திருப்பதி லட்டுக்கு  வயது 302

திருமலை ஏழுமலையானுக்கு நிவேதனம் செய்யப்படும் லட்டின் வயது 302 என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருப்பதி லட்டுக்கு  வயது 302


திருமலை ஏழுமலையானுக்கு நிவேதனம் செய்யப்படும் லட்டின் வயது 302 என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலை ஏழுமலையானுக்கு மிகவும் விசேஷ நிவேதனமாக படைக்கப்படுவது லட்டு. திருப்பதி ஏழுமலையான் என்றாலோ அல்லது திருமலை என்றாலோ பக்தர்களின் மனதில் தோன்றுவது இந்த லட்டு பிரசாதம். இந்த லட்டு தயாரிக்க ஒரு திட்டம் (அளவு) கையாளப்பட்டு வருகிறது. கடலை மாவு, சர்க்கரை, நெய், ஏலக்காய், பச்சை கற்பூரம், பாதாம், முந்திரி, கற்கண்டு, உலர் திராட்சை, குங்குமப்பூ உள்ளிட்டவை சில குறிப்பிட்ட அளவுகோலில் அதற்கென உள்ள தயாரிப்பு முறைப்படி சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது. தினசரி திருமலையில் 2 முதல் 3 லட்சம் லட்டு பிரசாதங்கள் தயாரிக்கப்படுகின்றன. விசேஷ உற்சவ தினங்களில் 5  லட்சம் லட்டுகள் நிலுவையில் வைக்கப்படும். 
ஏழுமலையானுக்கு இந்த லட்டு நிவேதனம் ஆக. 2-ஆம் தேதி 1715-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதற்கு முன் திருமலை ஏழுமலையானுக்கு வடை பிரசாதம் முக்கிய நிவேதனமாக படைக்கப்பட்டு வந்தது. 302 ஆண்டுகளாக திருமலையில் முக்கியப் பிரசாதமாக லட்டு விளங்கி வருகிறது. மேலும் புரோக்கதம் லட்டு, ஆஸ்தானம் லட்டு, கல்யாண உற்சவ லட்டு என 3 வகையான லட்டு பிரசாதங்கள் தயாரிக்கப்படுகின்றன. 2009-ஆம் ஆண்டு திருமலை லட்டு பிரசாதத்துக்கு புவிசார் குறியீடும் வழங்கப்பட்டது. லட்டு பிரசாத விற்பனை மூலம் தேவஸ்தானத்துக்கு மாதம் ரூ. 1 கோடி வருமானமாக கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com