ஆட்சீஸ்வரர் கோயில் சித்திரை பிரம்மோற்சவம்:  அதிகார நந்தி வாகனத்தில் சுவாமி வீதி உலா

மதுராந்தகத்தை அடுத்த அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோயில் சித்திரை பிரம்மோற்சவத்தின் 3-ஆம் நாளான வெள்ளிக்கிழமை, அதிகார நந்தி வாகனச்
அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோயில் சித்திரை பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான வெள்ளிக்கிழமை, அதிகார நந்தி வாகனத்தில் வீதியுலா வந்த ஆட்சீஸ்வரர், இளங்கிளியம்மன்.
அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோயில் சித்திரை பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான வெள்ளிக்கிழமை, அதிகார நந்தி வாகனத்தில் வீதியுலா வந்த ஆட்சீஸ்வரர், இளங்கிளியம்மன்.


மதுராந்தகத்தை அடுத்த அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோயில் சித்திரை பிரம்மோற்சவத்தின் 3-ஆம் நாளான வெள்ளிக்கிழமை, அதிகார நந்தி வாகனச் சேவை, சங்கு தீர்த்தக் குளக்கரையில் திருஞானசம்பந்தருக்கு திருமுலைப்பால் அருளல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தொண்டை மண்டலத்தில் தொன்மையான, வரலாற்றுச் சிறப்புகளைக் கொண்ட அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் சித்திரை பிரம்மோற்சவம் கடந்த 10-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 
அதைத் தொடர்ந்து சந்திரப் பிரபை, சூரியப் பிரபை, யாளி உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா, திருக்கல்யாணம், திருத்தேர் பவனி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. 
விழாவின் 3-ஆம் நாளான வெள்ளிக்கிழமை காலை 6மணிக்கு மங்கல இசையுடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. காலை 8.15 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட இளங்கிளியம்மன் காமதேனு வாகனத்திலும், ஆட்சீஸ்வரர் அதிகார நந்தி வாகனத்திலும் எழுந்தருளினர்.
 அப்போது, கோயில் தலைமை அர்ச்சகர் சங்கர் சிவாச்சாரியார் கற்பூர தீபத்தை ஏற்றி பூஜை செய்தார். அதையடுத்து, கோபுர தரிசனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதன் பின்னர் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சுவாமியும் அம்மனும் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
அதைத் தொடர்ந்து, அச்சிறுப்பாக்கம் சங்கு தீர்த்த குளக்கரையில் திருஞானசம்பந்தருக்கு திருமுலைப்பால் அருளல், பஞ்சமூர்த்தி சுவாமிகளுக்கு மகா அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டன.
 இரவு இளங்கிளி அம்மன் அன்னப்பறவை வாகனத்திலும், ஆட்சீஸ்வரர் பூதவாகனத்திலும் பவனி வந்தனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com