அத்திவரதர் பெருவிழா: 1979-2019 ஆண்டுகளில் வியப்புக்குரிய ஒற்றுமை

காஞ்சிபுரம்  வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடந்து வரும் அத்திவரதர் பெருவிழாவில் 1979 மற்றும் 2019 -ஆம் ஆண்டுகளில் பெருமாள் திருக்குளத்திலிருந்து எழுந்தருளிய நாளும், மீண்டும்
அனந்தசரஸ் திருக்குளத்தில் பெருமாள் வைக்கப்பட்டுள்ள நடவாவிக் கிணற்றில்  கடந்த 1979-  ஆம்  ஆண்டு வைக்கப்பட்டிருந்த கல்வெட்டு.
அனந்தசரஸ் திருக்குளத்தில் பெருமாள் வைக்கப்பட்டுள்ள நடவாவிக் கிணற்றில்  கடந்த 1979-  ஆம்  ஆண்டு வைக்கப்பட்டிருந்த கல்வெட்டு.

காஞ்சிபுரம்  வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடந்து வரும் அத்திவரதர் பெருவிழாவில் 1979 மற்றும் 2019 -ஆம் ஆண்டுகளில் பெருமாள் திருக்குளத்திலிருந்து எழுந்தருளிய நாளும், மீண்டும் திருக்குளத்துக்குத் திரும்பிய நாளும் ஒரே மாதிரி அமைந்திருப்பது வியப்புக்குரிய ஒற்றுமையாகும்.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் அத்திவரதர் பெருவிழா 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடந்து வருகிறது. இதற்கு  முன்பு 1979 -ஆம் ஆண்டு பெருமாள் திருக்குளத்திலிருந்து 2.7.1979 திங்கள்கிழமை வெளியில் வந்து 48 நாள்களுக்குப் பிறகு  18.8.1979 -ஆம் தேதி சனிக்கிழமை  மீண்டும் திருக்குளத்திற்கு எழுந்தருளியிருக்கிறார்.

40 ஆண்டுகளுக்கு  முன்பு பெருமாள் திருக்குளத்தில் எழுந்தருளியதற்கான கல்வெட்டு ஒன்றும் பெருமாள் வைக்கப்பட்டுள்ள நடவாவிக் கிணற்றில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு பெருமாள் திருக்குளத்திலிருந்து வெளியில் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்த ஜூலை 1- ஆம் தேதி திங்கள்கிழமையாகும். மீண்டும் ஆக. 17-இல் (சனிக்கிழமை) திருக்குளத்திற்கு எழுந்தருளியுள்ளார்.

1979-ஆம் ஆண்டும், 2019-ஆம் ஆண்டும் திங்கள்கிழமை திருக்குளத்திலிருந்து   வெளியில்  வந்து  சனிக்கிழமை  மீண்டும் சயனக்கோலத்தில்  திருக்குளத்துக்கு  எழுந்தருளியுள்ளார். 40 ஆண்டுகளுக்குப்பின் இரு நாள்களும் ஒன்றாக வருவது வியப்புக்குரிய இறை ஒற்றுமையே!

1977-க்குப் பதிலாக 1979-இல் அத்திவரதர் தரிசனம்: கடந்த 1937-ஆம் ஆண்டு அத்திவரதர் திருக்குளத்திலிருந்து எழுந்தருளி, பக்தர்களுக்கு தரிசனம் தந்தார். அதற்குப்பிறகு 40 ஆண்டுகள் கழித்து 1977-இல்தான் திருக்குளத்திலிருந்து அத்திவரதர் வெளியில் கொண்டுவரப்பட வேண்டும்.

ஆனால், அப்போது கோயில் திருப்பணிகள் நடந்து கொண்டிருந்தன. திருப்பணிகள் நடக்கும் போது விழாக்கள் எதுவும் கோயிலில் நடத்தக்கூடாது என்ற ஐதீகம் இருப்பதால் 1977-இல் அத்திவரதர் பெருவிழா நடைபெறவில்லை. அதன்பிறகு திருக்கோயில் பணிகள்  முடிந்து,  மகா சம்ப்ரோஷணம் நடந்த பிறகு இரு ஆண்டுகள் கழித்து 1979-ஆம் ஆண்டு பெருமாள் திருக்குளத்திலிருந்து வெளியில் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்துள்ளார். 

தற்போது 40 ஆண்டுகளுக்குப் பிறகு  2019 -ஆம் ஆண்டில் அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சியளித்துள்ளார். இதன் பிறகு  2059 - ஆம் ஆண்டு மீண்டும் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com