Enable Javscript for better performance
இந்த ராசிக்காரர்கள் சமயோசித புத்தியுடன் செயல்படுபவர்களாமே! அப்படியா?- Dinamani

சுடச்சுட

    

    இந்த ராசிக்காரர்கள் சமயோசித புத்தியுடன் செயல்படுபவர்களாமே!அப்படியா?

    Published on : 24th April 2019 04:40 PM  |   அ+அ அ-   |    |  

    thinking

     

    விகாரி ஆண்டில் ரிஷப ராசிக்காரர்கள் எந்த மாதிரியான பலனை பெறப்போகிறார்கள் என்பதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம். 

    புரட்டாசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் பல துறைகளில் நுழைந்து வெற்றி பெறுவீர்கள். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்களுக்கு தேவையான உதவிகள் செய்வீர்கள். செய்தொழிலில் படிப்படியாக முன்னேறி இலக்குகளை எட்டி விடுவீர்கள். அனைத்து விஷயங்களிலும் உஷாராகவே இருப்பீர்கள். பொருளாதாரத்தில் இருந்த சரிவுகள் அகன்று நிலைமை சீரடைந்துவிடும்.

    உடலாரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். யோகா, பிராணாயாமம் செய்வீர்கள். எண்ணங்கள் அனைத்தும் பூர்த்தியாகும். உற்றாரும் மற்றவர்களும் போற்றத்தகுந்த உயர்ந்த நிலையில் நின்று மகிழ்ச்சி கடலில் மிதப்பீர்கள். திருமணமாகாதவர்களுக்குத் திருமணமும் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியமும் உண்டாகும்.

    சிலர் புதிய வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்வார்கள். தெய்வ காரியங்களிலும் மத சம்பந்தமான சடங்குகளிலும் தர்ம காரியங்களிலும் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். அரசாங்க ஆதரவு நன்றாக கிடைக்கும். இக்கட்டான தருணங்களில் சமயோசித புத்தியைப் பயன்படுத்தி தப்பித்துக் கொள்வீர்கள். சமுதாயத்தில் உயர்ந்தவர்களின் ஆதரவும் நட்பும் கிடைக்கும்.

    ஐப்பசி மாதம் முதல் ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் செய்தொழில் எந்தவித சிக்கலுமின்றி நன்றாகவே நடக்கும். போதிய அளவுக்கு பணநடமாட்டம் வந்து கொண்டிருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பெற்றோர்களின் ஆதரவும் நிரம்பக் கிடைக்கும். கடினமான விஷயங்களிலும் மனஉறுதியுடன் தாக்குப்பிடித்து வெற்றி பெற்று விடுவீர்கள்.

    அரசாங்க ஆதரவும் அரசியல்வாதிகளின் பக்கபலமும் தொடர்ந்து நீடிக்கும். முடியாத காரியமென்று எதுவும் இருக்காது என்ற அளவுக்கு காரியமாற்றுவீர்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். இல்லத்தில் திருமணம் மூலம் புதிய உறவினர்களும் கிடைப்பார்கள். உறவினர்கள் மத்தியில் உங்கள் அந்தஸ்து உயரும். உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்களால் சிறு தொல்லைகள் ஏற்படலாம்.

    சில பொருள்கள் திருட்டுப் போகலாம். அதனால் கவனம் தேவை. பழைய காலத்தில் அரிய சந்தர்ப்பங்களைக் கோட்டை விட்ட நீங்கள் புதிய சந்தர்ப்பங்களைப் பெறுவீர்கள். எதிரிகளையும் போட்டியாளர்களையும் அரவணைத்துச் செல்வீர்கள். பழைய வழக்கு விவகாரங்களில் விட்டுக்கொடுத்து சமரசமாகச் சென்று முடித்துக் கொண்டுவிடும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.

    உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பளு குறையும். மேலதிகாரிகளை சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். உங்கள் வேலைகளை முன்கூட்டியே திட்டமிட்டுச் செய்தால் குழப்பங்களிலிருந்து தப்பிக்கலாம். பொருளாதார நிலைமை மேம்படும். பேச்சில் வேகம் வேண்டாம். சிலருக்கு விரும்பிய இடமாற்றங்களும் கிடைக்கும். வியாபாரிகள் பழைய காலத்தை விட வியாபாரத்தில் வளர்ச்சியைக் காண்பார்கள். திறமையை வளர்த்துக்கொள்வீர்கள்.

    புதிய முதலீடுகளைச் செய்வீர்கள். கொடுக்கல் வாங்கல்களில் சிறப்புகள் உண்டாகும். வியாபாரத்தில் ஏற்பட்ட வழக்குகள் சாதகமாகும். கூட்டுத்தொழிலில் இருப்பவர்கள் கூட்டாளிகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவும். விவசாயிகள் ஆதாயங்கள் பெற கடினமாக உழைக்க வேண்டி வரும். சந்தையில் அதிக போட்டிகளைச் சந்திக்க நேரிடும். கால்நடைகளாலும் பால் வியாபாரத்தினாலும் பலன் அடைவீர்கள்.

    அரசியல்வாதிகள் சிறப்புகளைப் பெறுவார்கள். தொண்டர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். முயற்சிகள் அனைத்தும் பலன் தரும். சமூகத்தில் மதிப்பு மரியாதைகள் உயரும். உட்கட்சிப் பூசலில் மாட்டிக்கொள்ள வேண்டாம். மாற்றுக் கட்சியினரிடமும் அனுசரித்து நடந்துகொள்ளவும். கலைத்துறையினருக்கு புதிய லாபங்கள் கிடைக்கும். அதன் மூலம் பெயரும் புகழும் பெறுவீர்கள். துறையில் உயர்ந்தவர்களின் நட்பு கிடைக்கும். சமுதாயப் பணிசெய்து உங்கள் பெயரை மேலும் உயர்த்திக் கொள்வீர்கள்.

    பெண்மணிகள் புதிய ஆடை அணிமணிகளை வாங்குவீர்கள். குடும்பத்தில் பிரிந்து இருந்தவர்கள் இணையும் வாய்ப்பு உண்டாகும். இல்லத்தில் இருந்த பிரச்னைகள் அகலும். உற்றார் உறவினர்கள் உங்கள் காரியங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் அந்த பாக்கியத்தைப் பெறும் காலகட்டமிது.

    மாணவமணிகள் தினமும் நன்றாகப் படித்து தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண்களை அள்ளுவார்கள். பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் பேச்சைக் கேட்டு நடப்பீர்கள். எளிமையான உடற்பயிற்சிகளை செய்வது நல்லது.

    பரிகாரம்

    ரிஷப ராசிக்காரர்கள் கோளறு பதிகம் படித்து சிவபெருமானையும் விநாயகர் அகவல் படித்து விநாயகரையும் வழிபடவும்.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    ->
    flipboard facebook twitter whatsapp