Enable Javscript for better performance
மூத்த குடிமக்கள், கைக்குழந்தைகளின் பெற்றோருக்கு திருமலையில் சிறப்பு தரிசனம்- Dinamani

சுடச்சுட

    

    மூத்த குடிமக்கள், கைக்குழந்தைகளின் பெற்றோருக்கு திருமலையில் சிறப்பு தரிசனம்

    By DIN  |   Published on : 18th May 2018 02:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    tirumala

    ஏழுமலையானை தரிசிப்பதற்காக வரும் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள்.

    திருமலைக்கு வரும் மூத்த குடிமக்கள் மற்றும் கைக்குழந்தைகளின் பெற்றோருக்கு தேவஸ்தானம் சிறப்பு தரிசனங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளது. 
    ஏழுமலையானை தரிசிப்பதற்காக திருமலைக்கு வரும் மூத்த குடிமக்கள் (65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்), மாற்றுத் திறனாளிகள், கைக்குழந்தைகளின் பெற்றோர் ஆகியோருக்கு தேவஸ்தானம் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. அதன்படி, நாள்தோறும் 1,400 பேருக்கு தரிசனம் வழங்கப்பட்டு வருகிறது. 
    காலை 10 மணிக்கு 700 பேர், மாலை 3 மணிக்கு 700 பேர் என ஏழுமலையான் கோயில் முன் வாசல் வழியாக தரிசனத்துக்கு அனுப்பப்படுகின்றனர். இதற்காக திருமலையில் உள்ள எஸ்.வி. அருங்காட்சியகத்துக்கு எதிரில் தேவஸ்தானம் 7 கவுன்ட்டர்களை ஏற்படுத்தியுள்ளது. 
    மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் இந்த கவுன்ட்டர்களுக்குச் சென்று ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அட்டையைக் காண்பித்து தரிசன டோக்கன்களை பெற்றுக் கொள்ளலாம். அதனுடன் 2 மானிய விலை லட்டு டோக்கன்களும், 2 கூடுதல் லட்டு டோக்கன்களும் வழங்கப்படும். இங்கு காலை 7 மணிமுதல் குறிப்பிட்ட எண்ணிக்கை முடியும் வரை டோக்கன்கள் வழங்கப்படும். 
    காலை 10 மணி மற்றும் மாலை 3 மணி தரிசனத்துக்கான டோக்கன் காலை முதல் வழங்கப்படும். டோக்கன் பெற்றவர்களை கோயில் அருகில் உள்ள காத்திருப்பு அறைக்கு அழைத்துச் செல்ல ஒரு பெரிய வாகனம், 2 சிறிய பேட்டரி வாகனங்களை தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது. 
    இந்தக் காத்திருப்பு அறைகளில் 3,000 பேர் வசதியாக அமர்வதற்கு வசதி உள்ளது. அவர்களுக்கு தேநீர், காபி, பால், சிற்றுண்டி, அன்னப் பிரசாதம் உள்ளிட்டவை வழங்கப்படும். கழிவறை வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 
    எனினும், காலை 10 மணிக்கு வழங்கப்படும் தரிசனத்தை கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
    கைக்குழந்தைகளின் பெற்றோர்: அதேபோல், திருமலைக்கு வரும் ஒரு வயதுக்குட்பட்ட கைக்குழந்தைகளின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் 'சுபதம்' தரிசன வரிசையில் தினசரி காலை 9 மணிமுதல் காத்திருக்கலாம். அவர்களுக்கு மானிய விலை லட்டு டோக்கன் மற்றும் கூடுதல் விலை லட்டு டோக்கன் இரண்டும் வழங்கப்படும். அதற்குப் பின் அவர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். மதியம் 1 மணி வரை கைக்குழந்தைகளின் பெற்றோர் தரிசனத்திற்கு செல்லலாம். 
    மாதம் இருமுறை தரிசனம் ரத்து 
    இதனிடையே, திருமலைக்கு வரும் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் கைக்குழந்தைகன் பெற்றோருக்கு தேவஸ்தானம் மாதம் இருமுறை சிறப்பு தரிசனங்களை வழங்கி வந்தது. 
    ஒரு நாளைக்கு 4 ஆயிரம் பேர் என மாதத்துக்கு இரு நாள்களில் மொத்தம் 8 ஆயிரம் பேர் இந்த தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வந்தனர். 
    அந்த இரு நாள்களிலும், 5 வயது வரை உள்ள குழந்தைகளின் பெற்றோர் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை பெருமாலை தரிசித்து வந்தனர்.
    எனினும், தற்போது கோடை விடுமுறை என்பதால் பொது வழியாக வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பாத்ல, மே மற்றும் ஜூன் மாதங்களில் இந்த சிறப்பு தரிசனத்தை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai