Enable Javscript for better performance
தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நாளை வருண ஜப ஹோமம்- Dinamani

சுடச்சுட

    

    வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் மே 19-ம் தேதி (நாளை) வருண ஜப ஹோமம் நடைபெறுகிறது. 

    வளர்பிறை பஞ்சமி திதியை முன்னிட்டு சனிக்கிழமை காலை 10 மணி முதல் 1.00 மணி வரை குற்றாலம் அகஸ்தியர் ஆசிரமம் நிறுவனர் மற்றும் ஜீவநாடி வாசகர் முத்துக்குமார ஸ்வாமி முன்னிலையில் வருண ஜப ஹோமம் நடைபெறுகிறது. 

    அக்னி நட்சத்திரத்தின் உஷ்ணம் குறையவும், தண்ணீர் பஞ்சம் வராமல் இருக்கவும், பருவமழை பொழியவும், இயற்கை வளம் பெறவும், விவசாய பெருமக்கள் மகிழ்ச்சியடையவும், கிராம தேவதையை போற்றி ஆராதிக்கும் வகையில் தன்வந்திரி பீடத்தில் சப்மாதாக்கள் பூஜையுடன் வருண ஜப ஹோமமும் நடைபெறுகிறது. 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai