சுடச்சுட

  

  ஆடி பௌர்ணமி: திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் இதுதான்!

  Published on : 14th August 2019 01:04 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Girivalam

   

  ஆடி மாதப் பௌர்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம் எது என்பதை அருணாசலேஸ்வரர் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

  சிவனின் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் திகழ்கிறது. இங்குள்ள 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையை பௌர்ணமி நாள்களில் வலம் வந்து அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை தரிசித்தால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம். 

  இந்த நிலையில், ஆடி மாதப் பௌர்ணமி புதன் கிழமை (ஆகஸ்ட் 14)  மாலை 4.32 மணிக்குத் தொடங்கி, வியாழக்கிழமை (ஆகஸ்ட் 15) மாலை 6.11 மணிக்கு முடிவடைகிறது. 

  எனவே, பக்தர்கள் இந்த நேரத்தில் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரர் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai