மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயில் மகா மண்டபத்துக்கு நாளை சம்ப்ரோக்ஷணம்

மாமல்லபுரம் நிலமங்கைத் தாயார் சமேத தலசயனப் பெருமாள் கோயில் முன்பகுதியில் உள்ள மகா மண்டபத்தின் சம்ப்ரோக்ஷண விழா புதன்கிழமை (செப்டம்பர் 12) நடைபெறுகிறது.
 தலசயனப் பெருமாள்  கோயிலுக்கு முன்  அமைக்கப்பட்டுள்ள  மகா  மண்டபம்.
 தலசயனப் பெருமாள்  கோயிலுக்கு முன்  அமைக்கப்பட்டுள்ள  மகா  மண்டபம்.


மாமல்லபுரம் நிலமங்கைத் தாயார் சமேத தலசயனப் பெருமாள் கோயில் முன்பகுதியில் உள்ள மகா மண்டபத்தின் சம்ப்ரோக்ஷண விழா புதன்கிழமை (செப்டம்பர் 12) நடைபெறுகிறது.
மாமல்லபுரம், 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இங்கு பெருமாள் கடல்நீரை தனது திருக்கரங்களால் இறைத்ததால், வட நாட்டில் உள்ள தலங்களான பத்ரிநாத் மற்றும் அயோத்திக்கு இணையான அர்த்தசேது எனும் புண்ணியத் தலமாக இது விளங்குகிறது. ஆழ்வார்களில் முதலாமவரான பூதத்தாழ்வார் அவதரித்த புண்ணிய பூமி மாமல்லபுரம் ஆகும்.
நிலமங்கைத் தாயார் சமேத தலசயனப் பெருமாள் திருவுள்ளப்படியும், ஆழ்வார்கள், ஆச்சாரியர்கள் அனுகிரகத்தின்படியும் கோயிலுக்கு வெளியே மகா மண்டபம் நிர்மாணிக்கப்பட்டதாக கோயில் ஊழியர்கள் தெரிவித்தனர். 
இங்கு திவ்ய தேசப் பெருமாள்களை எழுந்தருளச் செய்து, தசாவதார மூர்த்திகள், அஷ்ட லட்சுமிகள், ஆழ்வார்கள், ஆச்சாரியர்கள், 21 கமல புஷ்பங்கள், 18 தூண்களுடன் பஞ்சவர்ணங்கள் தீட்டி அழகு மிளிர இந்த மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் சம்ப்ரோக்ஷணம் புதன்கிழமை காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் நடைபெறவுள்ளது.
இதையொட்டி, செவ்வாய்க்கிழமையன்று பகவத் பிரார்த்தனை, அங்குரார்ப்பணம், வாஸ்து ஹோமம், அக்னி பிரதிஷ்டை கும்பாராதனம், பிம்ப ரக்ஷôபந்தனம், பூர்ணாஹுதி ஆகியவை நடைபெறும். அதைத் தொடர்ந்து, புதன்கிழமை காலையில் யாகசாலை புண்யாஹம், மகா பூர்ணாஹுதி, கும்பப் புறப்பாடு, மகா மண்டப சம்ப்ரோக்ஷணம் ஆகியவை நடத்தப்படும். அதன் பின், தீர்த்தப் பிரசாதம் விநியோகம் செய்யப்படும்.
இந்த விழாவில், திருப்பாணாழ்வார் கைங்கர்ய அறக்கட்டளை, திருமழிசை மோகனகிருஷ்ண ராமானுஜதாசர், வேணுகோபால பக்த ஜன சபை, அமரம்பேடு பரசுராம பாகவதர், நெற்குன்றம் கிருஷ்ணமூர்த்தி பாகவதர், நீலமேக பாகவதர், அடையாறு பாலகிருஷ்ண பக்த ஜன கோலாட்ட பஜனை டிரஸ்ட், கனகவல்லி சமேத வைகுண்டவாசர் பக்த ஜன சபை, வெளிச்சை ஹரி பாகவதர் சீனிவாசப் பெருமாள் பக்த பஜனை சபை, கோலாட்ட பஜனை ஆகிய பஜனைக் குழுக்கள் பங்கேற்கின்றன. விழாவிற்கான ஏற்பாடுகளை கிருஷ்ண ராமானுஜதாசர், மாமல்லபுரம் குலசேகர ஆழ்வார் ராமானுஜ கூடம் மற்றும் கிராமத்தார், பாகவத அன்பர்கள் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com