Enable Javscript for better performance
இந்த வாரம் எந்த ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்? வாங்க பார்க்கலாம்..!- Dinamani

சுடச்சுட

  

  இந்த வாரம் எந்த ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்? வாங்க பார்க்கலாம்..!

  Published on : 09th August 2019 04:30 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  astrolo1

   

  12 ராசிக்காரர்களுக்குமான இந்த வார (ஆகஸ்ட் 9 - ஆகஸ்ட் 15) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். 

  மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

  நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். சமூகத்தில் மதிப்பு மரியாதை உயரும். மருத்துவச் செலவுகளும் உண்டாகலாம். சிலருக்கு கடன் வாங்கவும் நேரிடலாம். குடும்பத்தினர் ஆதரவுக் கரம் நீட்டுவர்.

  உத்தியோகஸ்தர்கள் அனைத்து வேலைகளையும் திருப்திகரமாக முடிப்பார்கள். வருமானமும் படிப்படியாக உயரும். வியாபாரிகள் வியாபாரத்தில் மந்த நிலையை காண்பார்கள். கொடுக்கல் வாங்கல்களில் சில பின்னடைவுகள் ஏற்படலாம். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். அரசாங்க மானியங்கள் கிடைக்கும். சிலர் புதிய  உபகரணங்கள், கால்நடைகளை வாங்குவார்கள்.

  அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்திடம் பொறுமையோடு நடந்து கொள்ளவும். தகவல் அனுப்பும்போது கவனம் தேவை. கலைத்துறையினர் திறமைக்குத் தகுந்த புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். பணவரவுக்கும் குறைவு இராது. 

  பெண்மணிகளுக்கு கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் நன்மதிப்பு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். மாணவமணிகள் பெற்றோர் மற்றும் சகோதரர்களால் நன்மை அடைவார்கள். படிப்பில் அதிக அக்கறை செலுத்தவும்.

  பரிகாரம்: திங்களன்று விநாயகரையும் ராகு காலத்தில் துர்க்கையையும் வழிபடவும்.

  அனுகூலமான தினங்கள்: 11, 12.

  சந்திராஷ்டமம்: 9, 10.

  {pagination-pagination}
  ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

  பொருளாதாரத்தில் முன்னேற்றம் தென்படும். அனைத்து வேலைகளையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். தன்னம்பிக்கை சற்று குறையும். மனோபலத்தைப் பெருக்கிக் கொள்ளவும். உடன்பிறந்தோர் வழியில் நிலவிய மனக்கசப்பு நீங்கும்.

  உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக வேலைகளில் சிறிது ஈடுபாடு  குறையும். பணவரவுக்குக் குறைவு இராது. வியாபாரிகளைத் தேடி வாடிக்கையாளர்கள் வருவார்கள். வரவு செலவுகளை கவனத்துடன் செய்வது நல்லது. விவசாயிகள் விளைச்சல் அதிகமாகி லாபம் பெறுவார்கள். தோட்டம் தோப்பு உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் நன்றாக முடியும். 

  அரசியல்வாதிகள் அனுகூலமான திருப்பங்களை எதிர்பார்க்க முடியாது. மேலிட அவமதிப்புகளைச் சந்திக்க நேரிடும். கலைத்துறையினர் சக கலைஞர்களின் ஒத்துழைப்புடனும் ரசிகர்களின் ஆதரவுடன் திட்டங்களைத் தீட்டுவீர்கள். 

  பெண்மணிகள் கணவரிடம் அனுசரித்துச் செல்லவும். குடும்பத்தினரிடம் உங்களுக்கு மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மாணவமணிகள் செயல்படாத குற்றத்திற்காக ஆசிரியரிடம் தண்டனை வாங்க நேரிடும்.

  பரிகாரம்: மகாவிஷ்ணுவை மலர்களால் அர்ச்சித்து, விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லி வழிபடவும். அனுகூலமான தினங்கள்: 9, 10. சந்திராஷ்டமம்: 11, 12.

  {pagination-pagination}

  மிதுனம் (மிருகசீரிஷம்3-ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

  திட்டமிட்ட வேலைகளை விரைவாக குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே முடித்து விடுவீர்கள். பூர்வீகச் சொத்து விஷயமாக இருந்து வந்த தடங்கல்கள் நீங்கும். குடும்பத்தில் மங்கள நிகழ்ச்சிகள் நடக்கும். குடும்பத்தினரிடம் சுமுக நிலையை உண்டாக்கவும்.

  உத்தியோகஸ்தர்களுக்கு பணவரவுடன் பதவி உயர்வும் கிட்டும். சக ஊழியர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி இணக்கம் ஏற்படும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்களில் அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். புதிய முதலீடுகளைச் செய்யலாம். விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். புதிய குத்தகைகள் பெறுவார்கள். கால்நடைகளாலும் வருமானம் கிடைக்கும். 

  அரசியல்வாதிகளுக்கு சங்கடங்கள் குறையும். மேலிடத்தின் ஆதரவைப் பெறுவீர்கள். புதிய பொறுப்புகளும் வரும்.  கலைத்துறையினர் கடுமையாக உழைத்து நற்பலனை அடைவார்கள். கை நழுவிப்போன ஒப்பந்தங்கள் தேடி வரும். 

  பெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். யாரிடமும் மனம் திறந்து பேச வேண்டாம். மாணவமணிகள் முயற்சிக்குத் தகுந்தபடி கல்வியில் முன்னேறுவீர்கள். 

  பரிகாரம்: திங்களன்று விநாயகரையும் திருப்பதி வேங்கடநாதனையும் வழிபடவும். 

  அனுகூலமான தினங்கள்: 9, 12. 

  சந்திராஷ்டமம்:  13, 14, 15.

  {pagination-pagination}
  கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

  குடும்பத்தில் சந்தோஷம் நிறையும். முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். பொருளாதாரத்தில் சிறிது குறைவு இருந்தாலும் முக்கியமான தேவைகள் பூர்த்தியடைந்து விடும். பேசும் நேரத்தில் கவனமாக இருக்கவும்.

  உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். அலுவலக வேலைகள் அனைத்தும் திட்டமிட்டபடி குறித்த காலத்திற்குள் நடந்தேறும்.

  வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பல இடங்களிலும் விற்பனையை பெருக்குவீர்கள். விவசாயிகள் நீர்பாசன வசதிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் பலனளிக்கும். கால்நடைகளால் அனுகூலமும் லாபமும் உண்டாகும்.

  அரசியல்வாதிகள் வேலைகளை ஒழுங்காகச் செய்யவும். புதிய முயற்சிகளைத் தள்ளிப்போடவும். கட்சி மேலிடத்தின் கரிசனப் பார்வை கிடைக்க வாய்ப்பில்லை. 

  கலைத்துறையினருக்குத் திறமைக்குத் தகுந்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். பயணங்களால் அனுகூலங்கள் இல்லை. 

  பெண்மணிகள் கணவரை அனுசரித்துச் செல்லவும். வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். மாணவமணிகள் கல்வியில் முன்னேற அதிகமாக உழைக்கவும். விளையாட்டு நேரத்தில் கவனமாக இருக்கவும்.

  பரிகாரம்: ஆஞ்சநேயரையும் நவகிரகத்தில் உள்ள சனிபகவானையும் வழிபடவும். 

  அனுகூலமான தினங்கள்: 10, 12.

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}

  சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

  தொடர்ந்து வந்த கவலைகள் நீங்கும். எடுத்த காரியங்களில் படிப்படியான வெற்றிகள் உண்டாகும். குடும்பத்தில் பணவரவுக்கும் குறைவு இராது. எதிர்பாராத உதவிகளைப் பெறுவீர்கள். பெற்றோர் வழியில் குழப்பங்கள் நீங்கும். 

  உத்தியோகஸ்தர்கள் விரும்பிய இடமாற்றமும் பதவி உயர்வும் பெறுவார்கள். சக ஊழியர்கள் உதவியாக இருப்பார்கள்.  வியாபாரிகளுக்கு கடன்கள் குறையும். கூட்டாளிகள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். விவசாயிகள் வயல் வரப்புச் சண்டைகளில் முடிவைக் காண்பார்கள். நீர்வரத்து அதிகமாக இருப்பதால் உற்பத்தியும் அதிகரிக்கும்.

  அரசியல்வாதிகளின் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். தொண்டர்களிடம் எதிர்பார்த்த ஆதரவுகளைப் பெற முடியாது. கலைத்துறையினர் புகழும் பாராட்டும் பெறுவார்கள். சக கலைஞர்களும் உங்கள் முன்னேற்றத்திற்கு உதவுவார்கள். 

  பெண்மணிகளின் உடல்நலம் பாதிக்கப்படும். கணவரிடம் சுமாரான உறவே நீடிக்கும். தெய்வ பலத்தைப் பெருக்கிக் கொண்டால் பிரச்னைகளைத் தவிர்க்கலாம். மாணவமணிகள் தேவையில்லாத வீண் பிரச்னைகளில் சிக்கிக் கொள்வார்கள்.  

  பரிகாரம்: ஞாயிறன்று சூரிய வழிபாடு செய்து ஆத்ம பலத்தைப் பெருக்கவும். 

  அனுகூலமான தினங்கள்: 11, 13.

  சந்திராஷ்டமம்: இல்லை.  

  {pagination-pagination}
  கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

  திட்டமிட்டபடியே செயல்கள் அனைத்தும் நடைபெறும். பொருளாதார வளம் பெருகும். வீடு, மனை, வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். வழக்கு விஷயங்கள் அனைத்தும் சாதகமாகவே முடியும். மதிப்பு, மரியாதை கூடும்.

  உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகள் பாராட்டும் வகையில் நடந்து கொள்வார்கள். பணவரவும் இரட்டிப்பாக அமையும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்களில் அனுகூலமான திருப்பங்கள் உண்டு. தைரியமாகப் புதிய முதலீடுகளைச் செய்யலாம். 

  விவசாயிகளுக்கு கொள் முதல் வியாபாரங்களில் சில இடையூறுகள் ஏற்படும். செலவில்லா மாற்றுப் பயிர்களைப் பயிரிட்டு வருமானம் பெருக்கலாம்.

  அரசியல்வாதிகளுக்கு சமூகத்தில் அந்தஸ்தான பதவிகள் கிடைக்கும். தொண்டர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து மகிழ்வீர்கள். கலைத்துறையினருக்கு திருப்திகரமான ஒப்பந்தங்களால் நல்ல வருமானம் கிடைக்கும். 

  பெண்மணிகளுக்கு குடும்பத்தில் அந்தஸ்து உயரும். கணவருடனான ஒற்றுமை சிறப்பாக இருக்கும். மாணவமணிகள் கல்வியிலும் விளையாட்டிலும் நல்ல பலனை அடைவார்கள். 

  பரிகாரம்: சனிக்கிழமைகளில் சனீஸ்வரருக்கு தீபம் ஏற்றி வழிபடவும். 

  அனுகூலமான தினங்கள்: 12, 13. 

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}

  துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

  தாய்வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த ஆதரவுகளைப் பெறுவீர்கள். ஆற்றல் பெருகும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் அன்பும் பாசமும் அதிகரிக்கும். எடுத்த காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். வாகன யோகம் உண்டாகும்.

  உத்தியோகஸ்தர்களின் ஆற்றல் அதிகரிக்கும். மேலதிகாரிகளின் மூலம் சில சஞ்சலங்கள் ஏற்படும். தைரியத்துடன் எதையும் சந்திக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். 

  வியாபாரிகளுக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய முதலீடுகளில் ஈடுபட்டு லாபமடைவீர்கள். விவசாயிகள் முயற்சிகளைத் தீவிரப்படுத்தி வருமானத்தைப் பெருக்கவும். கால்நடைகளை கவனத்துடன் பராமரிக்கவும்.

  அரசியல்வாதிகளிடம் கட்சிமேலிடம் கருணையுடன் நடந்துகொள்ளும். புதிய பொறுப்புகளில் நேர்த்தியாகச் செயல்பட்டு பதவி உயர்வும் பாராட்டும் பெறுவீர்கள். 

  கலைத்துறையினர் திறமைக்குத் தகுந்த மதிப்பும் அங்கீகாரமும் பெறுவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் தேடி வரும். 

  பெண்மணிகளுக்கு கணவரிடம் அன்பும் பாசமும் அதிகரிக்கும். உஷ்ண ஆதிக்க நோய்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. மாணவமணிகளுக்கு படிப்பில் நாட்டம் அதிகரிக்கும். விளையாட்டிலும் வெற்றி பெறுவீர்கள்.

  பரிகாரம்: செவ்வாயன்று கந்தபெருமானை கந்தசஷ்டி படித்து வழிபடவும். 

  அனுகூலமான தினங்கள்: 12, 14. 

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}
  விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

  தர்ம சிந்தனைகள் மேலோங்கும். திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். உடல்நலம் சீராகும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பயணங்களைச் செய்ய வேண்டாம்.

  உத்தியோகஸ்தர்கள் கடமை தவறாமல் உழைக்க முயற்சிக்கவும். வேலைகளைப் பிறகு செய்து கொள்ளலாம் என்ற எண்ணத்தைத் தவிர்க்கவும். வியாபாரிகள் அரசாங்க விஷயங்களில் எடுக்கும் முயற்சிகளில் தடை ஏற்பட்டாலும் இறுதியில் வெற்றி பெறுவார்கள். விவசாயிகள் புதிய சாதனங்கள் வாங்கி விவசாயத்தைப் பெருக்குவார்கள். நீர்ப்பாசன வசதியையும் பெறுவார்கள்.

  அரசியல்வாதிகளின் பொதுச் சேவையில் அனுகூலமான திருப்பங்கள் ஏற்படும். அதனால் கட்சி மேலிடத்தின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு அதிக முயற்சிகளுக்குப் பிறகே வெற்றிகள் சேரும்.

  பெண்மணிகள் குடும்பத்தில் நடக்கும் சுப நிகழ்ச்சிகளால் சந்தோஷம் அடைவார்கள். மாணவமணிகள் கல்வியில் கவனம் செலுத்தவும். விளையாட்டுகளில் ஈடுபடுவதைக் குறைத்துக் கொள்ளவும். 

  பரிகாரம்: ஞாயிறன்று சிவபெருமானையும் சூரியபகவானையும் வழிபடவும். 

  அனுகூலமான தினங்கள்: 9, 14. 

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}
  தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

  பொருளாதாரத்தில் அபிவிருத்தி ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். திட்டமிட்ட செயல்களில் வெற்றி பெறுவீர்கள். மதிப்பு மரியாதை அதிகரிக்கும். ஆன்மிகத்தில் ஈடுபடுவீர்கள். எவருக்கும் முன் ஜாமீன் போடுவது கூடாது.

  உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். விரும்பிய இடமாற்றம் கிடைக்க வாய்ப்பு இல்லை. வியாபாரிகளைத் தேடி வரவேண்டிய பணம் வரும். கூடுதலாக உழைத்து, மன உறுதியுடன் செயல்பட்டு வருமானத்தைப் பெருக்குவீர்கள். விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். புதிய நிலம் குத்தகைக்கு வந்து சேரும். 

  அரசியல்வாதிகளுக்கு பொதுச் சேவையில் அனுகூலமான திருப்பங்கள் ஏற்படும். எதிரிகளால் தொல்லைகள் இராது. கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் சுமாராகவே கிடைக்கும். திறமைகளை வளர்த்துக் கொள்ளவும். 

  பெண்மணிகள் கணவரிடம் ஒற்றுமையோடு பழகுவார்கள். காரணமில்லாமல் மனதில் சற்று அமைதி குறையும். மாணவமணிகள் கல்வியில் கவனம் செலுத்தவும். விளையாட்டுகளில் ஈடுபடுவதைக் குறைத்துக் கொள்ளவும். 

  பரிகாரம்: சனியன்று சனீஸ்வரபகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடவும். 

  அனுகூலமான தினங்கள்: 10, 14. 

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}
  மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

  மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி உங்களைத் தேடி வரும். சிலருக்கு எதிர்பாராத பயணங்கள் செய்ய நேரிடும். இடையூறுகளை மிகவும் சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். உடலில் சிறு உபாதை தோன்றி பின்னர் சரியாகும்.

  உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளில் முன்கூட்டியே செயல்படவும். மேலதிகாரிகளிடம் ஒத்துழைப்புடன் நடந்து கொள்ளவும். வியாபாரிகள் கவனமாக இருந்தால் எதிர்பார்த்த முன்னேற்றத்தை அடையலாம். விவசாயிகள் வருமானத்தைக் கூறுபோட நினைக்கும் இடைத்தரகர்களிடம் கவனமாக இருக்கவும். 

  அரசியல்வாதிகளுக்கு சில எதிர்ப்புகள் தோன்றினாலும் கவுரவத்திற்கு அதனால் பிரச்னை இல்லை.  கட்சித் தலைமையின் கவனத்தைக் கவர முயற்சி செய்யுங்கள். 
  கலைத்துறையினருக்கு அதிக முயற்சிகளுக்குப்பிறகே புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெண்மணிகளுக்கு கணவரிடம் வேறுபாடுகள் நீங்கும். பணவரவும் சீராகும். வீண் செலவுகளையும் அநாவசிய சண்டைச் சச்சரவுகளையும் தவிர்க்கவும். 

  மாணவமணிகள் மதிப்பெண்களைப் பெறுவதற்கு கடினமாக உழைக்க வேண்டி வரும்.

  பரிகாரம்: ராகு காலத்தில் துர்க்கையையும் வெள்ளி, செவ்வாயன்று அம்பாளையும் வழிபடவும். 

  அனுகூலமான தினங்கள்: 12, 15. 

  சந்திராஷ்டமம்: இல்லை.     

  {pagination-pagination}
  கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

  நினைத்த காரியங்கள் அனைத்தும் சிறு தடைக்குப் பிறகு நிறைவேறும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். அலைச்சல்களும் அதிகரிக்கும். சிறு உடல் உபாதைகள் உண்டாகலாம். ஆன்மிக சிந்தனைகள் உங்களைப் பலப்படுத்தும்.

  உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு பெறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். திட்டமிட்ட வேலைகளில் சிறிது தாமதத்திற்குப்பிறகு வெற்றி கிடைக்கும். வியாபாரிகள் எதிலும் கருத்துடன் செயல்பட்டால் வரவில் சங்கடம் இராது. கணக்கு வழக்குகளில் கவனம் தேவை. விவசாயிகளுக்கு மகசூல் மந்தமாக இருக்கும். புதிதாக எதையும் குத்தகைக்கு எடுக்க வேண்டாம். 

  அரசியல்வாதிகளின் அந்தஸ்தில் சிறிது குறைபாடுகள் உண்டாகும். கவனமுடன் செயல்படவும். தொண்டர்களின் பாராமுகத்தால் கோபமுறாமல் கடமைகளை ஆற்றி வரவும். 
  கலைத்துறையினருக்கு கடின முயற்சிகளுக்குப்பிறகே வெற்றி கிடைக்கும். பெண்மணிகள் புத்தாடை அணிகலன்கள் வாங்கி மகிழ்வீர்கள். கணவரிடம் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். மாணவமணிகள் மதிப்பெண்கள் பெறுவதற்கு கடினமாக உழைக்கவும்.

  பரிகாரம்:  திங்களன்று விநாயகருக்கு அருகம்புல், வெள்ளருக்கு மாலை கொண்டு வழிபடவும். அனுகூலமான தினங்கள்: 14, 15. சந்திராஷ்டமம்: இல்லை.   

  {pagination-pagination}
  மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

  குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்களின் அலட்சியப் போக்கு மனதிற்கு வேதனையை கொடுக்கும். உடன்பிறந்தோர் வழியில் கருத்து வேறுபாடுகள் வரலாம். வருமானத்திற்கு எந்தக் குறைவும் இருக்காது. ஆற்றல் அதிகரிக்கும்.

  உத்தியோகஸ்தர்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். மேலதிகாரிகளால் எந்தக் கெடுபிடியும் ஏற்படாது. வியாபாரிகளுக்கு அலைச்சலும் டென்சனும் படிப்படியாகக் குறையும். கடன் வாங்கி வியாபாரத்தை விரிவு படுத்தலாம். விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும். பொருளாதாரத்தில் எந்தத் தொய்வும் உண்டாகாது. 

  அரசியல்வாதிகள் யோசித்து எடுக்கும் முடிவுகள் பெரும் பலன்களைக் கொடுக்கும். அவசரமாகச் செய்யும் கட்சி வேலைகளில் இடர்கள் வரும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். தீவிர முயற்சியால் ரசிகர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.

  பெண்மணிகளுக்கு பணவரவில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். இல்லத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். மாணவமணிகள் உள்ளரங்கு விளையாட்டில் ஈடுபடுவது நல்லது. ஞாபக சக்தி வளர விடியற்காலையில் கல்வி பயிற்சிகளை மேற்கொள்ளவும்.

  பரிகாரம்: ஞாயிறன்று பெருமாள் தாயாரை வணங்கி வரவும்.

  அனுகூலமான தினங்கள்: 11, 15. 

  சந்திராஷ்டமம்: இல்லை. 

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai