சுடச்சுட

  

  ஸ்ரீக்ஷேத்ர சகடபுரம் ஸ்ரீவித்யாபீடத்தில் ஸ்ரீப்ரம்ம கும்பாபிஷேகம்: ஏப்.28-ம் தேதி நடைபெறுகிறது!

  By DIN  |   Published on : 17th April 2019 02:41 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Shakatapuram_temple

   

  கர்நாடக மாநிலம், சிக்மகளூர் மாவட்டம், கொப்பா தாலுக்காவில் உள்ள ஸ்ரீக்ஷேத்ர சகடபுரத்தில் துங்கா நதிக்கரையில் அமைந்துள்ளது ஸ்ரீவித்யாபீடம். இங்கு, ஸ்ரீவித்யா ராஜராஜேஸ்வரி அமர்ந்த கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள்.

  இக்கோயிலில், இம்மாதம் 15-ம் தேதி தொடங்கி, 29-ம் தேதி வரை ஸ்ரீப்ரம்ம கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேக விழாவின் பகுதிகளாக தேவதா பிரதிஷ்டை, மூலாலய கும்பாபிஷேகம், சஹஸ்ர நாளீகர மஹா கண யாகம், ஸ்ரீ சஹஸ்ர சண்டி யாகம், ஸ்ரீ ஆதிருத்ரம் ஆகியவையும் நடைபெற உள்ளன. 28-ம் தேதி, ஸ்ரீஸ்ரீஆசார்ய மஹா ஸ்வாமிகளால் ராஜகோபுர மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

  பத்து நாள்கள் நடைபெறும் இக்கும்பாபிஷேக விழாவின்போது வெவ்வேறு வாகனங்களில் ஸ்ரீ கிருஷ்ணர் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அத்துடன், பல வகையான ஹோமங்களும் நடைபெறுகின்றன. பக்தர்கள் அனைவரும் திரளாக வந்திருந்து இறைவனின் அருளைப் பெற கோயில் நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

  மேலதிக விவரங்களுக்கு ஸ்ரீகார்யம் எம். சந்திரமௌலீஸ்வரன் - 08265 - 244066, 08265 - 244005.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai