மதுராந்தகத்தை அடுத்த சித்திரவாடி, நயா திருப்பதியில் நாராயணன்-அனந்தசயன சுவர்ண மண்டபம் மற்றும் புவனேஸ்வரித் தாயார் ஆலயம் ஆகியவற்றின் பிரதிஷ்டை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சித்திரவாடி, நயா திருப்பதியில் வேணுகோபாலப் பெருமாள் அறக்கட்டளை சார்பாக பிரசன்ன வெங்கடேசப் பெருமாள், பத்மாவதித் தாயார், பஞ்சமுக ஆஞ்சநேயர், சிம்மகிரி மலையில் லட்சுமி நரசிம்மர், மலையடிவாரத்தில் லட்சுமி நரசிம்மர், பாவன நரசிம்மர், ஆனந்தவல்லித் தாயார், சனீஸ்வர பகவான், ஏகாந்த ஈஸ்வரர் உள்ளிட்ட சந்நிதிகள் உள்ளன. அவற்றைத் தொடர்ந்து நாராயணர்-அனந்தசயனர் சுவர்ண மண்டபம் மற்றும் புவனேஸ்வரி தாயார் சந்நிதி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. அவற்றின் பிரதிஷ்டை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக சந்நிதி வளாகத்தில் வேள்வி பூஜைகள் நடைபெற்றன. மேளதாளம் முழங்க, வேத விற்பன்னர்கள் சுவாமி சிலைகளைப் பிரதிஷ்டை செய்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வேணுகோபாலப் பெருமாள் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராஜஸ்தான் ராயல்ஸால் எந்த ஒரு அணியையும் வீழ்த்த முடியும்: விக்ரம் ரத்தோர்

இன்றைய செய்திகள் - நேரலை!

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?

மகளிருக்கு இலவசப் பேருந்து; பதவியேற்ற முதல் நாளிலேயே 3 திட்டங்கள் அறிவிப்பு!
விடியோக்கள்

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

ரஜினி விட்டாலும் அவரை விடாத அரசியல் | Rajini Press meet | CM Vijay | TVK | Rajinikanth
தினமணி செய்திச் சேவை
Instagram மூலம் குழந்தைகளை வைத்து பிரசாரம் செய்த தவெக! - தோல்வி குறித்து M.K. Stalin | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

