சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி திருவிழா தொடக்கம்

தமிழ் கடவுளான முருகன் எழுந்தருளியிருக்கும் ஆறுபடை வீடுகளில் நான்காம் வீடான, திருவேரகம் எனும்  சுவாமிமலையில், தந்தை சிவபெருமானுக்கு ஓம் எனும் பிரணவத்தை உபதேசம் செய்த சிவகுருநாதன், அருள்மிகு
சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி திருவிழா தொடக்கம்

தமிழ் கடவுளான முருகன் எழுந்தருளியிருக்கும் ஆறுபடை வீடுகளில் நான்காம் வீடான, திருவேரகம் எனும்  சுவாமிமலையில், தந்தை சிவபெருமானுக்கு ஓம் எனும் பிரணவத்தை உபதேசம் செய்த சிவகுருநாதன், அருள்மிகு சுவாமிநாதசுவாமியாக எழுந்தருளியுள்ள இத்தலத்தில்  நவம்பர் 7ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை பத்து நாள் நடைபெறும் கந்தர் சஷ்டி திருவிழாவானது 7ஆம் தேதி அன்று    விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்கியது.

இவ்விழாவின்  தொடர்ச்சியாக  நவம்பர் 8ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை தினசரி சுவாமி படிசட்டத்தில் திருவீதி உலாவும், 13ஆம் தேதி சஷ்டி அன்று காலை 11மணியளவில்  சண்முகசுவாமிக்கு   நூற்றியெட்டு  சங்காபிஷேகமும், மாலை தங்கமயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடும், இரவு எட்டு மணிக்கு சூரசம்ஹராம் நிகழ்வும், 14ஆம் தேதி காலை 11 மணியளவில் காவிரி கரையில் தீர்த்தவாரி நிகழ்வும், மாலை ஆறு மணிக்கு மேல் திருக்கல்யாண வைபவமும், 15 மற்றும்  16ஆம் தேதிகளில் இரண்டு நாட்களும் மாலை 7-மணிக்கு மேல் ஊஞ்சல் உற்சவமும், 17ஆம் தேதி இரவு தேவசேனா திருக்கல்யாண ஊர்வல பல்லாக்கு வீதிஉலா திருக்காட்சியும் நடைபெற  உள்ளது.

இவ்விழா ஏற்பாட்டினை திருக்கோயில் அதிகாரிகள் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் சிறப்பாக செய்து வருகிறார்கள். 

குடந்தை ப.சரவணன் 9443171383

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com