திருச்செந்தூர்: சுவாமி சண்முகர் பச்சை சாத்திய கோலத்தில் வீதி உலா

திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணித் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகின்றது. 
திருச்செந்தூர்: சுவாமி சண்முகர் பச்சை சாத்திய கோலத்தில் வீதி உலா

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணித் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகின்றது. 

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா கடந்த 30-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது. 

இதையொட்டி, திருவிழாவின் எட்டால் நாளான இன்று அதிகாலை 5 மணிக்கு சுவாமி சண்முகர் பெரிய வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளுகிறார். காலை 10.30 மணிக்கு சுவாமி சண்முகர் பச்சை சாத்திய கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து கோயில் சேர்கிறார். 

பின்னர் மேலக் கோயிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமானும், அலைவாயுகந்த பெருமானும் வெள்ளிக்குதிரை வாகனங்களில் எழுந்தருளி, எட்டு வீதிகளிலும் உலா வந்து வேட்டை வெளிமண்டபத்தில் திருக்கண் சாத்தி பின்னர் மேலக்கோவில் சேர்கிறார்கள். 

விழாவின் முக்கிய நிகழ்வான சனிக்கிழமை (10-ம் நாள் திருவிழா) தேரோட்டம் நடைபெறுகிறது. அன்றிரவு சுவாமி அம்பாள் பெரிய பல்லக்குகளில் எழுந்தருளி வீதி உலா நடக்கிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com