Enable Javscript for better performance
வாடகை அறை அளிப்பதில் அதிகரிக்கும் முறைகேடுகள்..?- Dinamani

சுடச்சுட

    

    திருமலை திருப்பதியில் வாடகை அறை அளிப்பதில் அதிகரிக்கும் முறைகேடுகள்..?

    Published on : 18th May 2018 10:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    room

    திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு வாடகை அறை ஒதுக்குவதில் இடைத்தரகர்கள் உதவியுடன் முறைகேடுகள் நடந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

    திருமலைக்கு வரும் பக்தர்கள் சி.ஆர்.ஓ. எனப்படும் மத்திய விசாரணை அலுவலகத்துக்குச் சென்று தங்கள் ஆதார் அட்டை, பெருவிரல் ரேகை பதிவு, செல்லிடப்பேசி எண் உள்ளிட்டவற்றைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.
    வாடகை அறை ஒதுக்கப்பட்டவுடன் அவர்களின் செல்லிடப்பேசி எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பப்படும். அவர்கள் அந்த தகவலைக் காண்பித்து வாடகை அறை ரசீதை பெற்றுக் கொண்டு, தங்கள் வாடகை அறை வளாகத்துக்குச் சென்று, அறை சாவியை பெற்றுக் கொள்ளலாம்.

    இவர்களுக்கு சுதர்சன், கோவர்தன், கல்யாணி உள்ளிட்ட சத்திரங்கள், எச்.வி.சி., எம்.என்.சி., ஏ.என்.சி., எஸ்.எம்.சி., உள்ளிட்ட இடங்களிலும் (இவை கோயிலிலிருந்து வெகு தொலைவு) வழங்கப்படுகிறது. 

    மேலும் வாடகை முன்பதிவு செய்தவர்கள், நன்கொடையாளர்களுக்கு அட்வான்ஸ்டு ரிசர்வேஷன் கவுன்ட்டரில் (ஏ.ஆர்.சி) வாடகை அறை ஒதுக்கப்படும். இவர்களுக்கு கோயிலின் மிக அருகில் உள்ள வராக சுவாமி, ராம்பகிஜா உள்ளிட்ட இடங்களிலும், வி.ஐ.பி.களுக்கு பத்மாவதி விருந்தினர் மாளிகை பகுதியிலும் வாடகை அறை வழங்கப்படும். 

    இந்நிலையில், பக்தர்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட வாடகை அறையில் பழுது, அசுத்தம் உள்ளிட்டவை இருந்தால், அறை ஒதுக்கிய ஊழியரிடம் ஒப்புதல் சான்றிதழ் பெற்று, ஏ.ஆர்.சி. கவுன்ட்டருக்குச் செல்ல வேண்டும். அங்குள்ள ஊழியர்கள் அதை உறுதி செய்து கொண்டு வேறு அறையை மாற்றி வழங்குவர்.
    இந்த வசதியை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு கவுன்ட்டர்களில் உள்ள ஊழியர்கள் இடைத்தரகர்களுடன் இணைந்து முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

    மத்திய விசாரணை அலுவலகத்துக்கு வெளியில் காத்திருக்கும் இடைத்தரகர்கள், பக்தர்கள் வாடகை அறை ரசீதை பெற்றுத் திரும்புவதை கவனித்து விட்டு, அவர்களிடம் சென்று அறை வெகு தொலைவில் உள்ளது. அதனால் கோயில் அருகில் அறை பெற்றுத் தருகிறோம் எனக் கூறி, அவர்களை ஏ.ஆர்.சி. கவுன்ட்டருக்கு அழைத்துச் சென்று, அங்குள்ள ஊழியர்கள் உதவியுடன் ராம்பகிஜா அல்லது வராக சுவாமி ஓய்வறையில் அறையை ஒதுக்கி அளிக்கின்றனர். அதற்காக பக்தர்களிடம் ஆயிரம் முதல் 2,000 ரூபாய் வரை பெற்று கொள்கின்றனர். 
    சாதாரண நாள்களில் 100 அறைகளும், பக்தர்களின் வருகை அதிகம் உள்ள நாள்களில் 150 அறைகள் வரையிலும் மாற்றி அளிக்கின்றனர். இதன் மூலம் லட்சக்கணக்கில் பக்தர்களிடம் பணம் வசூலிக்கின்றனர்.
    இதுகுறித்து விசாரணை நடத்த தேவஸ்தான அதிகாரிகள் கண்காணிப்பு போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai