகளைப் பெறுவீர்கள். ஆற்றல் அதிகரிக்கும். உடன்பிறந்தோரும் அன்புக்கரம் நீட்டுவார்கள். கவலைகள் அனைத்தும் படிப்படியாகக் குறையும். தைரியத்துடன் எதையும் சாதிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். சேமிப்பு உயரும்.   

  உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளில் கவனம் செலுத்தவும். மேலதிகாரிகளின் மூலம் சில சஞ்சலங்கள் ஏற்படும். ஆனாலும் அதிலிருந்து விடுபடுவீர்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் சுமுக நிலை உண்டாகும். கூட்டுத்தொழிலில் ஒற்றுமை ஓங்கும். விவசாயிகள் புதிய குத்தகைகளைப் பெறுவீர்கள். மகசூல் அதிகரித்து நல்ல லாபத்தைக் காண்பீர்கள். 

  அரசியல்வாதிகள் மேலிடத்தின் ஆதரவைப் பெறுவீர்கள். புதிய பயணங்களால் நன்மை அடைவீர்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். சக கலைஞர்களால் பாராட்டப்படுவீர்கள். பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை அதிகரிக்கும். மாணவமணிகளின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். நீண்ட காலத்திட்டங்களுக்கு இது உகந்த நேரம். 

  பரிகாரம்: பார்வதி} பரமேஸ்வரரை வழிபட்டு வரவும். 

  அனுகூலமான தினங்கள்: 20, 23. 

  சந்திராஷ்டமம்: இல்லை. 

  {pagination-pagination}
  விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

  உங்கள் செயல்கள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக நிறைவேறும். நண்பர்கள் மற்றும் உற்றார் உறவினர்களிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொள்வீர்கள். நெடுநாள்களாக வராமல் இருந்த பணம் கை வந்து சேரும். பொருளாதார நிலை உயரும்.  

  உத்தியோகஸ்தர்கள் அனைத்து வேலைகளையும் திருப்தியாக முடிப்பீர்கள். வருமானம் படிப்படியாக வளரும். வியாபாரிகள் போட்டிகளைச் சமாளித்து தங்களின் பொருள்களை சந்தைகளில் விற்பனை செய்வீர்கள். கூட்டாளிகளை அனுசரித்துச் செல்லவும். விவசாயிகளுக்கு விளைபொருள்களின் விற்பனையில் நல்ல லாபம் கிடைக்கும். 

  அரசியல்வாதிகளுக்கு சங்கடங்கள் குறையும். எதிர்கட்சியை சேர்ந்தவர்களும் ஒத்துழைப்பாக இருப்பார்கள். கலைத்துறையினரின் திறமைகள் பளிச்சிடும். புதிய சாதனைகளைப் படைப்பீர்கள். பெண்மணிகள் கணவரிடம் ஒற்றுமையை காண்பீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பிள்ளைகளையும் ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவீர்கள். 

  மாணவமணிகள் தற்போது செய்யும் சிறு முயற்சிகளும் அதிக மதிப்பெண்களைப் பெற்றுத் தரும்.  

  பரிகாரம்: சூரியபகவானை வழிபட்டு வரவும். 

  அனுகூலமான தினங்கள்: 20, 24. 

  சந்திராஷ்டமம்: 18,19. 

  {pagination-pagination}

  தனுசு (பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

  பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். திட்டமிட்ட வேலைகளில் எவ்வித கவலையும் இல்லாமல் செயல்படுவீர்கள். மதிப்பு மரியாதை அதிகரிக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். ஆன்மிகத்தில் ஈடுபடுவீர்கள்.  பழைய கடன்களைத் திருப்பிச் செலுத்துவீர்கள். 

  உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். சக ஊழியர்கள் நட்போடு பழகுவார்கள். வியாபாரிகள் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளவும். கடன் கொடுத்து வியாபாரத்தைப் பெருக்க வேண்டாம். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். வரவும் செலவும் நன்றாக இருப்பதால் புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம்.

  அரசியல்வாதிகளின் வளர்ச்சிக்கு எதிரிகள் முட்டுக்கட்டை போடுவார்கள். சாதுர்யத்துடன் பதிலடி கொடுத்து அதிலிருந்து விடுபடுவீர்கள். கலைத்துறையினர் கடின முயற்சிகளுக்குப்பிறகே புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். பயணங்களால் பணவரவு உண்டு. பெண்மணிகளுக்கு கணவரிடம் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். 

  மாணவமணிகள் உள்ளரங்கு விளையாட்டுகளில் மட்டுமே ஈடுபடவும். 

  பரிகாரம்: தினமும் 108 முறை ஸ்ரீ ராமஜெயம் எழுதி வரவும். 

  அனுகூலமான தினங்கள்: 23, 24. 

  சந்திராஷ்டமம்: 20, 21. 

  {pagination-pagination}
  மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

  எதிர்பார்ப்புகள் கைகூடும். எதிர்ப்புகள் விலகும். செய்தொழிலில் இருந்த பின்னடைவுகள் மறையும். உடல் உழைப்பு வீண் போகாது. சமுதாயத்தில் முக்கிய பிரமுகராக மதிக்கப்படுவீர்கள். மனதிற்கினிய பயணங்களை மேற்கொள்வீர்கள். புதிய சொத்துகளை வாங்குவீர்கள். 

  உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய இடமாற்றமும் பதவி உயர்வும் கிடைக்கும். சக ஊழியர்களும் உதவிகரமாக இருப்பார்கள். வியாபாரிகள் வியாபாரத்தை நல்ல முறையில் விரிவு படுத்துவீர்கள். போட்டி பொறாமைகள் கூடுதலாக இருக்கும். கால்நடைகளால் நல்ல லாபம் அடைவீர்கள். 

  அரசியல்வாதிகளுக்கு அலைச்சல்கள் அதிகரிக்கும். ஆனாலும் உங்களின் எண்ணங்கள் நிறைவேறும். கலைத்துறையினர் கடுமையாக உழைத்தால்தான் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். பணவரவு நன்றாக இருந்தாலும் மனதில் மகிழ்ச்சி குறையும். பெண்மணிகள் கணவருடன் நேசமாகப் பழகி பிரச்னைகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். 

  பெரியோர்களைச் சந்தித்து அவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். மாணவமணிகள் படிப்பில் அதிக கவனம் செலுத்தவும். விளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள்.

  பரிகாரம்: அம்பாளை தரிசித்து வரவும். 

  அனுகூலமான தினங்கள்: 18, 24. 

  சந்திராஷ்டமம்: 22, 23.

  {pagination-pagination}
  கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

  கவனமாகவும் நிதானத்துடனும் பொறுமையுடனும் செயலாற்றி வெற்றி பெற வேண்டிய நேரமிது. உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். நண்பர்களுடன் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கும். பொருளாதாரம் சிறப்பாக இருந்தாலும் எவருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். 

  உத்தியோகஸ்தர்கள் தங்கள் வேலைகளைக் குறித்த காலத்திற்குள் முடித்து விடுவீர்கள். உழைப்பிற்கேற்ற வருமானத்தைப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் சுமுகமாக முடியும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். விவசாயிகள் எதிலும் முன்னெச்சரிக்கையுடன் ஆராய்ந்து செயல்பட்டால் நஷ்டங்களைத் தவிர்க்கலாம். 

  அரசியல்வாதிகளின் பேச்சுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். எதிர்பார்க்கும் விஷயங்களில் தடைகளுக்குப்பிறகே வெற்றி கிடைக்கும். கலைத்துறையினர் உழைப்பிற்குத் தகுந்த பாராட்டுகளைப் பெறுவீர்கள். சக கலைஞர்களின் உதவியுடன் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். பெண்மணிகளுக்கு வருமானம் சிறப்பாக இருக்கும். 

  நவீன பொருள்களை வாங்குவீர்கள். மாணவமணிகள் கல்வியில் முன்னேற்றம் அடைவீர்கள்.

  பரிகாரம்: முருகப்பெருமானை வழிபட்டு வரவும். 

  அனுகூலமான தினங்கள்: 21, 22. 

  சந்திராஷ்டமம்: 24. 

  {pagination-pagination}

  மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

  உங்கள் செயல்கள் நிதானமாக நடக்கும். சில வாய்ப்புகள் கைநழுவிப் போகும். அதனால் அனைத்துக் காரியங்களிலும் முன்னிலைப் படுத்திப் பணியாற்றுங்கள். பிரயாணத்தின்போது தடைகளும் பிரச்னைகளும் உண்டாகலாம். யோகா, பிராணாயாமம் போன்றவற்றைச் செய்வீர்கள்.  

  உத்தியோகஸ்தர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். எதிர்பார்த்த ஊதியத்தைப் பெறுவீர்கள். வியாபாரிகள் புதிய முதலீடுகள் செய்து லாபத்தைப் பெருக்குவீர்கள். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு உற்சாகப் படுத்தும். விவசாயிகளுக்கு தானிய உற்பத்தி மகிழ்ச்சியாக இருக்கும். கையிருப்புப் பொருள்களுக்கு நல்ல விலை கிடைக்கும். 

  அரசியல்வாதிகள் மேலிடத்தின் பாராட்டுகளைச் செய்வீர்கள். எதிர்பார்த்த உயர் பதவிகள் கிடைக்கும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். சக கலைஞர்களிடம் மதிப்பும் மரியாதையும் உயரும். பெண்மணிகள் குடும்பத்தில் நிம்மதியைக் காண்பீர்கள்.

  ஆடை ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்களுடன் நிலவிய மனக்கசப்பு நீங்கும். மாணவமணிகளுக்கு படிப்பில் நாட்டம் அதிகரிக்கும். விளையாட்டிலும் வெற்றி பெறுவீர்கள்.

  பரிகாரம்: சிவபெருமானை வழிபட்டு வரவும். 

  அனுகூலமான தினங்கள்: 19, 24.

  சந்திராஷ்டமம்: இல்லை. 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai