தோட்டம் வைப்பதன் தாத்பரியத்தைப் பற்றி ஜோதிடம் கூறுவதென்ன? 

விவசாயம், தோப்பு, வீட்டுத் தோட்டம் வைக்க ஜோதிட ரீதியாக நமக்கு அந்த அமைப்பு இருந்தால் மட்டும் முழுமையாகச் செய்யமுடியும்.
தோட்டம் வைப்பதன் தாத்பரியத்தைப் பற்றி ஜோதிடம் கூறுவதென்ன? 

விவசாயம், தோப்பு, வீட்டுத் தோட்டம் வைக்க ஜோதிட ரீதியாக நமக்கு அந்த அமைப்பு இருந்தால் மட்டும் முழுமையாகச் செய்யமுடியும். ஆனால் அனைவரும் தோட்டத்துறையில் ஆர்வம் காட்டவேண்டும். முடிந்தவரை முயற்சி செய்து ஒன்று, இரண்டு செடிகளாவது வைக்கவேண்டும். அக்காலங்களில் அனைத்து வீடுகளிலும் ஒரு துளசி செடியாவது இருக்கும். காலையில் எழுந்தவுடன் குளித்து கடவுளை வணங்கி, பச்சைநிற துளசியை பிரதக்ஷணம் செய்து பிராத்திக்கும்பொழுது ஒருவகை அழுத்தம் (stress) குறையும். இந்த சிறுதோட்டம் ஆன்மாவைச் சுத்தம் செய்யவந்த அருமருந்து. 

ஜோதிடமும் தோட்டமும் ஒன்றோடு ஒன்று ஒரு இணைப்பு (interlink) எப்படி எண்ணுகிறீர்களா? எடுத்துக்காட்டாக  ஜோதிடத்தில் சூரியன் நீச்சமான அனைவருக்கும் கோதுமை, சோளம், சிவப்பு அரிசி, குங்குமப்பூ, செம்பருத்திப்பூ,  மிளகு  உணவுகளை உட்கொள்ளவேண்டும்.  அதை ஜோதிடரை அணுகிச் சரியான முறையில் கண்டறிந்து அதற்குரிய மருத்துவ உணவுகளை உட்கொள்ள வேண்டும் மற்றும் தோட்டத்தில் வளர்க்கவேண்டும்.

தொட்டியில் ஜோதிடமா?

ராசி மற்றும்  நட்சத்திரத்துக்குரிய மரங்களைச் செடிகளை வளர்த்து அல்லது கோவில் தோட்டத்தில் நற்று அதைப் பராமரிக்கத் தொகை கொடுத்து நம் தோஷத்தைக் குறைக்கச் செய்யலாம். இதுவும் ஒருவகை பரிகாரம் தான். வீட்டில் தோட்டம் வைத்து அதற்குரிய பாதிப்பு கிரகங்களை வணங்கினால் ஜாதகருக்கு தோஷ நோயை முறியடிக்கும் சிறு மருந்தாக மற்றும் பரிகாரமாக இருக்கும்.  கிரகங்களின் பாதிப்பு தாவரங்களைக் கொண்டு கடுகளவு குறைக்கலாம். கர்மாவை முழுமையாகக் குறைக்க முடியாது 0.25% குறிக்கமுடியும். செடிகளின் மூலமாக ஆசீர்வாதம் பெருகும்.

கடவுளுக்கு எவ்வாறு படைக்க வேண்டும்

நம் உழைப்பால் வளர்க்கப்பட்ட தாவரங்களை அதில் உள்ள  இலை, பூ, காம்பு, தண்டு மற்றும் தானியம் அனைத்தையும் பறவைகளுக்கு, மகாலக்ஷ்மியான பசுவிற்கு மற்றும் அனைத்து உயிரினத்திற்கும்  படைக்க வேண்டும். இது கடவுளுக்கு மற்றும் கிரகங்களுக்குப் படைப்பதாக ஒரு ஐதீகம். இன்றும் கிராமங்களில் விளைந்த காய், கனி, பூக்களைக் கோவிலுக்குச் சென்று அவரவர் ஐதகப்படி கடவுளுக்குப் படைக்கின்றனர்.

ஜாதகருக்குரிய மந்திரங்களைத் தினமும் அந்தந்த செடிகளுக்கு அருகில் ஸ்லோகங்களை ஜபித்தால் உங்களுக்குரிய கஷ்டங்கள் குறையும். சித்தர்கள் தவிர உணவுகள் மூலம் கிரகங்களை வெல்ல முடியும் என்று பல்வேறு கிரந்தங்களில் கூறியுள்ளனர். ஜோதிட அடிப்படையில் சுயஜாதகத்தில் பலவீனமாக இருக்கும் கிரகங்களின் வலுவினை அதிகரிக்க அந்தந்த கிரகங்களுக்கு ஏற்றார்போல் தாவரங்களை வளர்க்க உதவவேண்டும்.

மனைக்கு ஆகா விருட்சங்கள்

சிலவகை கிரகத்துக்குரிய மரங்கள் வீட்டில் வளர்க்கக்கூடாது, அவைகளை நாம் கோயிலிலோ, தோப்பிலோ வளர்க்க வேண்டும். 

பருத்தி, அகத்தி, பனை, நாவல், அத்தி, எருக்கு, வெள்ளெருக்கு, புளியமரம், கருவேலன், முருங்கை, கல்யாண முருங்கை, கள்ளி, கருவூமத்தை, இலவம், வில்வம், உருத்திராட்சம், உதிரவேங்கை என்று 17 வகை மரங்களை வீட்டில் வளர்க்கக் கூடாது.  

"பருத்தியகத்தி பனை நாவலத்தியும் எருக்கு வெள்ளெ
ருக்கு ஏற்றபுளி வேலன் முறுக்கு

கல்யாண விருட்ச மும் செருக்குமே பெரும் பாதாள 
மூலியும் கரும்பூ மத்தை இலவமும்

வில்வமும் உருத்திராட்ச விருட்சமும் உதிர வேங்கை
ருத்தமாம் பத்தேழு விருட்ச மும்

நிருத்தஞ் செய்திடும் கேளுங் குடிகட்கே குடியான 
விந்திரன் போல் வாழ்ந்திட்டாலும்

குடிகெடுக்கு மாகாத விருட்சமப்பா மிடியாகி குடியதுவும் 
அந்தரமாகும் மீதுலகில் ராசாதி

ராசன் மன்னர் அடிமையாய் மானிடர்க்கு இடறுமாகி 
அப்பனே நாடு நகர் மதியும் விட்டு

குடியிழந்து மாடுமுதல் வீடிழந்து குருபரனே 
பரதேசியாயிருப்பார் பாரே"  

 - அகத்தியர் புனசுருட்டு 500

எந்தெந்த கிரகங்கள் அளவைக் கூட்ட அந்தந்த மரங்களுக்கு நீர் ஊற்றிப் பாதுகாத்து வந்தால் அதன் தாக்கம் குறையும் என்பது என் ஆராய்ச்சி. இன்னும் கிரகங்களின் மரங்களைப் பற்றிய விளக்கம் தொடரும்.

- ஜோதிட சிரோன்மணி பார்வதிதேவி

தொலைபேசி : 8939115647

மின் அஞ்சல் : vaideeshwra2013@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com