சுடச்சுட

  

  ஆகஸ்ட் 16-ம் தேதியுடன் நிறைவுபெறுகிறது அத்திவரதர் தரிசனம்: மாவட்ட ஆட்சியர் தகவல்

  Published on : 08th August 2019 01:27 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  IMG-20190802-WA0013

   

  அத்திவரதரை தரிசனம் செய்வதற்கான அவகாசம் வரும் 16-ம் தேதி இரவுடன் நிறைவு பெறுவதாக மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

  காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் அருள்பாலித்து வரும் அத்திவரதர் கடந்த 31 நாட்கள் சயன கோலத்திலும், 8 நாட்களாக நின்ற கோலத்திலும் காட்சியளித்து வருகிறார். விழாவின் 39-வது நாளான இன்று பச்சை பட்டு உடுத்தி, மலர் கிரீடத்துடன் பக்தர்களுக்குக் காட்சியளித்து வருகிறார். 

  பெருமாளை தரிசிக்க தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் காஞ்சிபுரத்தில் குவிந்து வருவதால் மக்கள் வெள்ளத்தால் காஞ்சிபுரம் மாநகரமே ஸ்தம்பித்துள்ளது. இந்நிலையில், கடந்த 38 நாட்களில் சுமார் 70.25 லட்சம் பக்தர்கள் தரிசித்து சென்றுள்ளனர். அத்திவரதரை நேற்று மட்டும் சுமார் 3.70 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். 

  அத்திவரதரை தரிசனம் செய்வதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 16-ம் தேதி இரவுடன் நிறைவு பெறுகிறது. மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்பட்சத்தில் ஆகஸ்ட் 17-ம் தேதி விடியற்காலையுடன் தரிசனம் நிறைவு பெறுகிறது. அதற்குப்பின் கிழக்கு கோபுரவாயில் மூடப்படும். கடைசி நாளான 17-ம் தேதி ஆகம விதிப்படி அத்திவரதருக்கு சடங்குகள் நடைபெற உள்ளது. பின்னர், அத்திவரதரை அனந்தசரஸ் திருக்குளத்தில் வைக்க உள்ளார். எனவே 16-ம் தேதி இரவுடன் தரிசனம் நிறைவு பெறுகிறது.

  மேலும், சுகாதார பணியாளர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியில் கூடுதல் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கூடுதலாக 25 மினி பேருந்துக்கள் விடப்பட்டுள்ளது என்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai