மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் ஏப்.7-ல் சித்திரைத் திருவிழா தொடக்கம்

தமிழகத்தில் நடைபெறும் திருவிழாக்களில் மதுரை சித்திரைத் திருவிழா உலகப் புகழ் பெற்றது.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் ஏப்.7-ல் சித்திரைத் திருவிழா தொடக்கம்

தமிழகத்தில் நடைபெறும் திருவிழாக்களில் மதுரை சித்திரைத் திருவிழா உலகப் புகழ் பெற்றது. இதில் தமிழகம் முழுவதுமிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம்.

இந்தாண்டு சித்திரைத் திருவிழா ஏப்ரல் 7-ம் தேதி முதல் ஏப்ரல் 19-ம் தேதி வரை சீரும் சிறப்புமாக நடைபெற உள்ளது. 

இதையொட்டி மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் ஏப்ரல் 7-ம் தேதி வாஸ்து சாந்தி, நிலத்தேவர் வழிபாடு நடைபெறுகிறது. சித்திரைப் பெருவிழாவின் முக்கியத் திருநாட்களாக ஏப்ரல் 8-ம் காலை 10.05 மணிக்கு மேல் 10.29 மணிக்குள் மிதுன லக்னத்தில் கொடியேற்றத்துடன் முதல் நாள் திருவிழா தொடங்குகிறது.

இதைத்தொடர்ந்து ஏப்ரல் 8 முதல் 19-ம் தேதி வரை சுவாமி மற்றும் அம்மன் தினசரி காலை மற்றும் இரவு பல்வேறு வாகனங்களில் நான்கு மாசி வீதிகளில் வீதி உலா நடைபெறுகிறது.

ஏப்ரல் 9-ம் தேதி தங்க சப்பர வாகனம், பூத, அன்ன வாகனம், ஏப்ரல் 10-ம் தேதி தங்க சப்பர வாகனத்தில் கைலாச பர்வதம், காமதேனு வாகனம், ஏப்ரல் 11-ம் தேதி தங்கப்பல்லக்கு வாகனம், ஏப்ரல் 12-ம் தேதி தங்க சப்பர வாகனம், தங்கக் குதிரை வாகனம், 13-ம் தேதி தங்கம், வெள்ளி ரிஷப வாகனம், 14-ம் தேதி சிம்மாசனங்களில் நந்திகேஸ்வரர், யாளி வாகனம், 15-ம் தேதி ஊடல் உற்சவம் - பட்டாபிஷேகம் - வெள்ளி சிம்மாசன உலா, 16-ம் தேதி திக் விஜயம் - இந்திர விமான உலாவும் நடைபெறுகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் ஏப்ரல் 17-ம் தேதி (புதன்கிழமை) காலை நடைபெறுகிறது. அன்றைய தினம் இரவு 8 மணிக்கு கல்யாணக் கோலத்தில் சுவாமி, அம்மன் பூப்பல்லக்கில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

ஏப்ரல் 18-ம் தேதி காலை 5.45 மணிக்கு சுவாமி, அம்மன் தேரோட்டம் நடைபெறுகிறது. ஏப்ரல் 19-ம் தேதி தீர்த்தவாரி, தேவேந்திர பூஜையுடன் இரவு அம்மன், சுவாமி, வெள்ளி ரிஷப வாகனத்தில் புறப்பாடு செய்வதுடன் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com