சுடச்சுட

  

  கிருஷ்ணஜெயந்தியன்று கண்ணனின் பாதத்தை கோலமாக வரைகிறோம் ஏன் தெரியுமா?

  Published on : 22nd August 2019 03:18 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  footsteps

   

  நாடு முழுவதும் கிருஷ்ண ஜென்மாஷ்டமி (ஆகஸ்ட் 22)-ம் தேதி கொண்டாடப்படுகிறது. பல்வேறு மகிமையை உணர்த்திய ஸ்ரீகிருஷ்ணர் அஷ்டமி திதியில் அவதரித்தவர் என்பதால் இந்த திதியானது கோகுலாஷ்டமி என்று போற்றப்படுகிறது.

  இந்நாளில் மக்கள் வீடுகளை அலங்கரித்து கண்ணனின் பாதங்களை வரைந்து அலங்கரிப்பர். மனித வாழ்வில் பல அற்புதங்களை நிகழ்த்திய ஸ்ரீகிருஷ்ண பகவானின் சிறப்புகளை பற்றி தெரிந்து கொள்வோம்.

  நாரதமுனிவர் ஒருசமயம் ஒவ்வொரு கிருஷ்ண பக்தர்களின் வீட்டுக்கும் சென்றபோது எல்லோரின் இல்லத்திலும் கண்ணன் இருப்பதைக் கண்டு அதிசயித்தார். அதேபோல் பிருந்தாவனத்தில் ஒவ்வொரு வீட்டிலும் கிருஷ்ணர் ஆடிப் பாடினார்.

  இந்தக் காட்சியை சிவபெருமானே தரிசித்து பரவசமும் ஆனந்தமும் அடைந்தார். இப்படி ஒரே நேரத்தில் பல்லாயிரம் இடங்களில் இருக்கிறார் கிருஷ்ண பரமாத்மா.

  நான் எங்கும் இருப்பேன். எத்தனை கோடி பக்தர்கள் இருந்தாலும், அத்தனை பக்தர்களையும் பார்ப்பேன், காப்பேன் என்பதைக் குறிப்பிடவே ஒவ்வொருவர் வீட்டிலும் கிருஷ்ணஜெயந்தியன்று கிருஷ்ணதிருவடிக் கோலம் போடுகிறார்கள்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai