திருமலை: ஜூலை மாத உண்டியல் காணிக்கை ரூ. 106 கோடி

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஜூலை மாத உண்டியல் காணிக்கை ரூ. 106 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஜூலை மாத உண்டியல் காணிக்கை ரூ. 106 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலை தேவஸ்தானத்தின் முதல் பெரிய வருமானம் உண்டியல் காணிக்கை மூலம் கிடைத்து வருகிறது. இந்த உண்டியல் வருமானத்தை வங்கியில் முதலீடு செய்து, அதன் மூலம் கிடைக்கும் வட்டியை வைத்து தேவஸ்தானம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.  
இந்நிலையில், ஜூலை மாதம் உண்டியல் வருவாய் ரூ. 106.2 கோடி வசூலானது. இந்தாண்டு 3-ஆவது முறையாக உண்டியல் வருவாய் ரூ. 100 கோடியைக் கடந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் ரூ. 105.8 கோடி, ஜூன் மாதம் ரூ. 100 கோடி வசூலானது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com