மதுரை மீனாட்சி அம்மனுக்கு இன்று பட்டாபிஷேகம்

சித்திரைத் திருவிழாவையொட்டி மதுரை அருள்மிகு மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெறுகிறது.
மதுரை மீனாட்சி அம்மனுக்கு இன்று பட்டாபிஷேகம்

சித்திரைத் திருவிழாவையொட்டி மதுரை அருள்மிகு மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெறுகிறது.
 மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் சித்திரைத் திருவிழா ஏப்ரல் 8-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. திருவிழாவையொட்டி மீனாட்சி சுந்தரேசுவரர் பிரியாவிடை தினசரி காலை, மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
 இந்நிலையில், சித்திரைத் திருவிழாவின் ஏழாம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு மீனாட்சி சுந்தரேசுவரர், பிரியாவிடை தங்கச்சப்பரத்தில் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளில் வலம் வந்தனர். மேலும் பகல் 12 மணிக்கு கோயிலுக்குள் மீனாட்சி நாயக்கர் மண்டகப்படிக்கு சுவாமி அம்மன் எழுந்தருளினர். அங்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து மீனாட்சி சுந்தரேசுவரர் நந்திகேசுவரர், யாளி வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளில் வலம் வந்து அருள் பாலித்தனர். முன்னதாக காலை 8 மணிக்கு தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு புது பஞ்சாங்கம் வாசித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
 மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம்: சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி திங்கள்கிழமை காலை 8 மணிக்கு கோயிலில் சபாநாயகர் புறப்பாடாகி, ஊடல் லீலை நடைபெறுகிறது. பின்னர், இரவு 8 மணிக்கு மீனாட்சி அம்மன், கோயிலில் ஆறுகால் மண்டபத்தில் எழுந்தருள்கிறார். அங்கு சிறப்பு பூஜைகளுக்கு ப்பிறகு, மீனாட்சி அம்மனுக்கு கிரீடம் சாற்றி செங்கோல் ஒப்படைவு நிகழ்வு நடைபெறுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com