சுடச்சுட

  
  IMG_20190407_074339A


  விழுப்புரம் மாவட்டத்தில், சின்னசேலம் தாலுக்காவில் உள்ள கூகையூரில் அமைந்திருக்கும், மிகவும் தொன்மையான காரியாம்புரீஸ்வரர் கோவில், கவனிப்பாரற்று இருந்த இக்கோயிலில் மேற்கூரை இல்லாமல் கருவறையில் கம்பீரமாக சிவபெருமான் காட்சி தருகிறார். 

  கோவிலைச் சுற்றிலும் முட்புதர்கள், அனாமத்தாக மயில் மேல் ஆறுமுகனும், பைரவரும், இன்ன பிற விக்ரஹங்களும் பின்னப்பட்ட நிலையில் கிடந்தன. இந்த கற்றளியின் மீதும் குளத்திலும் பிரம்மாண்டமான மரங்களும் புதர்களும் வளர்ந்திருந்தன.

  சென்னைச் சேர்ந்த அண்ணாமலையார் அறப்பணிக்குழுவினர், கடந்த 07.04.2019 ஞாயிறன்று, இக்கோவிலில் உழவாரப்பணி செய்தனர்.

  கோ பூஜை செய்து, கோவிலின் மேலும், சுற்றியும், குளத்திலும் வளர்ந்திருந்த தேவையற்ற மரங்களையும், முட்புதர்களையும் அகற்றி, கோவில் உள்ளேயும் வெளியிலும் சுத்தம் செய்தனர். கருவறை மேல் “தார்பாலின்” கொண்டு மூடி வெயிலும் மழையும் புகாமல் இருக்கும்படி செய்தனர்.

  இந்த பணியில் 70 அடியார்கள் பங்கேற்றனர். 05.04.2019 வெள்ளிமணியில் வந்த இக்கோவில் உழவாரப்பணி செய்தியைப் பார்த்து, சேலம், ஆத்தூர், பொள்ளாச்சி, முசிறி, உளுந்தூர்பேட்டை, சென்னை ஆகிய ஊர்களிலிருந்தும் அடியார்கள் கலந்து கொண்டனர். கூகையூர் மக்கள் ஒத்துழைப்பு நல்கினர்

  காலை 7 மணிக்குத் துவங்கிய இப்பணி மதியம் 1 மணிக்கு நிறைவடைந்தது.

  - எஸ். வெங்கட்ராமன்

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai