Enable Javscript for better performance
இந்த வார பலன்கள்: எந்த ராசிக்காரர்களுக்கு யோகத்தைத் தரப்போகிறது?- Dinamani

சுடச்சுட

  

  இந்த வார பலன்கள்: எந்த ராசிக்காரர்களுக்கு யோகத்தைத் தரப்போகிறது?

  Published on : 12th April 2019 11:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  prediction

  12 ராசிக்காரர்களுக்குமான இந்த வார (ஏப்ரல் 12 - ஏப்ரல் 18) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பலனடைவோம். 

  மேஷம்  (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

  சந்தோஷமான காலமிது. உங்களின் கோரிக்கைகள் நிறைவேறும். தேவைகளுக்கு ஏற்ற செலவுகளைச் செய்வீர்கள். தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றம் தென்படும். ஆன்மிக தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள்.

  உத்தியோகஸ்தர்களுக்கு அனைத்து வேலைகளும் திட்டமிட்டது போல் நடக்கும். உழைப்புக்குத் தகுந்த ஊதியம் பெறுவீர்கள். சிலருக்கு பதவி உயர்வு பெறும் வாய்ப்பு உண்டு. வியாபாரிகளுக்கு இது லாபகரமான நேரம். வாடிக்கையாளர்களின் ஆதரவுடன் புதிய கடைகளைத் திறப்பீர்கள். விவசாயிகள் பிற்காலத் திட்டங்களுக்கு செலவு செய்ய நேரிடும். நீர்ப்பாசனத்தைப் பெருக்கி, நல்ல விளைச்சல் பெற முனைவீர்கள். 

  அரசியல்வாதிகள் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு பெயரைக் கெடுத்துக்கொள்ள வேண்டாம். திட்டமிட்ட வேலைகளில் கண்ணும் கருத்துமாய் இருக்கவும். கலைத்துறையினரின் செயல்கள் புதிய வடிவத்தில் மக்களைச் சென்றடையும். பெண்மணிகள் ஆடை, ஆபரணங்களை வாங்கும் ஆசையை குறைத்துக் கொள்ளவும். மாணவமணிகளுக்கு படிப்பில் சற்று குளறுபடியான சூழல் நிலவும். 

  பரிகாரம்: விநாயகரை அருகம்புல் மாலை சாற்றி வழிபட்டு வரவும். 

  அனுகூலமான தினங்கள்: 12, 13. 

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}
  ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

  பொறுமையுடன் செயல்பட வேண்டிய காலமிது. திட்டமிட்ட பணிகளில் இடையூறுகள் தோன்றி மறையும். எனினும் மனம் தளர மாட்டீர்கள். ஆன்மிகச் சிந்தனைகள் தோன்றி நம்பிக்கைகள் பலப்படும். ஷேர் மார்க்கெட் துறைகளில் ஈடுபட வேண்டாம்.

  உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளில் கவனம் செலுத்தவும். சக ஊழியர்களை நம்பி உங்கள் பொறுப்புகளை ஒப்படைப்பதைத் தவிர்க்கவும். வியாபாரிகள் எதிலும் கருத்துடன் செயல்பட்டால் வரவில் சங்கடம் இராது. கணக்கு வழக்குகளில் கவனமாக இருக்கவும். விவசாயிகளுக்கு மகசூல் மந்தமாக இருக்கும். புதிய நிலங்களை குத்தகைக்கு எடுக்க வேண்டாம். 

  அரசியல்வாதிகள் திறமையாகப் பேசி, மற்றவர்களைக் கவருவார்கள். இருப்பினும் கட்சி மேலிடத்தின் கோபத்திற்கு ஆளாகாமல் நடந்துகொள்வது அவசியம். 
  கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்களில் நல்ல வருமானம் கிடைக்கும். விருந்து கேளிக்கைகளில் கலந்து கொள்வீர்கள். பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை சொல்லிக்கொள்ளும்படியாக இருக்காது. மாணவமணிகள் கல்வியில் முன்னேறுவதற்குக் கடினமாக உழைப்பார்கள்.

  பரிகாரம்: செவ்வாயன்று முருகப்பெருமானையும் அங்காரகனையும் வணங்கவும். 

  அனுகூலமான தினங்கள்: 12, 14. 

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}
  மிதுனம் (மிருகசீரிஷம்3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

  பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். வெற்றிகள் குவியும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். கொடுத்த வாக்கை எப்பாடுபட்டாவது காப்பாற்றி விடுவீர்கள். உடன்பிறந்தோர் வகையில் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும்.

  உத்தியோகஸ்தர்களின் கோரிக்கைகள் நிறைவேறும். கொடுத்த வேலைகளை நிதானமாகச் செய்யவும். வியாபாரிகளுக்கு இது லாபகரமான காலம். பொருள்களின் விற்பனை நல்ல முறையிலேயே நடக்கும். விவசாயிகள் கையிருப்புப் பொருள்கள் மீது அக்கறை காட்டவும். சந்தைகளின் விலைக்குத் தகுந்தாற்போல் தானியங்களின் விலையை நிர்ணயித்து லாபம் பெறலாம்.

  அரசியல்வாதிகளுக்கு பதவி  உயர்வு கிடைக்கும். உடல்சோர்வைப் பொருட்படுத்தாமல் கட்சிப் பணிகளில் ஈடுபடுவீர்கள். கலைத்துறையினர் உழைப்புக்குத் தகுந்த பலனை அடைவார்கள். வரவேற்புகள் சற்று குறையும். 

  பெண்மணிகளுக்கு கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் நன்மதிப்பு கிடைக்கும். கணவர் வழி உறவினர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்லவும். மாணவமணிகள் கடுமையாக உழைத்துப் படித்தால் எதிர்பார்த்த மதிப்பெண்கள் பெறலாம்.

  பரிகாரம்: வெள்ளிக்கிழமையில்  மகாலட்சுமியை தீபமேற்றி வழிபடவும். அனுகூலமான தினங்கள்: 13, 14. சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}
  கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

  பொருளாதார சூழல் திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் குதூகலம் நிறைந்திருக்கும். உடன்பிறந்தோரால் நன்மையடைவீர்கள். எதிரிகளும் நேசக்கரம் நீட்டுவர். வாகன யோகம் உண்டாகும். சுபச் செய்திகளைக் கேட்பீர்கள். 

  உத்தியோகஸ்தர்களுக்கு மனதை அரித்து வந்த பிரச்னைகள் விலகும்.  மேலதிகாரிகள் உங்கள் சமயோஜித புத்தியைப் பாராட்டுவார்கள். வியாபாரிகள் புதிய முயற்சிகளை ஒத்தி வைக்கவும். நண்பர்களின் ஆலோசனைப்படி நடக்கவும். விவசாயிகளுக்கு கொள்முதல் லாபம் சிறப்பாக இருக்கும். கால்நடைகளால் நல்ல வருமானம் கிடைக்கும். 

  அரசியல்வாதிகளுக்கு கட்சியில் முக்கியப் பொறுப்புகள் கிடைக்கும். தொண்டர்கள் ஆதரவு அளிப்பார்கள். சக கலைஞர்களுடன் விரோதம் பாராட்டாமல் நட்புடன் இருந்தால் மேலும் சிறப்படையலாம். 

  பெண்மணிகளுக்கு இல்லத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்கள் உங்களை அணுகிப் பயன் பெறுவார்கள். மாணவ
  மணிகள் படிப்பில் சற்று கூடுதல் கவனம் செலுத்தவும். பெற்றோரை தொந்தரவு செய்வதைத் தவிர்க்கவும்.

  பரிகாரம்: ராமபக்த ஆஞ்சநேயரை வழிபட்டு வரவும். 

  அனுகூலமான தினங்கள்: 13, 15. 

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}
  சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

  இல்லத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு இது சரியான நேரம். எதிர்பார்த்த பொருளாதார வளர்ச்சி ஏற்படும். திட்டமிட்ட காரியங்கள் வெற்றியைத் தரும். இக்கட்டான சமயங்களில் உங்கள் சமயோஜித புத்தி கைகொடுக்கும். 

  உத்தியோகஸ்தர்கள் எதிர்வரும் இடையூறுகளைச் சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். திட்டமிட்ட வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். வியாபாரிகள் விற்பனைப் பிரதிநிதிகளை நியமித்து, வியாபாரத்தைப் பெருக்குவார்கள். விவசாயிகளுக்கு வங்கிகளிடமிருந்து கடன் கிடைக்கும். நீர்வளத்தால் மகசூலைப் பெருக்கிக் கொள்வீர்கள். 

  அரசியல்வாதிகள் எதிரிகளிடம் கவனமாக இருக்கவும். கட்சித் தலைமையிடம்  நல்லமுறையில் நடந்துகொண்டு பெயரைக் காப்பாற்றிக் கொள்ளவும். கலைத்துறையினருக்கு புகழும் பாராட்டும் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். புதிய முயற்சிகளை இந்த காலகட்டத்தில் எடுக்க வேண்டாம். 

  பெண்மணிகளுக்கு குடும்பத்தில் சாதகமான நிலை தென்படும். பக்குவமான பேச்சினால் அனைவரையும் கவர்வீர்கள். மாணவமணிகள் கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள்.

  பரிகாரம்: வியாழன்று குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபடவும். 

  அனுகூலமான தினங்கள்: 12, 15.

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}
  கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

  குடும்பத்தில் சந்தோஷம் நிறையும். உங்கள் ஆசைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். அலைபாயும் மனதைக் கட்டுப் படுத்துங்கள். உங்கள் உழைப்பு உயர்ந்த நிலையை தேடித் தரும். தேக ஆரோக்கியம் நன்றாக இருக்கும். 

  உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும். திட்டமிட்ட வேலைகள் வெற்றிகரமாக முடியும். வியாபாரிகள் வியாபாரத்தில் மந்தநிலையை காண்பார்கள். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் சில பின்னடைவுகள் ஏற்படலாம். விவசாயிகள் அதிக மகசூலைப் பெறுவார்கள். அதனால் புதிய வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள்.

  அரசியல்வாதிகள் தங்கள் முயற்சிக்கேற்ற பொறுப்புகளைப் பெறுவார்கள். திட சிந்தனையுடன் செயலாற்றி வெற்றியடைவார்கள். கலைத்துறையினர் புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். பணவரவும் நன்றாக இருக்கும். 

  பெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். பேசும் நேரத்தில் நிதானம் தேவை. வீடு, வாகனம் வாங்கும் எண்ணங்களைத் தவிர்க்கவும். மாணவமணிகள் கல்வியில் முன்னேற அதிகமாக உழைக்கவும்.

  பரிகாரம்: சனிபகவானையும் புதனன்று பெருமாளையும் வழிபடவும். 

  அனுகூலமான தினங்கள்: 13, 16. 

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}

  துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

  எதையும் தைரியத்துடனும் ஆர்வத்துடனும் செய்து முடிப்பீர்கள். தொழிலில் ஸ்திரத் தன்மை உண்டாகும். உற்றார் உறவினர்கள் ஆதரவுக்கரம் நீட்டுவர். வழக்குகள் சாதகமாக முடியும்.  உடன்பிறந்தோர் வழியில் நன்மை உண்டாகும்.

  உத்தியோகஸ்தர்கள் உழைப்பிற்கேற்ற ஊதியத்தைப் பெறுவீர்கள். சக ஊழியர்களிடம் ரகசியங்களைப் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். வியாபாரிகளுக்கு கொள்முதல் வியாபாரம் நல்லபடியாக முடியும். புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். விவசாயிகள் கொள் முதலில் லாபத்தைக் காண்பார்கள். கால்நடை, பூச்சி மருந்துகளுக்கு செலவு ஏற்படும். 

  அரசியல்வாதிகளுக்கு அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். எதிரிகளால் தொல்லை வராது என்றாலும் கவனம் தேவை. கலைத்துறையினருக்கு வரவேற்புகள் குறைவாக இருந்தாலும் திறமைகள் குறையாது. புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. பெண்மணிகளுக்கு குடும்பத்தில் அந்தஸ்து உயரும். கணவருடனான ஒற்றுமை ஓங்கும். மாணவமணிகள் படிப்பில் அதிக மதிப்பெண்களை அள்ளுவார்கள். வெளிவிளையாட்டுகளிலும் வெற்றி பெறுவீர்கள்.

  பரிகாரம்: செந்திலாண்டவரையும் குலதெய்வத்தையும் வழிபடவும். 

  அனுகூலமான தினங்கள்: 13, 17. 

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}
  விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

  குடும்பத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடும். எடுத்த காரியங்களை துணிச்சலுடன் நடத்தி முடிப்பீர்கள். பயணங்களால் நன்மை உண்டு. சிறு தொல்லை கொடுத்தவர்கள் அடங்கி விடுவார்கள். அதிக யோசனைகள் செய்வதைத் தவிர்க்கவும்.

  உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களின் ஆதரவுடன் எடுத்த வேலைகளை பிரச்னையின்றி முடிப்பார்கள். மேலதிகாரிகள் கொடுத்து வந்த சிரமங்களிலிருந்து விடுபடுவர். வியாபாரிகள் எதிர்பார்த்த லாபத்தை அள்ளுவார்கள். பிரயாணங்களின்போது கவனமாக இருக்கவும். விவசாயிகள் சந்தையில் போட்டிக்கு ஏற்றவாறு பொருள்களை விற்பனை செய்து லாபம் பெறுவீர்கள்.  

  அரசியல்வாதிகளைத் தேடி புதிய பதவிகள் வரும். தொண்டர்களின் ஆதரவு அமோகமாக இருக்கும். கலைத்துறையினருக்கு இது சாதகமான காலம். முயற்சிகள் வெற்றியடையும். புதிய வடிவத்தில் படைப்புகளை மக்களிடம் கொண்டு சென்று பாராட்டு பெறுவீர்கள். 

  பெண்மணிகள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடவேண்டாம். எதிலும் முடிவுகள் எடுக்கும்போது யோசித்து செயல்படவும். மாணவமணிகள் வெளிவிளையாட்டுகளில் பெற்றி பெறுவீர்கள்.

  பரிகாரம்:  கால பைரவரை தேய்பிறை அஷ்டமியில் தீபமேற்றி வழிபடவும்.

  அனுகூலமான தினங்கள்: 13, 16.

  சந்திராஷ்டமம்: 12.

  {pagination-pagination}
  தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

  பொருளாதாரச் சூழல் சிறப்பாக இருக்கும். எந்த செயலிலும் உங்கள் தனித்தன்மை வெளிப்படும். எதிரிகள் பலம் குறையும். உடல்நலத்தில் கவனமாக இருக்கவும். பயணங்களால் அனுகூலங்களைப் பெறுவீர்கள்.

  உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் கெடுபிடிகளிலிருந்து விடுபட்டு பாராட்டைப் பெறுவார்கள். உயர் பதவிகள் தேடி வரும். வியாபாரிகளுக்கு வார இறுதியில் நல்ல லாபம் கிடைக்கும். சிறு முதலீடுகளில் ஈடுபட்டு வியாபாரத்தை விரிவு படுத்தலாம். விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். கால்நடைகளின் மூலம் நல்ல லாபத்தை அடைவீர்கள்.

  அரசியல்வாதிகள் எடுத்த காரியங்களை வெற்றிகரமாக முடிப்பார்கள். பலருடைய பாராட்டையும் பெறுவார்கள். கலைத்துறையினர் முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்.

  பெண்மணிகள் குடும்பத்தில் சிறு குழப்பங்கள் ஏற்பட்டாலும் இறுதியில் அதிலிருந்து விடுபடுவீர்கள். கணவரிடம் அன்பும் பாசமும் அதிகரிக்கும். மாணவமணிகள் படிப்பில் அதிக மதிப்பெண்களைப் பெற்று தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வார்கள். 

  பரிகாரம்: காலபைரவரையும் சனீஸ்வரரையும் வழிபட்டு வரவும். 

  அனுகூலமான தினங்கள்: 15, 16. 

  சந்திராஷ்டமம்: 13, 14.

  {pagination-pagination}

  மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

  குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். புதிய தொழில்நுட்பங்களை தெரிந்து கொள்வீர்கள். கோட்காமலேயே நண்பர்கள் உதவுவார்கள். விடாமுயற்சிகள் வெற்றி பெறும். புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். 

  உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளை உற்சாகமாக செய்து முடிப்பர். பணவரவும் சீராக இருக்கும். வியாபாரிகளுக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய முதலீடுகளில் ஈடுபட்டு லாபமடைவீர்கள். இருப்பினும் அதிகம் உழைக்க வேண்டி வரும். விவசாயிகள் புதிய நிலங்களை வாங்குவார்கள். மகசூல் அதிகரித்து நல்ல லாபம் காண்பீர்கள். 

  அரசியல்வாதிகளுக்கு புதிய பதவிகள் கிடைக்கும். கட்சி மேலிடம் உங்களுக்கு ஆதரவு நல்கும். கலைத்துறையினர் பல தடைகளைத் தாண்டி புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். வருமானம் குறைந்திருக்கும். 

  பெண்மணிகள் கணவரிடம் ஒற்றுமையோடு இருப்பர். காரணமில்லாமல் மனதில் அமைதி குறைந்திருக்கும். மாணவமணிகள் கூடுதல் மதிப்பெண்களை அள்ளுவார்கள். விளையாட்டிலும் சுறுசுறுப்புடன் ஈடுபட்டு மகிழ்வார்கள்.

  பரிகாரம்: சனீஸ்வரருக்கு நீலாம்பரம் சாற்றி, தீபமேற்றி வழிபடவும். 

  அனுகூலமான தினங்கள்: 14, 18. 

  சந்திராஷ்டமம்: 15, 16.

  {pagination-pagination}

  கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

  செய்யும் செயல்களில் முன்னேற்றம் தென்படும். கடனிலுள்ள வீட்டை மீட்டு விடுவீர்கள். உறவினர்களால் நன்மை அடைவீர்கள். வழக்குகள் முடிவுக்கு வரும். உடல் ஆரோக்கியம் சற்று பாதிக்கப்படலாம். 

  உத்தியோகஸ்தர்கள் இயந்திர வாழ்க்கையிலிருந்து விடுபட்டு சிந்தனைகளுக்குச் செயல்வடிவம் கொடுக்க நினைப்பீர்கள். வியாபாரிகள் படிப்படியாக முன்னேற்றத்தைக் காண்பீர்கள். நண்பர்களிடம் ஒத்துழைப்பைப் பெறுவீர்கள். விவசாயிகள் கையிருப்புப் பொருள்கள் மீது அக்கறை செலுத்தவும். போட்டிக்குத் தகுந்தாற்போல் செயல்பட்டால் லாபம் பெறலாம். 

  அரசியல்வாதிகள் தொண்டர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவார்கள். சமூக சேவையில்  புதிய முயற்சிகளை மேற்கொள்வார்கள். அனுகூலமான திருப்பங்கள் உண்டு. 

  கலைத்துறையினர் சக கலைஞர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்ளவும். பெண்மணிகளுக்கு கணவருடன் நல்லுறவு நிலவும். குடும்பத்தில் வீண் செலவுகள் ஏற்படாமல் தவிர்க்கவும். மாணவமணிகள் படிப்பில் கவனம் செலுத்தவும். விளையாட்டில் எதிர்பார்த்த வெற்றிகள் கிடைக்கும்.

  பரிகாரம்: புதனன்று பெருமாளை வழிபட்டு நவக்கிரகங்களை பிரதட்சணம் செய்யவும். 

  அனுகூலமான தினங்கள்: 12, 14. 

  சந்திராஷ்டமம்: 17, 18.

  {pagination-pagination}
  மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

  சற்று செலவுகள் அதிகரிக்கும். மனதில் ஏற்படும் கவலைகள் மற்ற வேலைகளில் இடையூறுகளை ஏற்படுத்தும். உடல் ஆரோக்கியம் சுமாராக இருக்கும். எல்லோரையும் அனுசரித்துச் செல்லவும். உறவினர்கள்  உதவி செய்வார்கள். 

  உத்தியோகஸ்தர்கள் அனைத்துப் பணிகளையும் திட்டமிட்டு முடிக்கவும். கவனக்குறைவினால்  மேலதிகாரிகளின் கெடுபிடியில் சிக்க நேரிடும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் நல்ல முறையில் நடக்கும். வரவேண்டிய கடன்கள் வசூலாகும். விவசாயிகள் போட்டிகளை மிகுந்த சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். கைபொருள்களுக்கு சந்தையில் மதிப்பு அதிகரிக்கும்.

  அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும். பல வழிகளிலும் வருமானம் கிடைக்கும். தொண்டர்களை அனுசரித்துச் செல்லவும். கலைத்துறையினர் இதுவரை இருந்துவந்த பின்தங்கிய நிலையிலிருந்து விடுபடுவீர்கள். 

  பெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். உடல்நலத்தில் கவனமாக இருக்கவும். மாணவமணிகள் கல்வியில் அககறை காட்டினால் நல்ல மதிப்பெண்களைப் பெறலாம். உள்ளரங்கு விளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள்.

  பரிகாரம்:  ஸ்ரீ மகாலட்சுமியை வழிபட்டு வர சௌகரியங்கள் கூடும். 

  அனுகூலமான தினங்கள்: 17, 18. 

  சந்திராஷ்டமம்: இல்லை.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai