சித்ரா பெளர்ணமி: புஷ்பப் பல்லக்குகளில் சுவாமி வீதி உலா

சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு வேலூரில் வியாழக்கிழமை இரவு 9 புஷ்பப் பல்லக்குகளில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
வேலூரில் திருவீதி உலா வந்த புஷ்பப் பல்லக்குகள்.
வேலூரில் திருவீதி உலா வந்த புஷ்பப் பல்லக்குகள்.


சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு வேலூரில் வியாழக்கிழமை இரவு 9 புஷ்பப் பல்லக்குகளில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
ஆண்டுதோறும் இந்நாளில் புஷ்பப் பல்லக்கு வீதி உலா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு சித்ரா பெளர்ணமி நாளான வியாழக்கிழமை இரவு வேலூரில் 9 புஷ்பப் பல்லக்குகள் பவனி வந்தன. 
கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயில் சார்பில் அகிலாண்டேஸ்வரி சமேத ஜலகண்டேஸ்வரர் புஷ்பப் பல்லக்கு, அரிசி மண்டி சார்பில்  தோட்டப்பாளையம் தாரகேஸ்வரர் கோயில் புஷ்பப் பல்லக்கு, வாணியர் வீதி சார்பில் சித்திபுத்தி சமேத சுந்தர விநாயகர் கோயில் புஷ்பப் பல்லக்கு, பூ மார்க்கெட் தொழிலாளர்கள் சார்பில் வேம்புலி அம்மன் கோயில் புஷ்பப் பல்லக்கு, மோட்டார் வாகன அனைத்து பணிமனை உரிமையாளர்கள் சங்கம் சார்பில் விஷ்ணு துர்க்கையம்மன் புஷ்பப் பல்லக்கு, சிறுபுஷ்ப வியாபாரிகள் சங்கம் சார்பில் லட்சுமி நாராயணா புஷ்பப் பல்லக்கு, சலவன்பேட்டை ஆணை குளத்தம்மன் கோயில் புஷ்பப் பல்லக்கு, கோட்டை அகத்தீஸ்வரர் கோயில் புஷ்பப் பல்லக்கு ஆகிய 9 பல்லக்குகள் அமைக்கப்பட்டு வீதி உலா நடைபெற்றது.
இந்த 9 புஷ்பப் பல்லக்குகளும் ஒன்றன்பின் ஒன்றாக லாங்கு பஜாரில் இருந்து புறப்பட்டு கமிஷனரி பஜார், பில்டர்பெட் சாலை வழியாக கோட்டை நுழைவு வாயில் முன் உள்ள காந்தி சிலை அருகே நிறுத்தப்பட்டன. 
அங்கு புஷ்பப் பல்லக்குகளில் எழுந்தருளிய சுவாமிகளுக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. இந்த வழிபாட்டில், வேலூர் மாவட்டம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். 
பெரிய ஆஞ்சநேயர் கோயிலில்...
ஆம்பூர் பெரிய ஆஞ்சநேயர் கோயிலில் சித்ரா பௌர்ணமி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கணபதி பூஜையுடன் விழா தொடங்கியது. 
விழாவையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. உற்சவர் பிரகார உலா நடைபெற்றது. ஸ்ரீலட்சுமி நாராயண ஹோமம், ஸ்ரீ சுதர்ஸன ஹோமம், சத்ய நாராயணா பூஜை உள்ளிட்டவை நடைபெற்றன. 
முன்னாள் திருப்பணிக் குழுத் தலைவர் கிஷண்லால், அனுமன் பக்த சபையைச் சேர்ந்த ஸ்ரீதர், தினேஷ், ஹரிகேசவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தன்வந்திரி பீடத்தில்...
வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு, 468 சித்தர்கள் யாகம், மஹா அபிஷேகம், மகேஸ்வர பூஜை, திருமணத் தடை நீக்கும் சுயம்வர கலாபார்வதி ஹோமம், சந்தான கோபால யாகம், சத்ய நாராயண ஹோமம், அன்ன யக்ஞம், சிவ பஞ்சாட்சர யாகம் ஆகியவை வெள்ளிக்கிழமை நடைபெற்றன. 
பீடத்தின் நிறுவனரான முரளிதர சுவாமிகளின் பெற்றோரும் குருவுமான கோமளவல்லி - ஸ்ரீநிவாசனுக்கு 23-ஆம் ஆண்டு குரு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து அன்ன யக்ஞத்துடன் ஏகரூப ராகு - கேதுவிற்கு நடைபெற்ற அன்னாபிஷேகத்தில் பத்துக்கும் மேற்பட்ட  சிவாச்சாரியார்கள், 500-க்கும் மேற்பட்ட சாதுக்கள், ஆன்மிக அருளாளர்கள் மற்றும் ஜோதிடர்கள் பங்கேற்றனர்.


தன்வந்திரி பீடத்தில் 468 சித்தர்களுக்கு நடந்த சிறப்புப் பூஜையில் பங்கேற்ற பக்தர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com