மருத்துவச் சிகிச்சை பெற உகந்த கால நேரங்கள் இதுதான்!

ஒரு மனிதனுக்கு மருத்துவம் என்பது எப்பொழுதாவது ஒருமுறை வரும் நோயின் பாதிப்புக்கும் அல்லது
மருத்துவச் சிகிச்சை பெற உகந்த கால நேரங்கள் இதுதான்!

ஒரு மனிதனுக்கு மருத்துவம் என்பது எப்பொழுதாவது ஒருமுறை வரும் நோயின் பாதிப்புக்கும் அல்லது  நீண்ட நாள் வியாதியில் பாதிக்கப்பட்டவருக்குச் சிகிச்சை பெற்றுவருவார்கள். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதற்கு ஏற்ப 16 பேறுகளில் முக்கியமான ஒன்று உடல் ஆரோக்கியம். இந்த குறிக்கோளை அடைய என்ன முயற்சி செய்யலாம் என்று பார்க்க வேண்டும். இந்த கலியுகத்தில் யாரைப்பார்த்தாலும் நாள்பட வியாதியில் பாதிக்கப்பட்டவர்கள் தான் அதிகமாக உள்ளனர்.

நாள்பட்ட வியாதிகளுக்கு மருத்துவர் சொல்லும்படி அந்தந்த நாட்களில் மருந்து உட்கொள்ளவும். இந்த ஆலோசனை பின்பற்றுவது சரிவராது. வருமுன் காப்போம் என்றதுபோல நம்முடைய தசா புத்திகள், அஷ்டமாதிபதியால் நோயின் தாக்கம் அதிகமாகும் என்ற பொழுது சிறிது மதிகொண்டு உடலின் எதிர்ப்புச்சக்தியை அதிகப்படுத்திக் கொள்ளவேண்டும் மற்றும் உடற்பயிற்சி அல்லது யோகா என்று உடலைத் தான் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளவேண்டும். 

சித்த, அலோபதி மற்றும் பாட்டி மருத்துவம், அனைத்திலும் நாம் மருந்து உட்கொள்ள சில விதிமுறைகள் உள்ளன. மருந்து உட்கொள்ள மட்டும் அல்ல மருந்து செய்வதற்கும் அக்காலங்களில் நாள், கிழமை, ஓரை, நல்ல நாள், திதி, நேரம், நேத்திர ஜீவன் மற்றும் திதி சூன்யம் என்று வரைமுறை வைத்துள்ளனர். அவர்கள் சொல்லும் நாட்களில் மருந்து உட்கொண்டால் சீக்கிரம் நோயின் தாக்கம் குறையும் என்று சித்தர் கூற்று. 

மருந்து சிகிச்சைக்கு உகந்த காலங்கள் எவை எவை?

பிறந்த நாள் அதாவது ஜென்ம நட்சத்திரம், சந்திராஷ்டமம் நாட்களில் மருந்து உட்கொள்ளக் கூடாது. கூடுமானவரை அன்று மருத்துவம் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். 

நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவம் பார்க்க ஏற்ற நாளாக ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறையில் வரும் ஞாயிறு, செவ்வாய், வியாழன் ஆகிய மூன்று நாட்களில் மருத்துவம் செய்து கொள்ளலாம். அதற்கு எடுத்துக்காட்டாக விருந்தும் மருந்தும் மூன்று நாள் என்ற பழமொழி சூட்சம பொருள் என்னவெனில் கிழமைகளில் செவ்வாய், வியாழன், ஞாயிறு இந்த மூன்று நாட்கள் நோய் மருந்துண்ண ஆரம்பித்தால் அவர்களுக்கு விரைவில் குணமாகும் என்பதுதான். முதன்முதலாக நோய் குணமாக மருந்து உண்ண சூரிய நாளான ஞாயிற்றுக்கிழமை மிகச்சிறந்தது என்று சித்தர் கூற்று.

தீதறு நட்சத்திரங்கள்

"ஆதிரை பரணி கார்த்தி ஆயிலிய முப்புரம் கேட்டை

தீதுறு விசாகஞ் சோதி சித்திரை மகம் மீராறும்

மாதனங்கொண்டார் தாரார் வழிந

டைப்பட்டார் மீளார்

பாய்தனில் படுத்தார் தேறார் பாம்பின் வாய் தேரை தானே.'

தீதறு நட்சத்திரங்களான  பரணி, கார்த்திகை, திருவாதிரை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி, கேட்டை, விசாகம், சித்திரை, சுவாதி, மகம் ஆகிய நட்சத்திரங்களில் வியாதி ஏற்பட்டால் குணமாவது கடினம் (மற்றும் இந்த பாடலில் இந்த நட்சத்திரங்களில் யாருக்காவது கடன்  கொடுத்தால் திரும்பிவராது  மற்றும் பயணம் செய்தவர்கள் திரும்பார்)

ஓரை: இதன்படி வியாழக்கிமை சுக்கிர ஓரையில் அல்லது வெள்ளிக்கிழமை குரு ஓரையில் மருந்து சாப்பிட, நாள்பட்ட வியாதிகள் விரைவில் குணமாகும். செவ்வாய் ஹோரையில் நிச்சயம் அறுவை சிகிச்சை செய்யக்கூடாது.

தாரப்பலன் அற்ற நாட்கள் மருத்துவம் சிகிச்சை ஆரம்பிக்கக் கூடாது

தாரப்பலன் என்று ஜோதிடர்கள் கணக்கிட்டுச் சொல்லுவார்கள். யோகா திசை இல்லாத நேரங்களில் பிறந்த நட்சத்திரத்திலிருந்து நல்ல தார பலன்களான 2, 4, 6, 8, 9வது நட்சத்திர தினத்தன்று மருத்துவ சிகிச்சை கொள்ளலாம். மற்ற தீய தாரா பலன்களான 3, 5 அல்லது 7-வது நட்சத்திர தினங்களில் உடல்நலம் பாதிக்கபடும் அந்தகாலங்களில் துரிதமாக மருத்துவ சிகிச்சை பெற வேண்டும்.

சித்தர்கள் வியாதிகளுக்கு மருந்துண்ண ஒரு காலநேரம் நாழிகை என்று ஒவ்வொரு நட்சத்திற்கும் உண்டு அவற்றை அமிர்த நாழிகையை என்று வரையறுக்கப்பட்டுள்ளது.  அந்த கணக்குப்படி சரியான அமிர்த நாழிகையில் நோய்க்கான மருந்தை உண்பதால் பூரண குணமடைய முடியும் என்பது கவிகாளிதாசர் எழுதிய உத்திரகாலாமிர்தத்தில் சொல்லப்பட்டிருக்கும்.

சரி, நோய் வந்துவிட்டது அதற்கு நம் முன்னோர்கள் சாதாரண நோய் அதாவது காய்ச்சல் போன்ற உபாதைகள் பூரம், பூராடம், பூரட்டாதி, ஆயில்யம், கேட்டை, திருவாதிரை, சுவாதி ஆகிய நட்சத்திர நாட்களில் வந்தால் மட்டும் மருத்துவச் சிகிச்சை தேவை என்கின்றனர். 

நீண்ட நாள் நோய்வாய்ப்பட்ட ஒருவருக்குச் சிகிச்சையை ஆரம்பிக்க ஏற்ற நட்சத்திரங்கள் 

அஸ்வினி, ரோகிணி, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், உத்திரம், உத்திராடம், உத்திரட்டாதி, அஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், திருவோணம், அவிட்டம், சதயம், ரேவதி ஆகியன என்கின்றனர் 

உக்ர யோகங்கள்

ஒருவர் சிகிச்சை பலனின்றி அல்லது நோய் முற்றிலும் குணமடையலாம் மோசமான உடல்நல பாதிப்பினால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு உக்ரயோகம் வரும் நாட்களில் சிகிச்சை எடுத்துக்கொண்டாலும் தீரா நோய் நிச்சயம் குணமாகும் என்று “காலப்ரகாசிகை எனும் ஜோதிடநூலில் கூறப்படுகிறது. 

உக்ர யோகங்கள் என்பன

1.ரோகிணி நட்சத்திரம் மற்றும் + திருதியை அல்லது அஷ்டமி 2.உத்திர நட்சத்திரம் மற்றும் + சதுர்த்தி/ அஷ்டமி 3.திருவோணம் நட்சத்திரம் மற்றும் + பஞ்சமி திதி 4. மிருகசீரிடம் நட்சத்திரம் மற்றும் + சஷ்டி திதி 5.ரேவதி நட்சத்திரம் மற்றும் + சப்தமி;  6.கிருத்திகை  நட்சத்திரம் மற்றும் + நவமி 7.பூசம் நட்சத்திரம் மற்றும் +  தசமி 8. அனுஷம் நட்சத்திரம் மற்றும் + திருதியை /துவாதசி திதி 9.கிருத்திகை அல்லது மகம் நட்சத்திரம் மற்றும் + ஏகாதசி 10.ரோகிணி நட்சத்திரம் மற்றும் + தசமி 11. உத்திரம் நட்சத்திரம் மற்றும் + திரயோதசி திதி போன்றவை "உக்ர யோகங்கள்" என்பர்.

நவக்கிரகங்களில் முக்கிய சுப கிரகமாக விளங்கும் தேவ குரு, அசுரர் குரு சுக்கிரன், பார்வை பலம் பெற்றால் நோய் சீக்கிரம் குணமாகும். ஜோதிடத்தில் குரு, சுக்கிர சேர்க்கைக்கு சஞ்சீவினி யோகம் என்பர். சுக்கிரனுக்கு இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் அமிர்த சஞ்சீவினி மந்திரம் நன்றா அறிந்தவர். ஒருவருடைய ஜாதகத்தில் சஞ்சீவினி யோகம் இருந்தால், அவருக்கு என்ன வியாதி வந்தாலும் எப்படியாவது குணமாகிவிடுவார்.

அறுவை சிகிச்சைக்கு நாள் குறிக்க, அவரவர் ஜாதகத்திற்கு ஏற்ப திதி, நட்சத்திரத்தைப் பார்த்து முடிவு செய்ய வேண்டும். குறிப்பாக லக்னாதிபதி, ராசிநாதன் இவர்கள் இருவரின் மறையவோ, பாவிகளோடோ, அஸ்தங்கம் ஆகாமல் சுபர் பார்க்கும் பார்வை கொண்டு அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவம் எடுத்துக் கொள்ளலாம். தேய்பிறை நாட்களில் சிகிச்சை மேற்கொண்டால் நோய் வளராமல் தேய்ந்துவிடும் என்கிறது "காக்கையர் நாடி" என்ற நூல். ஒருவரின் நோயின் தாக்கம் அளவு விகிதாச்சாரம் அதிகமாக இருந்தால் தினமும் வரும் நல்ல ஓரையில் ஆரம்பிக்கலாம். அதற்கும் நேரம் இல்லையென்றால் நோய்கள் எல்லாம் நீக்கும் தலைமை மருத்துவரான தன்வந்திரி பகவானின் மூல மந்திரத்தை ஜபித்து மருத்துவச் சிகிச்சையை ஆரம்பிக்கலாம்.

ஓம் நமோபகவதே வாசு தேவாய

தன்வந்தரயே அம்ருத கலச ஹஸ்தாய

சர்வ ஆமய விநாசநாய த்ருலோக்யநாதாய

மகா விஷ்ணவே நம

பெண் ஒருவர் பிரசவ வேதனையில் இருக்கும்பொழுது மகப்பேறு மருத்துவரான தாயுமானவரை ஜபித்து ஸ்லோகம் இது. நாமும் இதைத் தினமும் சொல்லி நோய்களைக் களைவோம். 

- ஜோதிட சிரோன்மணி தேவி 

தொலைபேசி : 8939115647

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com