
நாட்டறம்பள்ளியை அடுத்த பச்சூரில் அமைந்துள்ள சென்றாய சுவாமி கோயிலில் 11 நாள் பிரம்மோற்சவம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
பச்சூர் பகுதியில் மலை உச்சியில் மிகவும் பழைமை வாய்ந்த சென்றாய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு நாட்டறம்பள்ளி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள கிராம மக்களும், ஆந்திர, கர்நாடக மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களும் வந்து சென்றாய சுவாமியை தரிசனம் செய்கின்றனர்.
இந்நிலையில் இக்கோயிலில் 90-ஆம் ஆண்டு பிரம்மோற்சவ விழா வெள்ளிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதில் நாட்டறம்பள்ளி, பச்சூர், கொத்தூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து வரும் 25-ஆம் தேதி வரை (11 நாள்கள்) பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், கிராம மக்கள் மற்றும் சென்றாயசுவாமி கோயிலின் அனைத்து உற்சவக் கமிட்டியினர் செய்து வருகின்றனர்.