Enable Javscript for better performance
இந்த வாரம் திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு?- Dinamani

சுடச்சுட

  
  astro

   

  12 ராசி அன்பர்களுக்கான இந்த வார (ஏப்ரல்  19 - ஏப்ரல் 25) ராசி பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பலனடைவோம். 

  மேஷம்(அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

  உங்கள் அந்தஸ்து உயரும். செயல்களை விரைந்து செய்வீர்கள். தடைகள் விலகி நலம் காண்பீர்கள். உங்களின் தெளிவான சிந்தனைகளை மற்றவர்கள் பாராட்டுவார்கள். உடல் ஆரோக்கியம் பலப்படும். குடும்பத்தில் சந்தோஷம் நிறையும்.  

  உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெற்று கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வார்கள். விரும்பிய இடமாற்றத்தையும் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்களில் அனுகூலமான திருப்பம் ஏற்படும். புதிய முதலீடுகள் செய்யலாம். விவசாயிகளுக்கு சமூகத்தில் மதிப்பு உண்டாகும். கொள்முதலில் எதிர்பார்த்த லாபம் பெறுவீர்கள். 

  அரசியல்வாதிகளுக்கு கட்சியில் செல்வாக்கு உயரும். எதிரிகள் உங்களிடம் அடங்கிப்போவார்கள். சமூகத்திற்கு சேவை செய்யக்கூடிய பதவிகளைப் பெறுவீர்கள். கலைத்துறையினர் கடுமையாக உழைத்தால்தான் நற்பலன் அடைய முடியும். ரசிகர்களையும் அரவணைத்துச் செல்லவும். 

  பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை அதிகரிக்கும். இல்லத்தில் தடைப்பட்டிருந்த சுப நிகழ்ச்சிகள் விரைவில் கைகூடும். மாணவமணிகள் முயற்சிக்குத் தகுந்தபடி கல்வியில் முன்னேறுவீர்கள். 

  பரிகாரம்: விநாயகரை வழிபட்டு வர நலன்கள்கூடப் பெறுவீர்கள். 

  அனுகூலமான தினங்கள்: 19, 20. 

  சந்திராஷ்டமம்: 21, 22, 23.

  {pagination-pagination}
  ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

  குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்.  பிள்ளைகள் சாதனைகள் புரிவார்கள். உங்கள் திறமைகள் பளிச்சிடும். அவ்வப்போது சிறு விரயங்களையும் சந்திப்பீர்கள். செய்தொழிலில் கடின உழைப்பை மேற்கொள்வீர்கள். பயணங்களில் புதிய அனுபவங்கள் காண்பீர்கள்.  

  உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்புக்குத் தகுந்த ஊதியம் கிடைக்கும். சக ஊழியர்களிடம் எதிர்பார்த்த உதவிகளைப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் சீராக நடக்கும். புதிய முதலீடுகளுக்கான முயற்சிகள் வெற்றியைத் தரும். விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும். உழைப்புக்கு ஏற்ற லாபம் வரும்.  கரும்பு விவசாயிகள் கூடுதல் லாபம் பெறுவர். 

  அரசியல்வாதிகளுக்கு பெயரும் புகழும் அதிகரிக்கும். திட்டமிட்ட வேலைகளில் தடைகள் ஏற்பட்டாலும் வெற்றி பெறுவீர்கள். கலைத்துறையினர் திறமைக்குத் தகுந்த வரவேற்பு பெறுவீர்கள். வளர்ச்சி அடைவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். 

  பெண்மணிகளுக்கு கணவரிடம் உள்ள ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தாரோடு அன்பு பாசத்தோடு பழகுவீர்கள். மாணவமணிகள் உழைப்புக்கேற்ற மதிப்பெண்களைப் பெறுவார்கள்.

  பரிகாரம்: ஞாயிறன்று சூரியனையும் சிவபெருமானையும் வழிபடவும். 

  அனுகூலமான தினங்கள்: 19, 21. 

  சந்திராஷ்டமம்: 24, 25.

  {pagination-pagination}
  மிதுனம் (மிருகசீரிஷம்3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

  பொருளாதாரத்தில் முன்னேற்றம் தென்படும். குடும்பத்தில் நிலவி வரும் குழப்பங்களும் சிக்கல்களும் விலகி ஒற்றுமை ஓங்கும். உறவினரை அரவணைத்துச் செல்லவும். பணவிரயம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் கவனமாக நடந்து கொள்ளவும். 

  உத்தியோகஸ்தர்களுக்கு பிரச்னைகள் குறையும். மேலதிகாரிகள் மனக்கசப்பு நீங்கி, நட்போடு நடந்து கொள்வார்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்களில் இருந்த சிரமங்கள் குறையும். வியாபாரத்தைப் பெருக்கும் எண்ணத்தைத் தள்ளிப்போடவும். விவசாயிகளுக்கு தானிய உற்பத்தி நன்றாக இருக்கும். சந்தையில் போட்டிக்கு ஏற்றவாறு பொருள்களை விற்பனை செய்யவும். 

  அரசியல்வாதிகளைத் தேடி புதிய பதவிகள் வரும். தொண்டர்களின் ஆதரவு அமோகமாக இருக்கும். எதிரிகளும் சற்று விலகியே இருப்பார்கள். கலைத்துறையினரின் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். ரசிகர்களைத் தக்க வைத்துக்கொள்ள முயற்சி மேற்கொள்ளவும். 

  பெண்மணிகளுக்கு கணவருடன் ஏற்பட்ட பிணக்குகள் நீங்கி, ஒற்றுமை அதிகரிக்கும். மாணவமணிகள் விளையாட்டுகளில் கவனமாக ஈடுபடவும்.

  பரிகாரம்: ஞாயிறன்று சூரிய வழிபாடு செய்து ஆத்ம பலத்தைக் கூட்டிக்கொள்ளுங்கள். 

  அனுகூலமான தினங்கள்:  20, 21. 

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}

  கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

  நீண்ட காலமாக நிறுவையில் இருந்த வழக்கு விவகாரங்கள் சாதகமாக முடிவடையும். உடன்பிறந்தோர் வகையில்  நன்மை அதிகரிக்கும். தந்தை வழியில் இருந்த பிணக்குகள் நீங்கும். வரவேண்டிய பணம் எவ்வகையிலாவது வந்து சேரும்.

  உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளில் கவனத்தைச் செலுத்தவும். காலநேரங்களை வீணாக்காமல் உழைத்தால் புதிய பொறுப்புகளைப் பெறலாம். வியாபாரிகள் வரவு, செலவு விஷயங்களில் கவனமாக இருக்கவும். தேவையான சரக்குகளை வாங்கி  விற்பனை செய்யவும். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். பழைய கடன்களை அடைத்த பிறகே புதிய குத்தகை எடுக்கவும். 

  அரசியல்வாதிகளைத் தேடி தொண்டர்கள் குவிந்தவண்ணம் இருப்பார்கள். அவர்களின் குறைகளை அக்கறையுடன் பரிசீலித்துத் தீர்க்க முயற்சி செய்யுங்கள். கலைத்துறையினர் பழைய ஒப்பந்தங்களை நன்றாக முடித்துக்கொடுத்து புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். 

  பெண்மணிகள் உற்றார் உறவினர்களைச் சந்தித்து உற்சாகம் அடைவர். மாணவமணிகள் படிப்பில் கவனம் சிதறாமல் இருக்கவும். பெற்றோர் ஆதரவைப் பெற்று மகிழ்வீர்கள். 

  பரிகாரம்: வெள்ளிக்கிழமையில் அம்மனை தீபமேற்றி வழிபடவும். 

  அனுகூலமான தினங்கள்: 21, 22. 

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}
  சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

  உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும். பொருளாதாரம் சீராக இருக்கும். உங்கள் செயல்கள் வெற்றியுடன் முடியும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். மதிப்பு மரியாதை உயரும். தேவைக்கேற்ப உறவினர்கள் உதவுவார்கள்.

  உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவினால் வேலைச்சுமை குறையும். சிலருக்கு விரும்பத் தகாத இடமாற்றங்கள் உண்டாகும். வியாபாரிகள் புதிய வழிகளில் வருமானத்தைப் பெருக்க முயற்சி செய்வர். கொடுக்கல் வாங்கல்களில் லாபம் காண்பார்கள். விவசாயிகளுக்கு கொள்முதலில் லாபம் இருக்கும். கால்நடைகளால் லாபம் கிடைக்கும்.  

  அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தின் ஆதரவு சுமாராகவே கிடைக்கும். அவர்களிடம் சற்று ஒதுங்கியே இருப்பது நல்லது. கலைத்துறையினருக்கு அனுகூலமான திருப்பங்கள் ஏற்படும். சக கலைஞர்களுடன் நட்புடன் பழகுவது நன்மை தரும். 

  பெண்மணிகள் அனைவரிடமும் சற்று கவனத்துடன் பழகவும். குடும்பத்தில் நடைபெறும் சுபகாரியங்கள் குழப்பத்தில் சென்று முடியும். மாணவமணிகள் கவனத்துடன் படித்துச் சிறப்படைவர். உள்ளரங்கு விளையாட்டுகளில் ஈடுபட்டு நற்பெயர் வாங்குவீர்கள்.

  பரிகாரம்: கந்தனையும் பெருமாளையும் வணங்கி வரவும். அனுகூலமான தினங்கள்: 19, 22. சந்திராஷ்டமம்:  இல்லை.

  {pagination-pagination}
  கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

  நினைத்த காரியங்கள் யாவும் வெற்றியடையும். பொருளாதார நிலை சீராக இருக்கும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். உறவினர்களின் மூலம் சிறு தொல்லைகள் ஏற்படலாம். எச்சரிக்கையாக இருக்கவும். சேமிப்பில் கவனம் செலுத்தவும்.
   
  உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்கள் ஆதரவுடன் வேலைப் பளுவைக் குறைத்துக் கொள்வீர்கள். அலுவலக வேலை விஷயமாக சிறு பயணங்களைச் செய்ய நேரிடலாம். வியாபாரிகள் தீர ஆலோசித்து செய்யும் முதலீடுகளில் பயன்பெறுவீர்கள். கூட்டாளிகளின் எண்ணங்களைப் புரிந்து நடந்துகொள்ளுங்கள். விவசாயிகளுக்கு தொட்டது துலங்கும். அனைத்து முயற்சிகளிலும் வெற்றி வாகை சூடுவீர்கள். 

  அரசியல்வாதிகளின் செயல்பாடுகள் அனைவரையும் திருப்திப்படுத்தும். கடின வேலைகளை வெற்றிகரமாக முடித்து புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வார்கள். 

  கணவரின் பாராட்டுகளைப் பெற்று மகிழ்வீர்கள். மாணவமணிகள் படிப்பில் அக்கறை செலுத்தவும். ஞாபக சக்தி வளர, விடியற்காலையில் கல்விப் பயிற்சிகளை மேற்கொள்ளவும்.

  பரிகாரம்: புதன்கிழமையில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாளை தரிசிக்கவும். 

  அனுகூலமான தினங்கள்: 19, 23. 

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}

  துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

  பொருளாதாரத்தில் வளர்ச்சி ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். திட்டமிட்ட செயல்களில் வெற்றி உண்டாகும். எவருக்கும் ஜாமீன் போடுவதோ பணம் பெற்றுத் தருவதோ கூடாது. சிக்கனமாக இருக்க பழகிக்கொள்ளவும்.

  உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். விரும்பிய இடமாற்றம் கிடைக்க வாய்ப்பு இல்லாததால் தற்போதிருக்கும் இடத்திலேயே திறம்படச் செயல்படுங்கள்.  வியாபாரிகள் நல்ல லாபத்தை அள்ளுவார்கள். சிறு தடைகள் ஏற்பட்டாலும் அவற்றைச் சமாளிக்கும் தைரியத்தைப் பெறுவீர்கள். விவசாயிகளுக்கு கடன்களால் சில வழக்கு விவகாரங்கள் உருவாகும். 

  அரசியல்வாதிகளின் பொதுச்சேவையில் அனுகூலமான திருப்பங்கள் ஏற்படும். கட்சி மேலிடத்தின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். கலைத்துறையினரின் திறமைகளுக்கு சவால்கள் உண்டாகலாம். 

  பெண்மணிகள் கணவரிடம் ஒற்றுமையுடன் இருப்பர். காரணமில்லாமல் மனதில் சற்று அமைதி குறைந்திருக்கும். உடல்நலமும் சிறிது பாதிக்கப்படலாம். மாணவமணிகளுக்கு படிப்பில் நாட்டம் அதிகரிக்கும்.

  பரிகாரம்: செந்திலாண்டவரை வணங்கி நலம் பெறுங்கள். 

  அனுகூலமான தினங்கள்: 20, 22. 

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}
  விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

  கவலைகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் சீரான நிலைமை தென்படும். உறவினர்களிடம் எதிர்பார்த்த ஆதரவைப் பெறுவீர்கள். திட்டமிட்ட வேலைகளைக் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிப்பீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். 

  உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். சிலர் அலுவலக விஷயமாக வெளியூர் செல்ல நேரிடும். வியாபாரிகள் புதிய முயற்சிகளை மேற்கொண்டு வெற்றியடையலாம். கூட்டாளிகளிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளவும். விவசாயிகளுக்கு மகசூல் குறையும். கடுமையாக உழைத்தால்தான் எதிர்பார்த்த பலனை அடைய முடியும்.

  அரசியல்வாதிகள் தங்கள் செயல்களில் வெற்றியைக் காண்பார்கள். கட்சி நலனுக்காக நீங்கள் தீட்டும் திட்டங்களை மேலிடம் பாராட்டும். கலைத்துறையினரைத் தேடி புதிய வாய்ப்புகள் வரும். தொழிலில் நீண்ட நாட்களாக நிலவி வந்த போட்டி பொறாமைகள் விலகும். 

  பெண்மணிகள் வீட்டில் சுப காரியங்களை நடத்தி மகிழ்வார்கள். பொருள் வரவும் சிறக்கும். மாணவமணிகள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். படிப்பில் போதிய அக்கறை காட்டவும்.

  பரிகாரம்: அம்பாளை வணங்கி வரவும். குலதெய்வ வழிபாடு மிகவும் அவசியம்.

  அனுகூலமான தினங்கள்: 21, 24. 

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}
  தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

  ஆற்றல் அதிகரிக்கும். உங்கள் செயல்கள் திட்டமிட்டபடியே நடந்தேறும்.  உற்றார் உறவினர்களால் மகிழ்ச்சி கூடும். இடையூறுகள் மற்றும் குழப்பங்கள் ஏற்பட்டாலும் இறுதியில் முடிவு சாதகமாகவே அமையும்.

  உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு குறைவாகவே கிடைக்கும். அதனால் அலுவலகத்தில் வீண் வாக்கு வாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். வியாபாரிகளுக்கு இது லாபகரமான காலம். கொடுக்கல் வாங்கல் சீராகவே இருக்கும். புதிய முதலிடுகளில் சற்று கவனத்துடன் ஆலோசித்து ஈடுபடவும். 

  விவசாயிகள் கடுமையாக உழைத்தால்தான் முன்னேற்றத்தைக் காணலாம். பழைய வழக்குகள் மன வேதனையை தரும். 

  அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தின் பார்வையிலிருந்து ஒதுங்கி கொடுக்கப்பட்ட வேலைகளைச் செவ்வனே செய்து முடிக்கவும். கலைத்துறையினருக்குத் திறமைகள் பளிச்சிடும் காலமிது. 

  பெண்மணிகளுக்கு கணவர் வழி உறவினர்களிடையே இருந்து வந்த சலசலப்புகள் குறையும். மாணவமணிகள் புதிய நண்பர்களிடம் எச்சரிக்கையாகப் பழகவும். விளையாட்டிலும் கவனத்துடன் ஈடுபடவும்.

  பரிகாரம்: ஆஞ்சநேயரையும் நவக்கிரகத்தில் உள்ள சனிபகவானையும் தீபமேற்றி வணங்கவும். 

  அனுகூலமான தினங்கள்: 22, 24. 

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}

  மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

  பயணங்களால் நன்மைகள் அடைவீர்கள். திட்டமிட்ட காரியங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் செய்து முடிப்பீர்கள். தெய்வ வழிபாட்டில் மனதைச் செலுத்துவீர்கள். குடும்பத்தில் ஏற்படும் சண்டைச் சச்சரவுகளைக் கண்டு  கொள்ளாதீர்கள். 

  உத்தியோகஸ்தர்களுக்கு பிரச்னைகள் குறையும். மேலதிகாரிகள் மனக்கசப்புகள் நீங்கி, கரிசனத்துடன் நடந்து கொள்வர். வியாபாரிகள் பொறுமையுடன் நடந்து கொண்டு வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். மறதி காரணமாக வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. விவசாயிகள் பிற்காலத் திட்டங்களுக்கு செலவு செய்ய நேரிடும். 

  அரசியல்வாதிகள் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு பெயரைக் கெடுத்துக்கொள்ள வேண்டாம். திட்டமிட்ட வேலைகளில் கண்ணும் கருத்துமாகச் செயல்படவும். தொண்டர்களின் நலனில் அக்கறை செலுத்தவும். கலைத்துறையினர் வெற்றிமேல் வெற்றி காண்பீர்கள். சக கலைஞர்களால் பாராட்டப் பெறுவீர்கள். 

  பெண்மணிகள் அனைவரிடமும் சற்று கவனத்துடன் பழகவும். மாணவமணிகள் அதிக மதிப்பெண்கள் பெறுவார்கள். கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வார்கள்.

  பரிகாரம்: "நமசிவாய' என்ற ஐந்தெழுத்தை தியானம் செய்து வரவும். 

  அனுகூலமான தினங்கள்: 20, 23. 

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}
  கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

  பெரிய திருப்பங்கள் எதுவும் எதிர்பார்க்க முடியாது. செய்யும் செயல்களை நேர்த்தியாக முடிக்க முயற்சி செய்யுங்கள். பொருளாதார நிலையில் முன்னேற்றம் தென்படும்.  உடல் ஆரோக்கியமும் சிறிது கவனிக்கப்பட வேண்டிவரும்.

  உத்தியோகஸ்தர்களின் செயல்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும். கவனத்துடனேயே வேலைகளைச் செய்து வரவும். வியாபாரிகள் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும். உங்களின் முயற்சிகள் யாவும் பெரும்பாலும் வெற்றியடையும். விவசாயிகள் உற்பத்திப் பொருள்களில் நல்ல லாபத்தைக் காண்பார்கள். கால்நடைகளால் நன்மை அடைவார்கள். 

  அரசியல்வாதிகள் அரசு அதிகாரிகளின் அலட்சியப் போக்குக்கு ஆளாவீர்கள். பொறுப்புடன் நடந்து கொண்டு காரியங்களைச் சாதித்துக் கொள்ளவும். கலைத்துறையினர் முக்கிய முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்கவும். தீர ஆலோசித்தபிறகே புதிய ஒப்பந்தங்களைச் செய்யவும். 

  பெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை கூடும். குழந்தைகளால் சந்தோஷம் கிடைக்கும். மாணவமணிகள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். விரும்பிய பாடப் பிரிவுகளில் சேர்ந்து மகிழ்வார்கள்.

  பரிகாரம்: ஸ்ரீரங்கம் ரங்கநாதரையும் வெள்ளிக் கிழமைகளில் மகாலட்சுமியையும் வணங்கவும். 

  அனுகூலமான தினங்கள்: 23, 24. 

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}
  மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

  வெற்றிகள் எளிதாக உங்களைத் தேடிவரும். குடும்பத்தினரிடம் அன்பும் பாசமும் அதிகரிக்கும். புதிய வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் நன்றாக அமையும். தெய்வ அனுகூலம் இருக்கும்.

  உத்தியோகஸ்தர்களுக்கு உயர் அதிகாரிகள் பாதுகாப்பு அரணாக அமைவார்கள். பணவரவும் சிறப்பாக இருக்கும். வியாபாரிகளுக்கு சமூகத்தில் புதிய அந்தஸ்து கிடைக்கும். புதிய யுக்திகளைப் புகுத்தி, வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். விவசாயிகள் முயற்சிகளைத் தீவிரப்படுத்தி வருமானத்தைப் பெருக்கவும். கால்நடைகளை கவனத்துடன் பராமரிக்கவும். 

  அரசியல்வாதிகளிடம் கட்சி மேலிடம் புதிய பொறுப்புகளை வழங்கும். அவற்றை நேர்த்தியாக முடித்துக் கொடுத்து பாராட்டு, பதவி உயர்வு பெறுவீர்கள். கலைத்துறையினர் திறமைக்குத் தகுந்த மதிப்பும் அங்கீகாரமும் பெறுவீர்கள். 

  பெண்மணிகள் குடும்பத்தில் நிம்மதியைக் காண்பார்கள். சேமிப்புகளைப் பெருக்குவதில் கவனம் செலுத்துவார்கள். மாணவமணிகள் தங்கள் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றிக் கொள்வார்கள்.

  பரிகாரம்: நந்தீஸ்வரருக்கு அருகம்புல் மாலை சாற்றி பிரதோஷ வழிபாடு செய்யவும். 

  அனுகூலமான தினங்கள்: 21, 25. 

  சந்திராஷ்டமம்:  19, 20.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai