Enable Javscript for better performance
வல்லக்கோட்டை முருகன் கோயிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவம் நாளை தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    வல்லக்கோட்டை முருகன் கோயிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவம் நாளை தொடக்கம்

    By DIN  |   Published on : 18th May 2018 02:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    valakottai

    வல்லக்கோட்டை  சுப்பிரமணிய  சுவாமி  திருக்கோயில்.

    வல்லக்கோட்டை முருகன் கோயிலில், வைகாசி விசாக பிரம்மோற்சவப் பெருவிழா சனிக்கிழமை தொடங்குகிறது.
    ஸ்ரீபெரும்புதூரை அடுத்த வல்லக்கோட்டை பகுதியில் பழைமைவாய்ந்த வள்ளி தெய்வசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் 9-ஆம் ஆண்டு வைகாசி விசாக பிரம்மோற்சவப் பெருவிழா கோயில் வளாகத்தில் சனிக்கிழமை (மே 19) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையடுத்து, சனிக்கிழமை மாலை வெள்ளி மயில் வாகனத்தில் உற்சவர் சுப்பிரமணிய சுவாமி வீதி உலா நடைபெறும். பத்து நாள்கள் நடைபெறும் இந்த பிரம்மோற்சவ விழா வரும் 29-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. விழாவின் 7-ஆம் நாளான வெள்ளிக்கிழமை (மே 25) திருத்தேர் திருவிழாவும், 28-ஆம் தேதி தீர்த்தவாரி உற்சவமும் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai