Enable Javscript for better performance
குமரி பகவதியம்மன் கோயில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம்- Dinamani

சுடச்சுட

    

    குமரி பகவதியம்மன் கோயில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம்

    Published on : 20th May 2018 12:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    kodimaram

    கொடியேற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தர்கள்.

    கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயில் வைகாசி விசாகத் திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    சனிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8.30 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது.தேவசம் தந்திரி சஜித் சங்கரநாராயணரு கொடியேற்றினார். 
    காலை 10 மணிக்கு சிறப்பு அபிஷேகம், பகல் 12 மணிக்கு அன்னதானம், இரவு 7 மணிக்கு சமயஉரை, 8 மணிக்கு பக்தி இன்னிசை, 9 மணிக்கு தேவி பூப்பந்தல் வாகனத்தில் வீதியுலா ஆகியன நடைபெற்றன. 
    தேரோட்டம்: 9-ஆம் நாள் திருவிழாவான 27-ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, காலை 8 மணியளவில் பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுக்க தேரோட்டம் நடைபெறும். 
    12 மணிக்கு அன்னதானம், மாலை 6 மணிக்கு சமயஉரை, மாலை 6.30 மணிக்கு மண்டகப்படி, இரவு 7 மணிக்கு இன்னிசை கச்சேரி, 9 மணிக்கு வெள்ளிக்கலைமான் வாகனத்தில் தேவி திருவீதி உலா ஆகியன நடைபெறும்.
    தெப்பத் திருவிழா: 28-ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம், காலை 9 மணிக்கு அம்மன் ஆராட்டுக்கு எழுந்தருளல், 12 மணிக்கு அன்னதானம், மாலை 5 மணிக்கு மண்டகப்படி, 6 மணிக்கு சமயஉரை, இரவு 7.30 மணிக்கு நர்த்தன பூஜை, 9.30 மணிக்கு அம்மன் தெப்பத்துக்கு எழுந்தருளி தெப்பத் திருவிழா நடைபெறும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai