Enable Javscript for better performance
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலில் 31-ல் திருஞானசம்பந்தர் இசை விழா- Dinamani

சுடச்சுட

    

    திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலில் 31-ல் திருஞானசம்பந்தர் இசை விழா 

    By DIN  |   Published on : 18th May 2018 03:33 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    vedagiriswarar

     

    திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் திருக்கோயிலில் திருஞானசம்பந்தர் இசை விழா மே 31-ம் தேதி நடைபெறுகிறது. 

    காஞ்சிபுரம் திருக்கழுக்குன்றத்தில் உலகப் பிரசித்தி பெற்ற வேதகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் அரசு சார்பில் திருஞானசம்பந்தரின் இசைவிழா ஒருநாள் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். 

    அதன்படி, இந்தாண்டு மே 31-ம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த விழாவில் மங்கள இசையுடன், ஓதுவார்களைக் கொண்டு, தேவார இன்னிசை மற்றும் பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

    இதற்கான ஏற்பாடுகளை வேலூர் இந்த சமய அறநிலையத்துறை இணை ஆணையர், இந்த சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மேற்பார்வையில் செய்து வருகின்றனர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai