திருச்செந்தூரில் சூரசம்ஹாரத்தை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 3 ஆயிரம் போலீசார்!

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை சூரசம்ஹாரம் நடைபெறுவதையொட்டி...
திருச்செந்தூரில் சூரசம்ஹாரத்தை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 3 ஆயிரம் போலீசார்!

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை சூரசம்ஹாரம் நடைபெறுவதையொட்டி 3000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நாளை மாலை திருக்கோயில் கடற்கரையில் நடைபெறுகிறது. நவம்பர் 14-ம் தேதி சுப்பிரமணிய சுவாமிக்குத் திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது. 

கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வரும் நிலையில், அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த உள்ளதாக தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி முரளி ரம்பா தெரிவித்துள்ளார். 

மேலும், பக்தர்களுக்கு வசதியாக சிறப்பு பேருந்து மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com