நாளை மறுநாள் பெயர்ச்சியாகும் குருவால் ஏற்படும் பாக்கியங்கள்! 

நவக்கிரகங்களில் முழு சுப கிரகம் வாழ்வில் அனைத்து விதமான செல்வங்களையும் அளிப்பவர்...
நாளை மறுநாள் பெயர்ச்சியாகும் குருவால் ஏற்படும் பாக்கியங்கள்! 

நவக்கிரகங்களில் முழு சுப கிரகம் வாழ்வில் அனைத்து விதமான செல்வங்களையும் அளிப்பவர் - சப்த ரிஷிகளில் ஆங்கிரஸ முனிவரின் மகன் குரு என்றும் பிரகஸ்பதி என்றும் வியாழ பகவான் அழைக்கப்படுகிறார்.

இவர் தேவர்களுக்கு எல்லாம் குரு. நம் வாழ்வில் 2 விஷயங்கள் மிக முக்கியம். அதாவது தனம் என்று சொல்லக்கூடிய பணம், 2-வது புத்திர சம்பத்து என்று சொல்லக்கூடிய குழந்தை செல்வம். இந்த இரண்டையும் அளிக்க கூடிய சர்வ வல்லமை பெற்ற கிரகம் குரு. 

ஸ்வஸ்தி் ஸ்ரீவிளம்பி வருஷம் தக்ஷிணாயனம் வருஷ ரிது புரட்டாசி மாதம் 18ம் நாள் இதற்குச் சரியான ஆங்கில தேதி 04.10.2018 கிருஷ்ணபக்ஷ ஏகாதசியும் வியாழக்கிழமையும் ஆயில்ய நக்ஷத்ரமும் ஸித்தி நாமயோகமும் பத்ரை கரணமும் சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 40.00க்கு - இரவு 10.05க்கு குரு பகவான் துலா ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு மாறுகிறார்.

விருச்சிக ராசிக்கு வரும் குரு பகவான் தொடர்ந்து 1 வருட காலத்திற்கு இந்த ராசியில் சஞ்சாரம் செய்து அருளாசி வழங்குவார். விருச்சிக ராசிக்கு வரும் குரு பகவான் தனுசு ராசிக்கு விகாரி வருடம் ஐப்பசி மாதம் 20ம் தேதி - 05.11.2018 - திங்கட்கிழமையன்று மாறுகிறார். 

தற்போது மாறக்கூடிய குருபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனது ஐந்தாம் பார்வையால் மீன ராசியையும் - ஏழாம் பார்வையால் ரிஷப ராசியையும் - ஒன்பதாம் பார்வையால் கடக ராசியையும் பார்க்கிறார். குரு பகவானுக்கு ஸ்தான பலத்தை விட த்ருக் பலமே அதிகம். அதாவது இருக்கும் இடத்தின் பலத்தினை விட பார்க்கும் பலமே அதிகம். எனமே குருவின் பார்வை பெறும் ராசிகள் பூரண பலன்கள் பெறும். 

பொதுவாக ராசிகள் பெறும் பலன்களின் அளவுகள்:

நன்மை பெறும் ராசிகள்: ரிஷபம் - கடகம் - மீனம்

நன்மை தீமை இரண்டும் கலந்து பலன்கள் பெறும் ராசிகள்: சிம்மம் - துலாம் - விருச்சிகம் - மகரம் - கும்பம்

பரிகாரத்தின் மூலம் பயன்பெறும் ராசிகள்: மேஷம் - மிதுனம் - கன்னி - தனுசு

குருவால் ஏற்படும் பாக்கியங்கள்:

பக்தி, சிரத்தை, வழிபாடு, புனித சிந்தனை, யாத்திரை, நல்லொழுக்கத்தைக் கடைபிடித்தல் போன்ற விஷயங்கள் குரு பலத்தால் பெறக் கூடியதாகும்.

ஒருவர் பெரிய மத குருவாக இருக்கிறார் என்றால் அவருக்கு குரு நல்ல பலம் பெற்றிருக்கிறார் என்று பொருள்.

ஒழுக்கசீலராக இருப்பவர்களின் ஜாதகத்தில் குரு பலம் பெற்றிருப்பார். உலகத்தார் அனைவரும் ஒருவரை மதிக்கிறார்கள் என்றாலும் அவரின் ஜெனன கால ஜாதகத்தில் குரு பலம் நிறைந்திருக்கிறது என பொருள். 

அரிய சாதனைகளை செய்வதற்கு குரு பலமே பிரதானமாக இருக்கிறது. வேத சாஸ்திரம், விஞ்ஞானம் ஆகியவற்றில் புகழ் அடைவதற்கு மூலபலம் குருபலம்தான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com