காஞ்சிபுரம் சிவன் ஸ்தலங்கள்: 2. திருக்கச்சூர் விருத்திட்ட ஈஸ்வரர் மற்றும் ஒளஷதபுரீஸ்வரர்

 காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சிவஸ்தலத்தை தொடர்ந்து நாம் இன்று திருக்கச்சூரில்..
காஞ்சிபுரம் சிவன் ஸ்தலங்கள்: 2. திருக்கச்சூர் விருத்திட்ட ஈஸ்வரர் மற்றும் ஒளஷதபுரீஸ்வரர்

  
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சிவஸ்தலத்தை தொடர்ந்து நாம் இன்று திருக்கச்சூரில் குடியிருக்கும் திருமுறைத்தலங்களில் ஒன்றான தொண்டை நாட்டுத் தலத்தில் சிவபெருமானை ஸ்ரீகச்சபேஸ்வரர் என்கிற விருத்திட்ட ஈஸ்வரர், ஸ்ரீமருந்தீஸ்வரர் என்று இரு கோவில்கள் உள்ளன. 

1. முதுவாய் ஓரி கதற முதுகாட்டு
எரி கொண்டு ஆடல் முயல்வானே
மதுவார் கொன்றைப் புதுவீ சூடும்
மலையான் மகள்தன் மணவாளா
கதுவாய்த் தலையிற் பலி நீ கொள்ளக்
கண்டால் அடியார் கவலாரே
அதுவே ஆமாறு இதுவோ கச்சூர்
ஆலக் கோயில் அம்மானே.

2. கச்சு ஏர் அரவு ஒன்று அரையில் அசைத்துக்
கழலுஞ் சிலம்புங் கலிக்கப் பலிக்கு என்று
உச்சம் போதா ஊர்ஊர் திரியக்
கண்டால் அடியார் உருகாரே
இச்சை அறியோம் எங்கள் பெருமான்
ஏழேழ் பிறப்பும் எனையாள்வாய்
அச்சம் இல்லாக் கச்சூர் வடபால்
ஆலக் கோயில் அம்மானே...

                          - திருமுறை 

சுந்தராரல் இத்தலத்தில் உள்ள என்தந்தையின்  பெருமையை  பாடப்பட்ட தலம் இது. முதலில் நம் கண் தலவிருட்சத்தை தேடும், கண்ணிற்கு பிரம்மாண்டமான மக நட்சத்திரத்திற்குரிய ஆலமரம் தென்பட்டது. மகம் ஜகத்தை ஆளும் என்பதற்கு இணங்க, மக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இங்கிருக்கும் ஆலயத்திற்கு வந்து இறைவனை வணங்கி வழிபடுவது மிகவும் விசேஷமானதாகும்.

ஆலக்கோவில், கச்சூர்  - கச்சபேஸ்வரர் திருக்கோயில்

தன் அடியார் சுந்தரர் வெகு தொலைவில் இருந்து அதிக தீராத பசியுடன் களைப்புடன் தள்ளாடியபடி இங்குள்ள திருக்கச்சூர் வந்தார். அவர் பாடுபடும் நிலையை அறிந்து இறைவன் கச்சபேஸ்வரர் ஓர் அந்தணர் வடிவில் வந்து சுந்தரருக்காக தனது கையில் திருவோடு ஏந்தி பிச்சை எடுத்து சுந்தரரின் பசியைப் போக்கிய தலம் என்பதலால் சுந்தரர் "எந்த உன்கருணை என்று வியந்து" பசி நீங்கப்பெற்ற சுந்தரர் 'முதுவாயோரி' என்னும் பதிகம் பாடிப் போற்றினார். முதலில் இவரை தரிசித்த பின்புதான் மலைக்கோயிலுக்குச் செல்லவேண்டும் ஆலயத்திற்கு கோபுரமில்லாமல், கோவிலுக்கு எதிரில் இருக்கும் குளத்தில் தான் சுந்தரர் பசிகளைப்பால் படுத்திருந்த அழகிய சிற்பத்துடன் 16 கால் மண்டபம் இன்றும் இருக்கிறது. 

கச்சபேஸ்வரரை பற்றிய ஒரு தலவரலாறு உண்டு. தேவர்களும் அசுரர்களும் இணைந்து பாற்கடலைக் கடையும் போது மத்தாக விளங்கிய மந்திர மலையை தாங்கும் சக்தியைப் பெற திருமால் இவ்வாலயத்தில் சிவபெருமானை வழிபட்டார் (கச்சபம் என்றால் ஆமை) என்பதால் இவ்வூர் கச்சூர் எனும் பெயர் பெற்றது. நாராயணனின் இரண்டாவது அவதாரம் கூர்மம் (ஆமை) அவதாரம் கொண்ட மகாவிஷ்ணு பூஜித்த தலம் இது. திருமால் கூர்மாவதாரம் எடுத்தபோது இக்குளத்தை உண்டு பண்ணியதாக கூறப்படுகிறது.

திருக்கச்சூர் தலம் ஆலக்கோவில் என்ற பெயருடனும் அழைக்கப்படுகிறது. ஆனால் தொண்டை நாட்டிலுள்ள பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் அமிர்த தியாகராஜர் சந்நிதி உள்ள கோவில், அதனால் இந்த ஆலக்கோவில் தியாகராஜசுவாமி திருக்கோவில் என்ற பெயருடனும் அழைக்கப்படுகிறது. மண்டபத்தில் உள்ள தெற்கு வாயில் நான்கு திருக்கரங்களுடன் நின்ற நிலையில் அம்பாள் அஞ்சனாட்சியின் சந்நிதியும் மற்றும் கிழக்கு நோக்கிய சந்நிதியில் இறைவன் கச்சபேஸ்வரர் காட்சி தருகிறார். இந்த ஈஸ்வரனை விருந்திட்ட ஈஸ்வரர், விருந்திட்ட வரதர் என்றழைப்பர். இவளை மைவிழி அம்மன் என்றழைப்பர்கள். கோவிலின் ஆகம விதிப்படி கிழக்கு வெளிப் பிரகாரத்தில் கொடிமரம், நந்தி, பலிபீடம், பைரவர், மற்றும் தியாகராஜர் சந்நிதி, கருவறை கோஷ்ட மூர்த்திகளாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை, நடராஜர் சந்நிதி, முருகன் மற்றும் ஈஸ்வரர் சந்நிதியும் அவருக்கு அருகே வடக்கு நோக்கிய சுந்தரர் சந்நிதியும் அமைந்துள்ளது. இங்கே சண்டேஸ்வரர் நான்கு முகத்துடன் காட்சி அளிக்கிறார்.

மலையடிவாரக் கோயில் - மருந்தீஸ்வரர் 

"மேலைவிதியே வினையின் பயனே விரவார் புரமூன்றெரிசெய்தாய்

காலையெழுந்து தொழுவார் தங்கள் கவலை களைவாய் கறைக்கண்டா

மாலைமதியே மலைமேல் மருந்தே மறவேன் அடியேன் வயல்சூழ்ந்த

ஆலைக்கழனிப் பழனக்கச்சூர் ஆலக்கோயில் அம்மானே”

                                                                                   - சுந்தரர்

திருக்கச்சூர் கோவிலின் இணைக்கோவிலான மலைக்கோவில் ஆகும், இவை ஆலக்கோவிலிருந்து சுமார் 1 KM தொலைவில் இருக்கிறார். நம் இறைவன் மலையடிவாரத்தில் மருந்தீஸ்வரர் என்றும் இறைவி அந்தகநிவாரணி என்கிற இருள்நீக்கிய அம்பிகையும். இந்த மருந்து நிலை என்கிற ஓளஷதகிரி வந்தால் திருவண்ணாமலை கிரிவலத்திற்குச் சமம். இந்தமலை நோய் தீர்க்கும் நிவாரணி எனலாம். இத்தலத்தில் கொடி மரத்தின் கீழுள்ள திருமண் திருநீற்றுத் தன்மையுடன் உள்ளது என்று கூறப்படுகிறது. இங்கு ராஜகோபுரமில்லை. இங்குள்ள சிறிய மண்டபத்தின் தூண்களில் துவாரபாலகர் உருவங்கள், இலிங்கோற்பவர், மாவடிசேவை, பட்டினத்தார், வள்ளலார், விநாயகர், தண்டபாணி, அப்பர், சம்பந்தர், சுந்தரரை நோக்கியவாறு கையில் அமுதுடன் காட்சிதரும் இறைவனின் சிற்பம், முதலிய சிற்பங்கள் உள்ளன. படிகளில் இறங்கி நீர் அருந்தும் அமைப்புடைய 'நடைபாதைக் கிணறு' உள்ளது. பக்கத்தில் நவக்கிரக சந்நிதி மற்றும் இங்குச் சுற்றிப் பார்க்கவே இயற்கை சூழலுடன் கட்சியாக உள்ளது. 

சிறப்புக்கள் மிக்க தல வரலாறு

திருக்கச்சூர் கோவிலுக்கு வரும் நோயாளிக்கு வைதீஸ்வர ஸ்வாமியாக இங்கு இருக்கும் மண்ணே மருந்தாகி மருத்துவம் பார்த்துக்கொண்டிருக்கிறார் நம் பெருமான் மருந்தீஸ்வரர். இவற்றிற்கும் ஒரு புராணக் கதை உண்டு. ஒருமுறை தேவேந்திரன்னுக்கு தீராத நோய் வந்தபொழுது அந்த நோயிக்கு எந்த மருந்தாலும் குணப்படுத்த முடியவில்லை. பிறகு நம் நாரதர் ஈசனிடம் தவம்புரிந்து கேட்குமாறு சொல்ல இந்திரனும் சர்வேஸ்வரிடம் அதற்கான தீர்வை கேட்க. இறைவனும் பூலோகத்தில் இருக்கும்  திருக்கச்சூர் சென்று அங்கிருக்கும் சஞ்சிவி மலையில் மூலிகை மருந்தை சாப்பிடுமாறு சொன்னார். அவரும் அங்கிருக்கும் சிவனை வணங்கி மூலிகை தேடினார். ஆனால் கிடைக்காததால் அங்கிருக்கும் அம்பிகையை வணங்கித் தேடும்பொழுது இருட்டில் ஒலியாக இருந்து மருந்தை கண்டுபிடிக்க உதவியதால் இங்குள்ள அம்பிகையை இருள்நீக்கி அம்பாள் என்றழைக்கப்படுகிறாள். அதனால் தான் இங்கிருந்து அருள்பாலிக்கும் மருந்தீஸ்வரனை சுற்றி நோய் தீர்க்கும் மாமருந்தாக, மண்ணே பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்த இடத்தில பௌர்ணமி, பிரதோஷ காலத்தில் இங்குகுள்ள கோவிலில் காலை மிதித்தல் நோய் நொடியின்றி நிம்மதியாக வாழலாம் என்பது ஐதீகம்.

மண் பிரசாதத்தை தினமும் உட்கொண்டால் தீராத நோயும் தீரும் ஒருபுறம் இருக்க. இங்கு இருக்கும் மூலவருக்கு தேன் அபிஷேகம் செய்து அத்தேனை பேசாத குழந்தைக்கு கொடுத்தால் குழந்தை நன்றாகப் பேச்சு வரும். அஞ்சனம் என்றால் மை போன்ற விழிகொண்டவள் என்று அர்த்தம். கண் பார்வை குறைபாடு, கண் நோய் உள்ளவர்கள் இங்குள்ள அஞ்சனாக்ஷியம்மை வணங்கினால் கண்ணால் ஏற்படும் பாதிப்பு நீங்கும்.  

இங்கு சோமவார வழிபாடும் முக்கியமாக  மருந்தீஸ்வரர் கோயிலிலும் தியாகராஜர் ஆலயத்திலும் காலையில் சிறப்பு அபிஷேகங்களும் விசேஷ பூஜை, மாதந்தோறும் வரும் பிரதோஷம் மற்றும் பௌர்ணமி வழிபாடு, தியாகராஜா விழாக்கள் சித்திரையில் நடைபெறும் விஷேசங்கள், மாசி மாதத்தில் திருவிழாக்கள், ஆடிமாதம், பௌர்ணமி நாளில் அம்பிகை வழிபாடு மிகவும் சிறப்புமிக்கது. இங்கு கிரிவலம் வருவது மிகவும் விசேஷம். மருத்துவ மலையில் கிரிவலம் வந்து இறைவனை தரிசித்து வேண்டினால், சகல காரியங்களும் தடையின்றி நடந்தேறும் என்பது ஐதீகம். மருந்தீஸ்வரர் கோயிலுக்கு வந்து மண் பிரசாதத்தைப் பெற்றுச்செல்வது வழக்கம். மூன்று பிரதோஷம் வந்து வழிபட்டால் நாம் நினைத்ததை ஈஸ்வரன் நடத்திவைப்பார்.

இவ்வாலயம் காலை 8 மணி முதல் நண்பகல் 11.30 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

தியாகராஜபுரம் - திருக்கச்சூர் ஸ்ரீமருந்தீஸ்வரர் இருப்பிடம்: காஞ்சிபுர மாவட்டம், சிங்கப்பெருமாள் கோயிலிலிருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் பாதையில் சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ள திருக்கச்சூர் ஸ்ரீதியாகராஜர் கோயில். சிங்கப்பெருமாள்கோவில் பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஆட்டோ மூலம் செல்வது நல்லது.  

போன் : +91- 44 - 2746 4325,2746 3514,2723 3384, 93811 86389

குருவே சரணம்!

- ஜோதிட சிரோன்மணி தேவி

தொலைபேசி : 8939115647

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com