பாரு பாரு விநாயகரை பாரு புல்லட்டில் பறக்கும் விநாயகரை பாரு! (புகைப்படங்கள்)

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
பாரு பாரு விநாயகரை பாரு புல்லட்டில் பறக்கும் விநாயகரை பாரு! (புகைப்படங்கள்)

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சாக்லெட், கரன்சி நோட், முறுக்கு, மிக்ஸி, நவதாண்ணியம், கம்பு, சோளம், வாழைப்பூ, தேங்காய், தர்பூசனி, சாத்துக்குடி, அயன்பாக்ஸ் என விதவிதமாக தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலையை மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. 

விநாயகரைத் தவிர வேறு எந்த ஒரு தெய்வத்துக்கும் இவ்வளவு சிறப்பாக விழா கொண்டாடப்படுவதில்லை. தெருவுக்குத் தெரு, ஊருக்கு ஊர் என மக்கள் அனைவரும் ஒன்று கூடி நாடு முழுவதும் பிரம்மாண்டமாக கொண்டாடும் விழாவாகும் இது. 

விதவித விநாயகர்  சிலைகள்

சென்னை, கோட்டூர்புரத்தில் 15 அடி உயரத்தில் முருகப்பெருமான் புல்லட் ஓட்ட விநாயகர் அமர்ந்திருப்பதைப் போல அழகான சிலை தயாரிக்கப்பட்டது. 

சென்னை, கொளத்தூரில் 6 ஆயிரம் வாழைப் பூக்களை கொண்டு பிரம்மாண்ட விநாயகர் சிலை தயாரிக்கப்பட்டது. இயற்கையாகத் தயாரிக்கப்பட்ட வாழைப்பூ விநாயகர் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. 

சென்னை, பேப்பர் மில்ஸ் தெருவில் பண நோட்டுக்கள் மற்றும் சில்லறைகள் கொண்டு விநாயகர் சிலை தயாரிக்கப்பட்டது. 

அயன்பாக் மற்றும் மிக்ஸியைக் கொண்டு அழகாகத் தயாரிக்கப்பட்டது இந்தக் கணபதி. 

புபனேஸ்வர் சாயித் நகரில் 34 யானை தலைகளைக் கொண்டு மிக அற்புதமான விநாயகர் சிலை. 

சென்னை, தி நகரில் 18 அடி உயரத்தில் தென்னிந்தியாவின் பராம்பரிய உணவான 300 கிலோ முறுக்கைக் கொண்டு அதி அற்புத விநாயகர் தயாரிக்கப்பட்டது. 

மைசூரில் கணபதியுடன் பிரதமர் மோடி இருப்பதாகவும், பாஜக சின்னம் இருப்பதைப் போன்றும் சிலை வடிவமைக்கப்பட்டது. 

மைசூரில் கணபதியுடன் முதல்வர் குமாரசாமி விதை விதைப்பதைப் பார்வையிடுவதாகவும் அமைக்கப்பட்டது. 

பஞ்சாம், லூதினியாவில் பிரபல உணவகத்தின் உரிமையாளர் 65 கிலோ எடையுள்ள சாக்லெட்டைக் கொண்டு பத்து நாட்களில், 20 உணவு தயாரிப்பாளரைக் கொண்டு விநாயகர் சிலையை தயாரித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com