சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா

சிவம் சக்தி இரண்டும் ஒன்று தான். சக்தியின் சிறப்பை உணர்த்த நவராத்திரி, சிவத்தின் சக்தி உணர சிவராத்திரி என பல பண்டிகை வைத்து நமக்கு நம் முன்னோர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா

சிவம் சக்தி இரண்டும் ஒன்று தான். சக்தியின் சிறப்பை உணர்த்த நவராத்திரி, சிவத்தின் சக்தி உணர சிவராத்திரி என பல பண்டிகை வைத்து நமக்கு நம் முன்னோர்கள் அறிவுறுத்தி உள்ளனர். சக்தியில்லையேல் சிவம் இல்லை. சிவம் இல்லையேல் சக்தியில்லை. சக்தி வழிபாடு நம் ஆதி வழிபாட்டு முறையில் ஒன்று. பெண்களை மதிக்க கற்றுக் கொடுப்பதும் சக்தி வழிபாட்டின் ன் நோக்கம் ஆகும். அந்த வகையில் சமயபுரம் சித்திரைத்  திருவிழாஅழைப்பிதழ் இந்த பதிவில் பகிர்கின்றோம்.

சமயபுரம் மாரியம்மன் கோயில்தமிழ் நாட்டில் திருச்சிராப்பள்ளிக்கு வடக்கே காவிரியின் வட கரையிலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மாரியம்மன் கோயிலாகும்.

தற்போது, சமயபுரம் மாரியம்மன் கோயில் இருக்குமிடம் கண்ணனூர் என அழைக்கப்படுகிறது. இவ்விடம் கண்ணபுரம், விக்ரமபுரம், மாகாளிபுரம் என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோயிலுக்கு வடக்கே செல்லாயி அம்மன் கோயிலும், போஜீஸ்வரன் கோயிலும் கிழக்கே உஜ்ஜயினி மாகாளி கோயிலும், முத்தீஸ்வரன் கோயிலும் அமைந்துள்ளன.

இது ஒரு சோழ மன்னர் தன் தங்கைக்கு சீதனமாக ஒரு நகரையும் கோட்டையையும் உண்டாக்கிக் கொடுத்த இடமாகக் கருதப்படுகிறது. பிற்காலத்தில், பாண்டிய மன்னர்களின் படையெடுப்பால் அவை அழிந்து வேம்புக்காடாக மாறியதாகவும், தொடர்ந்து அங்கு அம்மன் கோயில் உருவானதாகவும் கூறப்படுகிறது. வைணவி என்ற மாரியம்மன் சிலை ஸ்ரீரங்கத்தில் இருந்தது. அதன் உக்கிரம் தாங்க முடியாமல் போனதால், அங்கிருந்த ஜீயர் சுவாமிகள், அச்சிலையை அங்கிருந்து அப்புறப்படுத்த ஆணையிட்டார். அவருடைய ஆணைப்படி வைணவியின் சிலையை அப்புறப்படுத்த வந்தவர்கள் வடக்கு நோக்கிச் சென்று சற்று தூரத்தில் தற்போதுள்ள இனாம் சமயபுரம் என்னுமிடத்தில் இளைப்பாறினார்கள். பிறகு அதனை எடுத்துக்கொண்டு தென்மேற்காக வந்து தற்போதுள்ள மாரியம்மன் கோயில் அமைந்துள்ள கண்ணனூர் அரண்மனை மேட்டில் வைத்துவிட்டுச் சென்றனர். அப்போது, காட்டு வழியாகச் சென்ற வழிப்போக்கர்கள், அச்சிலையைப் பார்த்து அதிசயப்பட்டு அக்கம்பக்கத்தில் இருந்த கிராம மக்களைக் கூட்டிவந்து அதற்கு ”கண்ணனூர் மாரியம்மன்” என்று பெயரிட்டு வழிபடத்தொடங்கினர். அக்காலகட்டத்தில் விஜயநகர மன்னர் தென்னாட்டின் மீது படையெடுத்து வந்து, கண்ணனூரில் முகாமிட்டார்கள். அப்போது மாரியம்மனை வழிபட்டு, தாங்கள் தென்னாட்டில் வெற்றி பெற்றால் அம்மனுக்கு கோயில் கட்டி வழிபடுவதாக சபதம் செய்தார்கள். அதன்படியே வெற்றி பெறவே, கோயிலைக் கட்டினார்கள். விஜயரெங்க சொக்கநாத நாயக்கர் காலத்தில் கி.பி. 1706-ல் அம்மனுக்கு தனியாக கோயில் அமைத்தார்கள் என்று வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன. சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் தோற்றுவிக்கப்பட்ட கண்ணனூர் மாரியம்மன் கோயில் இன்று, ”சமயபுரம் மாரியம்மன்” கோயிலாக மாறி புகழ்பெற்று விளங்குகிறது.

மூலவரான மாரியம்மன் எட்டு கைகளுடன், தலை மாலை கழுத்தில், சர்ப்பக் கொடையுடன், ஐந்து அசுரர்களின் தலைகளைத் தன் காலால் மிதித்து தனது சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் படி இருக்கிறார். பெருவளை வாய்க்கால் மற்றும் மேற்கே உள்ள மாரி தீர்த்தம் (தெப்பக்குளம்)இக்கோயிலின் தீர்த்தங்களாகும். இக்கோயிலின் தல மரம் வேப்ப மரமாகும்.

அம்மனை வழிபட தமிழகம் மட்டுமன்றி வெளி மாநிலத்தவரும், பிற நாட்டு சுற்றுலாப் பயணிகளும் வருகின்றனர். செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் சித்திரைத் தேர்த்திருவிழா, ஆடி வெள்ளி, பூச்சொரிதல் விழா போன்ற விழாக்காலங்களிலும் கூட்டம் அதிகமாகிறது. ஆடி மாதத்தில் எல்லா வெள்ளிக் கிழமைகளிலும் கூட்டம் கட்டுக்கடங்காத அளவில் இருக்கும். குறிப்பாக ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

சமயபுரம் சித்திரைத்  திருவிழாஅழைப்பிதழ் இனி தருகின்றோம். வாய்ப்புள்ள அன்பர்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெறுமாறு வேண்டுகின்றோம்.

சமயபுரத்தில் மாபெரும் விழாவான சித்திரை பெருந்திருவிழா வருகிற (7.4.19) ஞாயிற்றுக்கிழமை முதல் (19.4.19) வெள்ளிக்கிழமை வரையும் மற்றும் திருத்தேர் முடிந்து எட்டாம் திருநாள்(23.4.19) செவ்வாய்கிழமை நடைபெறும்.

முதல் திருநாள்:

7.4.2019 ஞாயிற்றுக்கிழமை பங்குனி மாதம் 24ம் நாள் காலை 6-30 மணிக்கு மேல் 8-00 மணிக்குள் கொடியேற்றம்,இரவு 7-00 மணிக்கு தாய் மகமாயிமர கேடயத்தில் வாகனத்தில் திருவீதி உலாவில் பக்தர்களுக்கு காட்சி தந்து மூலஸ்தானம் வந்தடைவாள்.

இரண்டாம் திருநாள் :

8.4 .2019 திங்கள்கிழமை,பங்குனி மாதம் 25ம் நாள் காலை 10.00 மணிக்கு தாய்மகமாயி பல்லக்கில் புறப்பாடகி ஆஸ்தான மண்டபம் சென்றடைதல்.
மாலை 5.00 மணிக்கு தாய் மகமாயிக்கு ஆஸ்தான மண்டபத்தில் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

இரவு 8 - 00 மணிக்கு தாய்மகமாயி 

மரசிம்மவாகனத்தில் திருவீதி உலாவில் பக்தர்களுக்கு காட்சி தந்து மூலஸ்தானம் வந்தடைவாள்.

மூன்றாம் திருநாள் :

9.4.2019 செவ்வாய்கிழமை,பங்குனி மாதம் 26ம் நாள் காலை 10.00 மணிக்கு தாய்மகமாயி பல்லக்கில்புறப்பாடகி ஆஸ்தான மண்டபம் சென்றடைதல்.

மாலை 5.00 மணிக்கு தாய் மகமாயிக்கு ஆஸ்தான மண்டபத்தில் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

இரவு 8 - 00 மணிக்கு தாய் மகமாயி மரபூதவாகனத்தில் திருவீதி உலாவில் பக்தர்களுக்கு காட்சி தந்து மூலஸ்தானம் வந்தடைவாள்.

நான்காம் திருநாள்:

10.4.2019 புதன்கிழமை,பங்குனி மாதம் 27ம் நாள் காலை 10.00 மணிக்கு தாய்மகமாயி பல்லக்கில் புறப்பாடகி ஆஸ்தான மண்டபம் சென்றடைதல்.

மாலை 5.00 மணிக்கு தாய் மகமாயிக்கு ஆஸ்தான மண்டபத்தில் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

இரவு 8.00 மணிக்கு தாய்மகமாயி அன்னவாகனத்தில் திருவீதி உலாவில் பக்தர்களுக்கு காட்சி தந்து மூலஸ்தானம் வந்தடைவாள்.

ஐந்தாம் திருநாள் :

11-4-2019 வியாழக்கிழமை,பங்குனி மாதம் 28ம் நாள் காலை 10.00 மணிக்கு தாய்மகமாயி பல்லக்கில் புறப்பாடகி ஆஸ்தான மண்டபம் சென்றடைதல்.

மாலை 5.00 மணிக்கு தாய் மகமாயிக்கு ஆஸ்தான மண்டபத்தில் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

இரவு 8.00 மணிக்கு தாய்மகமாயி ரிஷபவாகனத்தில் திருவீதி உலாவில் பக்தர்களுக்கு காட்சி தந்து மூலஸ்தானம் வந்தடைவாள்.

ஆறாம் திருநாள் :

12.4.2019 வெள்ளிக்கிழமை,பங்குனி மாதம் 29ம் நாள் காலை 10.00 மணிக்கு தாய்மகமாயி பல்லக்கில் புறப்பாடகி ஆஸ்தான மண்டபம் சென்றடைதல்.

மாலை 5.00 மணிக்கு தாய் மகமாயிக்கு ஆஸ்தான மண்டபத்தில் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

இரவு 8.00 மணிக்கு யானை வாகனத்தில் திருவீதி உலாவில் பக்தர்களுக்கு காட்சி தந்து மூலஸ்தானம் வந்தடைவாள்.

ஏழாம் திருநாள் :

13.4 .2019 சனிக்கிழமை,பங்குனி மாதம் 30ம் நாள் காலை 10.00 மணிக்கு தாய்மகமாயி பல்லக்கில் புறப்பாடகி ஆஸ்தான மண்டபம் சென்றடைதல்.

மாலை 5.00 மணிக்கு தாய் மகமாயிக்கு ஆஸ்தான மண்டபத்தில் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

இரவு 8.00 மணிக்கு தாய்மகமாயி சேஷவாகனத்தில் திருவீதி உலாவில் பக்தர்களுக்கு காட்சி தந்து மூலஸ்தானம் வந்தடைவாள்.

எட்டாம் திருநாள்:

14.4.2019 ஞாயிற்றுகிழமை, சித்திரை மாதம் 1ம் நாள் காலை 10-00 மணிக்கு தாய் மகமாயி பல்லக்கில் புறப்பட்டு வழி நடை உபயங்கள் கண்டருளி பகல் 12.00 மணிக்கு இனாம் சமயபுரத்தில் அருள் புரியும் தன் தாய் வீடான ஆதி மாரியம்மன் திருக்கோவில் சென்றடைவாள்.

மறுநாள் அதிகாலை(15.4.19) திங்கள்க்கிழமை சிறப்பு அபிஷேகம் கண்டருளி அதிகாலை 6.00 மணிக்கு மரகுதிரைவாகனத்தில் புறப்பட்டு வழிநடை மண்டகபடி உபயங்கள் கண்டருளி காலை 10.00 மணிக்கு மூலஸ்தானம் வந்தடைவாள்.

ஒன்பதாம் திருநாள் :

15.4.2019 திங்கள்கிழமை,சித்திரை மாதம் 2ம் நாள் காலை 10.00 மணிக்கு தாய்மகமாயி பல்லக்கில் புறப்பாடகி ஆஸ்தான மண்டபம் சென்றடைதல்.

மாலை 5.00 மணிக்கு தாய் மகமாயிக்கு ஆஸ்தான மண்டபத்தில் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

வருடத்திற்க்கு ஒருநாள் மட்டுமே புறப்பாடு ஆகும் ஆயிரம் கண்ணுடையாள் இரவு 8.00 மணிக்கு வெள்ளி குதிரை வாகனத்தில் புறப்பாடாகி வழி நெடுகிலும் இரவு விடிய விடிய மண்டகபடி உபயங்கள் கண்டருளி மறுநாள் 16-4-2019 செவ்வாய்கிழமை காலை 7-00 மணிக்கு மூலஸ்தானம் வந்தடைவாள்.

பத்தாம் திருநாள்

16-4-2019 செவ்வாய்கிழமை,சித்திரை மாதம் 3ம் நாள் உலகிலுள்ள ஜீவராசிகளை காக்கும் பொருட்டு உலகநாயகியாம் நம் சமயபுரத்தாள் காலை 10-30 மணிக்கு மேல் 11-30 மணிக்குள் மிதுன லக்னத்தில் திருத்தேர் வலம் வந்து பக்தகோடிகளுக்கு அருள்காட்சி தருகிறாள்.

இரவு 9-00 மணி அளவில் தாய் மகமாயி திருத்தேரிலிருந்து புறப்பாடாகி மூலஸ்தானம் வந்தடைவாள்.

பதினொன்றாம் திருநாள் :

17-4-2019 புதன்கிழமை,சித்திரை மாதம் 4ம் நாள் காலை 10.00 மணிக்கு தாய்மகமாயி பல்லக்கில் புறப்பாடகி ஆஸ்தான மண்டபம் சென்றடைதல்.

மாலை 5.00 மணிக்கு தாய் மகமாயிக்கு ஆஸ்தான மண்டபத்தில் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

இரவு 8 - 00 மணிக்கு வெள்ளி காமதேனு வாகனத்தில் புறப்பட்டு வழிநடை மண்டகபடி உபயங்கள் கண்டருளி மூலஸ்தானம் வந்தடைவாள்.

பன்னிரென்டாம் திருநாள் : 

18- 4 - 2019 புதன்கிழமை,சித்திரை மாதம் 5ம் நாள் காலை 10.00 மணிக்கு தாய்மகமாயி பல்லக்கில் புறப்பாடகி ஆஸ்தான மண்டபம் சென்றடைதல்.

மாலை 5.00 மணிக்கு தாய் மகமாயிக்கு ஆஸ்தான மண்டபத்தில் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

இரவு 8.00 மணிக்கு முத்துப்பல்லக்கு வாகனத்தில் திருவீதி உலாவில் பக்தர்களுக்கு காட்சி தந்து மூலஸ்தானம் வந்தடைவாள்.

பதிமூன்றாம் திருநாள்:

19- 4 - 2019 வியாழக்கிழமை,சித்திரை மாதம் 6ம் நாள் நண்பகல் 12.00 மணிக்கு தாய்மகமாயி பல்லக்கில் புறப்பாடகி ஆஸ்தான மண்டபம் சென்றடைதல்.

மாலை 5.00 மணிக்கு தாய் மகமாயிக்கு ஆஸ்தான மண்டபத்தில் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

இரவு 8.00 மணிக்கு தெப்ப உற்சவத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்து மூலஸ்தானம் வந்தடைவாள்.

திருத்தேர் முடிந்து எட்டாம்திருநாள் :

23.4.2018 செவ்வாய்கிழமை,சித்திரை மாதம் 10ம் நாள்,திருத்தேர் முடிந்து எட்டாம் திருநாள் மாலை 5.00 மணிக்கு திருக்கோயிலில் அபிஷேகம் கண்டருளி
இரவு 7- 00 மணிக்கு தங்க கமலவாகனத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்து மூலஸ்தானம் வந்தடைவாள்.


ஓம் தாயே போற்றி! போற்றி !!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com