வி,ஐ.பி பாஸ் மூலம் அத்திவரதரை தரிசிக்கச் செல்பவர்களுக்கு மட்டும்!

மேற்கு கோபுர நுழைவுவாயிலில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் வி.ஐ.பி மற்றும்
வி,ஐ.பி பாஸ் மூலம் அத்திவரதரை தரிசிக்கச் செல்பவர்களுக்கு மட்டும்!

மேற்கு கோபுர நுழைவுவாயிலில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் வி.ஐ.பி மற்றும் வி.வி.ஐ.பி., பாஸ் மூலம் வருபவர்களுக்கு, அத்திவரதர் தரிசனம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். 

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் அத்திவரதர் பெருவிழா ஜூலை முதல் தேதியிலிருந்து ஆகஸ்ட் 17-ம் தேதி வரை நடைபெறுகிறது. கடந்த 31 நாட்களாக சயன கோலத்திலும், 8 நாட்களாக நின்ற கோலத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். விழாவின் 39-வது நாளான இன்று பச்சை பட்டு உடுத்தி, மல்லிகைப்பூ மலர் மாலைகள் சூடி, மலர் கிரீடத்துடன் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். 

பெருமாளை தரிசிக்க தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் காஞ்சிபுரத்தில் குவிந்து வருவதால் மக்கள் வெள்ளத்தால் காஞ்சிபுரம் மாநகரமே ஸ்தம்பித்துள்ளது. வி.ஐ.பி மற்றும் வி.வி.ஐ.பிக்கள் தரிசிக்கச் செல்லும் வழியில் நேற்று திடீரென மின்கசிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மேற்கு கோபுரத்தைச் சுற்றியிருக்கும் பகுதியில்  மின்தடை ஏற்பட்டது. எனவே, மேற்கு ராஜகோபுரம் வழியே மேம்பாலம் வடிவில் பாதை அமைக்கப்படும் பணி நடைபெற்று வருகிறது. 

கடந்த 3 நாள்களாகவே மேற்கு கோபுரம் அருகே இருக்கும் வி.ஐ.பி தரிசன நுழைவாயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே உள்ளது. நேற்று மூன்றாயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்ளே செல்ல முயன்றதால் கோயிலுக்கு உள்ளிருந்து வெளியையும், வெளியிலிருந்து உள்ளேயும் நுழையமுடியாத நிலை ஏற்பட்டது. அப்போது திடீரென இரும்புக் கம்பிகளுக்கிடையே மின்சாரம் பாய்ந்த காரணத்தால் பக்தர்கள் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள ஓடத் தொடங்கினர். இதனால், அப்பகுதியில் தள்ளு, முள்ளு ஏற்பட்டு பலருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில், மேற்கு கோபுர நுழைவுவாயிலில் மேம்பாலம் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருவதால் வி.ஐ.பி மற்றும் வி.வி.ஐ.பி தரிசனம் 2 மணி நேரம் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், அத்திவரதர் தரிசனம் இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில் காஞ்சிபுரத்தில் அதிகளவு பக்தர்கள் கூடுவார்கள் என்பதால் அப்பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு ஆகஸ்ட் 13, 14, 16 என மொத்தம் 6 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com