இதுவும் சனாதன தர்மம் தான்..!

ஈமச் சடங்குகள் எல்லாம் பொருள் செரிந்தவையாகும். இறந்த தந்தைக்கு முன் மகன் தோளில்..
இதுவும் சனாதன தர்மம் தான்..!

ஈமச் சடங்குகள் எல்லாம் பொருள் செரிந்தவையாகும். இறந்த தந்தைக்கு முன் மகன் தோளில் நீர் சுமந்த குடத்தை வைத்துக்கொள்வான். நாவிதனார் தண்ணீர் குடத்துடன் மூன்று முறை சுற்றச் செய்து மூன்று ஓட்டை இட்டு, 'அப்படியே உடைத்துத் திரும்பிப் பார்க்காமல் போ' என்பார்.
 
தண்ணீர் குடம் என்பது சாரீரம். அதி நிறைந்த தண்ணீர் ஜீவான்மா. 

முதலில் இட்ட ஓட்டை தனெஷனை (பணத்தாசை), 
இரண்டவது இட்ட ஓட்டை தாரெஷனை (மனைவி மேல் வைத்த ஆசை) , 
மூன்றாவது இட்ட ஓட்டை மக்கள் மேல் வைத்த ஆசை. 

இந்த மூன்று ஆசைகளாகிய ஓட்டைகளின் வழி சரிரத்திலிருந்த ஆத்ம சைதன்யமாகிய உயிர் சிந்திவிட்டது. இந்த ஆசாபாசத்தை திரும்பி பாராமல் நீ அறநெறியில் செல்வாயாக என்ற குறிப்பை நவிதனார் காட்டுகிறார். நம் முன்னோர்கள் செய்த சடங்குகள் அர்த்தமற்றவை என்று தல்லாமல் நுனித்து உணர்வது மதியுடமை ஆகும்.

இந்த ஆன்மாக்களுக்குச் செய்யும் வழிபாடுகள் அவர்களுக்கு நாம் செய்யும் நன்றிக்கடனாகும்.

"தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றுங்
கைம்புலத்தார் ரோம்பல் தலை"

 - திருக்குறள், (அறத்துப்பால்-43)

சமய தத்துவங்கள் ஐநூறு நூலிலிருந்து..

நமது தர்மம் பல உண்மையான அர்த்தங்களை உள்ளடக்கியது இது மதம் அல்ல ஒரு அற்புதமான வாழ்க்கை முறை… இதுவே சனாதன தர்மம்…

ஆன்மீக வாழ்க்கைக்கு இந்து சமய விழிப்புணர்வு அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்...!

- கோவை பாலகிருஷ்ணன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com