விழுப்புரம் ஸ்ரீஜெயமுத்து மாரியம்மன் கோயிலில் 53-ம் ஆண்டு ஆடிப் பெருவிழா

விழுப்புரம், திண்டிவனம் நகரம் ஜெயபுரத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்து அருள்பாலிக்கும் அருள்மிகு..
விழுப்புரம் ஸ்ரீஜெயமுத்து மாரியம்மன் கோயிலில் 53-ம் ஆண்டு ஆடிப் பெருவிழா

விழுப்புரம், திண்டிவனம் நகரம் ஜெயபுரத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்து அருள்பாலிக்கும் அருள்மிகு அன்னை ஸ்ரீஜெயமுத்து மாரியம்மனுக்கு 53-ம் ஆண்டு ஆடிப் பெருவிழா நடைபெறுகிறது. 

ஆடி மாதம் 21-ம் தேதி (06.08.2019) செவ்வாய்க்கிழமை காலை 8.00 மணியளவில் அன்னை ஸ்ரீ ஜெயமுத்து மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்து, பூங்கரக ஊர்வலமும் சாகை வார்த்தலும் நடைபெற உள்ளது. 

ஆடி பெருவிழாவையொட்டி ஆகஸ்ட் 4 முதல் கொடியேற்றத்துடன் தொடங்கி ஆகஸ்ட் 11-ம் தேதி வரை உற்சவம் நிகழ்கிறது. 

அன்று இரவு 8.30 மணியளவில் இராமேஸ்வரத்தில் அருள்பாலித்து வரும் ஸ்ரீ பர்வதவர்த்தினி அம்மன் உடனுறை ராமநாதசுவாமி மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப ரதத்தில் வான வேடிக்கையுடன் திருவீதி உலா காட்சி நடைபெற உள்ளது. 

பக்தகோடிகள் தங்களால் இயன்ற பொருளுதவி அளித்து அம்மனின் அருளுக்குப் பாத்திரராகுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com