இந்த வாரம் எந்த ராசிக்காரர்களுக்கு பணவரவு அதிகரிக்கும்! 

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (அக்டோபர் 5 - அக்டோபர் 11) பலன்களைத் துல்லியமாக..
இந்த வாரம் எந்த ராசிக்காரர்களுக்கு பணவரவு அதிகரிக்கும்! 

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (அக்டோபர் 5 - அக்டோபர் 11) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பயன் பெறுவோம்.

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

கவலைகள் மறைந்து இன்பங்கள் பெருகும் திருப்திகரமான காலமிது. ஆகார விஷயங்களில் கவனமாக இருக்கவும். ஆற்றல் அதிகரிக்கும். பொருளாதார நிலைமை உயரும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரிய நிகழ்வுகள் நடக்கும்.  

உத்தியோகஸ்தர்கள் வேலைகளைக் குறித்த நேரத்தில் முடித்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். தங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். வியாபாரிகள் எதிர்பார்த்த வருமானத்தைப் பெறுவார்கள். விவசாயிகளுக்கு விளைச்சலில் பூச்சிகளின் பாதிப்பு குறையும். கால்நடைகளால் லாபம் உண்டாகும். 

அரசியல்வாதிகள் அந்தஸ்தில் சிறிய குறைபாடுகள் உண்டாகும். ஆகவே கவனமாகச் செயல்படவும். கலைத்துறையினருக்குப் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். பெண்மணிகள் இல்லத்தில் மகிழ்ச்சியைக் காண்பீர்கள். சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக உழைக்கும் எண்ணம் உருவாகும். மாணவமணிகளுக்கு படிப்பில் தேக்க நிலை உண்டாகும். விளையாட்டில் கவனத்தைக் குறைத்துக் கொண்டால் எதிர்பார்த்த மதிப்பெண்கள் பெறலாம்.

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமையன்று சூரியனை வழிபடவும்.

அனுகூலமான தினங்கள்: 5, 6. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

வேலைத் தொந்தரவுகள் அதிகரிக்கும். இடையூறுகளை புத்தி சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். தேவைக்கேற்ப நண்பர்கள் உதவுவார்கள். சுபச்செய்திகளால் மனம் நிம்மதி அடையும். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். செலவுகளும் கட்டுக்குள் இருக்கும். 

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களை அனுசரித்து நடந்துகொண்டால் எதிர்காலத்தில் நன்மை அடையலாம். வியாபாரிகளுக்கு வாடிக்கையாளர்களின் வருகை நல்ல முறையில் இருக்கும். ஓய்வில்லாமல் உழைத்து லாபம் பெற்று மகிழ்வீர்கள். விவசாயிகளுக்கு பழைய கடன்கள் வசூலாகும். செலவு குறைந்த மாற்றுப் பயிர்களை உற்பத்தி செய்து பலன் பெறவும். 

அரசியல்வாதிகள் அனுகூலமான திருப்பங்களை எதிர்பார்க்க முடியாது. மேலிடத்தின் அவமதிப்பை நீங்கள் சந்திக்க நேரிடலாம். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் வரும். பிரச்னைகளை சாதுர்யமான அணுகுமுறையால் வெற்றி காண்பீர்கள். 

பெண்மணிகள் கணவரிடம் ஒற்றுமை காண்பீர்கள். மாணவமணிகள் கல்வியில் அக்கறை காட்டவும். விளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள்.

பரிகாரம்: பராசக்தியை வழிபட்டு நலம் பெறுங்கள். 

அனுகூலமான தினங்கள்: 6, 7. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
மிதுனம் (மிருகசீரிஷம்3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

திட்டமிட்டபடி செயல்படும் நேரமிது. கவலைகள் குறையும். செயல்களில் வெற்றி உண்டாகும். அனுபவஸ்தர்களை கலந்தோலோசித்த பிறகே முக்கிய முடிவுகளை எடுக்கவும். உடன்பிறந்தோரிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளவும்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் பேச்சைக் கேட்டு நடக்கவும். பணவரவு சீராக இருந்தாலும் பொறுமையுடன் பணிபுரிய வேண்டிய நேரமிது. வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் லாபகரமாக முடியும். புதிய முதலீடுகள் வெற்றியைத் தேடித் தரும். விவசாயிகள் கொள்முதல் லாபங்களை அதிகமாகப் பெறுவார்கள். போட்டிகளுக்குத் தகுந்தாற்போல் நடவடிக்கை எடுப்பார்கள்.

அரசியல்வாதிகள் மேலிடத்தின் கண்டனத்திற்கு ஆளாக நேரிடலாம். எதிரிகளிடம் கவனம் தேவை. கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகளும் குறைவாகவே இருக்கும். 
பெண்மணிகள் வாக்குவாதம் செய்வதைத் தவிர்க்கவும். மாணவமணிகள் கல்வி  உயர்வுக்குச் செய்யும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். சிலருக்கு கல்வி பயில இடமாற்றமும் கிடைக்கும்.

பரிகாரம்: திங்களன்று விநாயகரை வழிபட்டு நலம் பெறவும். 

அனுகூலமான தினங்கள்: 5, 7. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

குடும்பத்தில் அமைதி நிலவும். உற்சாகமான காலமிது. உறவினர்களிடம் அன்பும் பாசமும் அதிகரிக்கும். உங்கள் திறமைகள் பளிச்சிடும். பொருளாதார நிலைமை சீராக இருக்கும். வாகனப் பயணத்திலும் உடலாரோக்கியத்திலும்  கவனம் தேவை.

உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். மேலதிகாரிகள் உங்களைப் புரிந்து கொண்டு சில சலுகைகள் அளிப்பர். வியாபாரிகளுக்கு லாபம் குறைவாகவே இருக்கும். கொடுக்கல் வாங்கல்களில் சிறு பிரச்னைகள் வந்து விலகும். விவசாயிகள் கொள்முதல் லாபங்களை அதிகமாகப் பெறுவார்கள். போட்டிகளுக்குத் தகுந்தவாறு நடவடிக்கை எடுப்பார்கள்.

அரசியல்வாதிகளுக்கு கட்சியில் முக்கிய பொறுப்புகள் கிடைக்கும். அரிய சாதனைகளைச் செல்வீர்கள். கலைத்துறையினர் வாய்ப்புகளை தேடிச் செல்ல வேண்டாம். புதிய பயணங்களை மேற்கொள்வீர்கள்.

பெண்மணிகளுக்கு கணவருடன் ஏற்பட்ட பிணக்குகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். மாணவமணிகள் முன்கூட்டியே கல்வியில் அக்கறை காட்டுவதால் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறலாம்.

பரிகாரம்: மஹாலட்சுமியை வழிபட்டு வர சுகங்கள் கூடும். 

அனுகூலமான தினங்கள்: 6, 7. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். உறவினர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். புதிய ரகசியங்களை அறிவீர்கள். ஆச்சரியப் படத்தக்க வகையில் நிகழ்ச்சிகள் நடக்கும். பணவரவு நன்றாக இருக்கும். எதிர்காலத்திற்காக முதலீடு செய்வீர்கள்.

உத்தியோகஸ்தர்கள்அலுவலக வேலைகளை உற்சாகத்துடன் செய்து முடிப்பீர்கள். பதவி உயர்வுடன் ஊதிய உயர்வையும் பெறுவார்கள். வியாபாரிகளுக்கு தடைகளும் எதிர்ப்புகளும் நீங்கும். ஆகவே புதிய கடைகள் திறந்து வியாபார அபிவிருத்தி அடைவீர்கள். விவசாயிகள் புதிய குத்தகைகளை நாடிச் செல்ல வேண்டாம். கையிருப்புப் பொருள்களை பத்திரப் படுத்துங்கள். 

அரசியல்வாதிகளின் முயற்சிகள் யாவும் வெற்றியடையும். கட்சி மேலிடத்தின் பாராட்டைப் பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு புகழ் அதிகரிக்கும். நல்ல பெயரைத் தக்க வைத்துக் கொள்ள கடுமையாக உழைக்க வேண்டி வரும். பெண்மணிகளுக்கு குடும்பத்தில் மதிப்பு உயரும். கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். மருத்துவச் செலவுகள் குறையும். மாணவமணிகளுக்கு படிப்பில் கவனம் கூடும். 

பரிகாரம்: செய்வாயன்று வளசரவாக்கம் வேங்கடசுப்ரமணியரை வணங்கவும்.

அனுகூலமான தினங்கள்: 5, 8. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

வெற்றிகள் குவியும். எடுத்த காரியங்களைத் துரிதமாக முடித்து விடுவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். பயணங்களால் நன்மைகள் உண்டாகும். அரசாங்க வழியில் சில சலுகைகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் இருந்து வந்த பிரச்னைகள் படிப்படியாகக் குறையும். மேலதிகாரிகளிடம் இருந்து வந்த மனஸ்தாபங்கள் விலகும். ஊதிய உயர்வு உண்டு. வியாபாரிகளுக்கு அரசாங்கத்தால் சில அனுகூலங்கள் உண்டாகும். கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் லாபகரமாக முடியும். விவசாயிகள் உழைப்பிற்கு ஏற்ற பலன்களை அனுபவிப்பார்கள்.  பணிகளில் கவனத்துடன் நடந்துகொள்ளவும்.

அரசியல்வாதிகள் மக்கள் நலப்பணிகளில் ஈடுபாட்டுடன் செயல்பட்டு புகழும் செல்வாக்கும் அதிகரிக்கப் பெறுவர். கலைத்துறையினருக்குப் புதிய ஒப்பந்தங்களில் நல்ல வருமானம் கிடைக்கும். 

பெண்மணிகள் குடும்பத்தில் சந்தோஷத்தைக் காண்பார்கள். குழந்தைகளிடம் பக்தியை வளர்க்கவும். மாணவமணிகள் வீண் பிரச்னைகளைத் தவிர்க்க முன்கோபத்தைக் குறைக்கவும்.

பரிகாரம்: மதுரை மீனாட்சியை வழிபட்டு சகல நலன்களையும் பெறவும். 

அனுகூலமான தினங்கள்: 7, 8. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

செயல்களில் முன்னேற்றம் உண்டாகும். பொருளாதாரத்தில் மேன்மைகளைக் காண்பீர்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருந்து வரும். மறைமுக எதிர்ப்புகளுக்கு நீங்கள் ஆளாக நேரிடலாம். எச்சரிக்கையுடன்இருக்கவும். புதிய முயற்சிகளில் கவனம் தேவை. 

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். உழைப்புக்குத் தகுந்த ஊதியத்தையும் பெறுவீர்கள். வியாபாரிகள் புதிய வழிகளில் வியாபாரத்தைப் பெருக்க முனைவார்கள். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் லாபத்தைப் பெறுவீர்கள். விவசாயிகள் புதிய முயற்சிகளைத் தள்ளிப்போடவும். வாய்க்கால் வரப்புப் பிரச்னைகளைத் தவிர்க்கவும். 

அரசியல்வாதிகளின் திட்டங்கள் நிறைவேறும். மாற்றுக் கட்சிக் காரர்களும் உங்களுக்கு ஒத்துழைப்பு நல்குவார்கள். கலைத்துறையினருக்கு முன்னேற்றகரமான காலமிது. புதிய ஒப்பந்தங்களும் அதிக வருமானமும் கிடைக்கும். 

பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை திருப்திகரமாக இருக்கும். மாணவமணிகள் தேவையில்லாத பிரச்னைகளில் சிக்கிக் கொள்ள நேரிடலாம். 

பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் தாயாரை வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 5, 8. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

திட்டமிட்ட காரியங்களில் வெற்றிவாகைச் சூடுவீர்கள். பணவரவும் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். உறவினர்களால் நன்மைகள் உண்டாகும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக முடியும். 

உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் மகிழ்ச்சியைக் காண்பார்கள். எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்களில் இருந்த சிரமங்கள் குறையும். விவசாயிகளுக்கு கொள்முதலில் லாபம் கிடைக்கப் பெறும். கால்நடைகளை வைத்திருப்போர் நல்ல வருமானம் பெறுவர். 

அரசியல்வாதிகளுக்கு பெயரும் புகழும் அதிகரிக்கும். திட்டமிட்ட வேலைகளில் தடைகள் ஏற்பட்டாலும் இறுதியில் வெற்றி உண்டு. கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வதில் சில தடைகள் ஏற்படலாம். பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை நன்றாகவே இருக்கும். உற்றார் உறவினர்களோடு அனுசரணையாக பழகிவர, சுமுகமான உறவுநிலை நீடிக்கும். 

மாணவமணிகள் வருங்காலத்திற்குச் செய்யும் பயிற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். 

பரிகாரம்: நவக்கிரகத்தில் உள்ள அங்காரகனை வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 4, 7. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

பொருளாதார நிலைமை சீராக இருக்கும். மனதில் சிறு சஞ்சலங்கள் வந்து போகும். தொழிலில் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் முடிவு சாதகமாகவே அமையும். குடும்பத்தினரிடமும் அன்பும் பாசமும் அதிகரிக்கும்.  

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் உழைப்புக்கேற்ற பலனை அனுபவிப்பீர்கள். மேலதிகாரிகள் உங்கள் திறமையை உணர்ந்து பாராட்டுவார்கள். வியாபாரிகள் கையிருப்புப் பொருள்கள் மீது அக்கறை காட்டவும். மகசூல் அதிகரிக்க, நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். காய்கறி போன்றவற்றை பயிரிட்டு மிகுந்த பலன் பெறலாம்.

அரசியல்வாதிகளைத் தேடி, உயர் பதவிகள் வந்து சேரும். கட்சி மேலிடத்தில் பாராட்டு கிடைக்கும். கலைத்துறையினருக்கு பெயரும் புகழும் கூடும். புதிய சாதனைகளைச் செய்வீர்கள். 

பெண்மணிகள் குடும்பத்தில் ஒற்றுமையை காண்பீர்கள். கணவரின் பாராட்டும், அன்பும் உங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். மாணவமணிகள் முயற்சிக்குத் தகுந்தவாறு மதிப்பெண்களைப் பெறுவீர்கள். எனவே, பாடங்களை உடனுக்குடன் மனப்பாடம் செய்யுங்கள்.

பரிகாரம்: குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 7, 11. 

சந்திராஷ்டமம்: 5.

{pagination-pagination}

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

வேலைத் தொந்தரவுகள் அதிகரிக்கும். வீண் அலைச்சல்களுக்கும் ஆளாவீர்கள். இதனால் உடல் சோர்வடையும். இருப்பினும் வெகு விரைவில் இத்தகைய நிலை மாறும். மனதில் புதிய உற்சாகம் பிறக்கும். பொருளாதாரத்தில் அபிவிருத்தி உண்டாகும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளில் கவனத்தைச் செலுத்தவும். காலநேரங்களை வீணாக்காமல் உழைத்தால் புதிய பொறுப்புகளைப் பெறலாம். வியாபாரிகளைத் தேடி, புதிய வாடிக்கையாளர்கள் வருவார்கள். எதிர்கால பிரச்னைகளிலிருந்து தப்பிக்க வரவு செலவுகளைக் கவனத்துடன் செய்யவும். விவசாயிகள் கொள்முதலில் லாபத்தைப் பார்ப்பார்கள்.

அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். புதிய முயற்சிகளை வெற்றிகரமாக முடிப்பார்கள். கட்சியில் உயர் பதவிகளை பெறுவார்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். வருமானமும் இரட்டிப்பாகும். 

பெண்மணிகளுக்குக் கணவரிடம் அன்பும் பாசமும் அதிகரிக்கும். பணவரவு அதிகரிப்பதால் சேமிப்புகளில் ஈடுபடுவீர்கள். மாணவமணிகளுக்கு பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். உங்கள் எண்ணங்கள் ஈடேறும்.

பரிகாரம்: சனிபகவானை அர்ச்சித்து வழிபடவும்.

அனுகூலமான தினங்கள்: 10, 11. 

சந்திராஷ்டமம்: 6, 7.

{pagination-pagination}

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)
உங்களின் எண்ணங்கள் ஈடேறும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நிறையும். உறவினர்களின் அன்பும் அரவணைப்பும் கிடைக்காது. உடன்பிறந்தோர் வழியில் கருத்து வேறுபாடுகள் வரலாம். வருமானத்திற்கு குறைவு ஏற்படாது.

உத்தியோகஸ்தர்கள் சற்றுக் கூடுதலாக உழைக்க வேண்டிவரும். மேலதிகாரிகளின் கெடுபிடிகளைச் சந்திக்க நேரிடும்.  சக ஊழியர்கள் உங்களுக்கு உதவுவார்கள். வியாபாரிகளுக்கு பணவரவு சீராக இருக்கும். தேவைக்கேற்ற சரக்குகளை வாங்கி விற்பனை செய்வீர்கள். விவசாயிகள் பிற்காலத் திட்டங்களுக்காகச் செலவு செய்ய நேரிடும். கொள்முதலில் லாபம் தொடரும். 

அரசியல்வாதிகளுக்கு மனதளவில் சஞ்சலம் ஏற்படும். மேலிடத்தின் அதிருப்தி அவர்களை குழப்பத்தில் ஆழ்த்திவிடும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வார்கள். ரசிகர்களின் ஆதரவோடு வெற்றி பெறுவீர்கள். 

பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை சொல்லிக் கொள்ளும்படி இராது. மாணவமணிகள் படிப்பில் கவனமாக இருக்க வேண்டும். உடலாரோக்கியம், மன ஆரோக்கியத்திற்கு தியானம், உடற்பயிற்சிகள் செய்யவும்.

பரிகாரம்: செவ்வாயன்று செந்திலாண்டவரை வழிபடவும்.

அனுகூலமான தினங்கள்: 7, 10.

சந்திராஷ்டமம்: 8, 9.

{pagination-pagination}

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

எண்ணங்கள் யாவும் ஈடேறும். உறவினர்களின் அலட்சியப் போக்கு மனதிற்கு வேதனையை கொடுக்கும். பெரியோரின் ஆசிகள் சாதகமாக அமையும். அனைத்து செயல்களையும் வெற்றிகரமாக முடித்து விடுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். மேலதிகாரிகளால் எந்த கெடுபிடியும் ஏற்படாது. வியாபாரிகள் போட்டிகளைச் சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். புதிய குத்தகைகளை நாடிச் செல்வீர்கள். 

அரசியல்வாதிகள் விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்துகொண்டு மகிழ்வார்கள். சமூகத்தில் மதிப்பு மரியாதையை அதிகரித்துக் கொள்வார்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வார்கள். யாருடனும் கூட்டு சேராமல் தனித்தே செயல்படுங்கள்.

பெண்மணிகளுக்கு பணவரவு சீராகவே இருக்கும். ஒரு சிலருக்கு தேவையற்ற வீண் அலைச்சல்களும் செலவுகளும் ஏற்பட்டு மனக்குழப்பம் ஏற்படும். மாணவமணிகள் உள்ளரங்கு விளையாட்டின்போது கவனம் சிதறாமல் விளையாடவும். வெளிவிளையாட்டின்போது காயம் ஏற்படும் என்பதால் கவனம் தேவை.

பரிகாரம்: நந்திபகவானுக்கு அருகம்புல் சாற்றி வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 7, 8. 

சந்திராஷ்டமம்: 10, 11.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com