சுடச்சுட

    
    tirumali

    பவித்ர மாலைகளை சுமந்து வந்த ஜீயர்கள், அர்ச்சகர்கள்.

    திருமலை ஏழுமலையான் கோயிலில் நடந்து வரும் வருடாந்திர பவித்ரோற்வசத்தின் 2-ஆம் நாளான திங்கள்கிழமை உற்சவமூர்த்திகளுக்கு பவித்ரமாலைகள் சமர்ப்பிக்கப்பட்டன. 
    திருமலையில் ஞாயிற்றுக்கிழமை முதல் வருடாந்திர பவித்ரோற்சவம் தொடங்கி நடந்து வருகிறது. கோயிலில் ஏற்பட்ட தோஷங்களைக் களைவதற்காக இந்த உற்சவம் நடத்தப்பட்டு வருகிறது. அதன் 2-ஆம் நாளான திங்கள்கிழமை காலை ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராய் மலையப்பஸ்வாமி சம்பங்கி பிரகாரத்தில் எழுந்தருளச் செய்யப்பட்டனர். அவர்களுக்கு பால், தயிர், தேன், பழரசம், இளநீர், மஞ்சள், சந்தனம் செஞ்சந்தனம் உள்ளிட்ட திருமஞ்சனப் பொருள்களை திருமலை ஜீயர்கள் தங்கள் கைகளால் எடுத்துத்தர, அவர்களுக்கு தேவஸ்தான அர்ச்சகர்கள் அபிஷேகம் நடத்தினர். 
    அதன்பின் ஞாயிற்றுக்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்ட பல வண்ண பட்டு நூல்களால் ஆன பவித்ரங்கள்(மாலைகள்) உற்சவமூர்த்திகள், மூலவர், கோயிலில் உள்ள விக்ரகங்கள், கொடிமரம், விமான வெங்கடேஸ்வரஸ்வாமி உள்ளிட்டோருக்கு அணிவிக்கப்பட்டன. அதன்பின் மாலை உற்சவமூர்த்திகள் பவித்ர மாலைகளை அணிந்தபடி, மாடவீதியில் தன் உபய நாச்சியார்களுடன் வலம் வந்தார். இந்நிகழ்ச்சியில், தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதை முன்னிட்டு சில ஆர்ஜித சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்தது. இதைத்தொடர்ந்து செவ்வாய்க்கிழமையுடன் மகாபூர்ணாஹூதியுடன் பவித்ரோற்சவம் நிறைவு பெற உள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai